Published:Updated:

`சத்தியம் செய்துவிட்டுச் செல்லுங்கள்!' - அறிவாலயத்தில் கொந்தளித்த ஸ்டாலின் #VikatanExclusive

`சத்தியம் செய்துவிட்டுச் செல்லுங்கள்!' - அறிவாலயத்தில் கொந்தளித்த ஸ்டாலின் #VikatanExclusive

பூத் கமிட்டிகளை ஒழுங்காக அமைத்திருந்தால், அந்த 11 பேராவது ஓட்டுப் போட்டிருப்பார்கள். அந்த அளவுக்குக் கேவலமாக இருக்கிறது நம்முடைய கட்சி.

`சத்தியம் செய்துவிட்டுச் செல்லுங்கள்!' - அறிவாலயத்தில் கொந்தளித்த ஸ்டாலின் #VikatanExclusive

பூத் கமிட்டிகளை ஒழுங்காக அமைத்திருந்தால், அந்த 11 பேராவது ஓட்டுப் போட்டிருப்பார்கள். அந்த அளவுக்குக் கேவலமாக இருக்கிறது நம்முடைய கட்சி.

Published:Updated:
`சத்தியம் செய்துவிட்டுச் செல்லுங்கள்!' - அறிவாலயத்தில் கொந்தளித்த ஸ்டாலின் #VikatanExclusive

தி.மு.க தலைவராகப் பொறுப்பேற்றதிலிருந்தே மிகுந்த கவனத்துடன் அரசியல்ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகிறார் ஸ்டாலின். `தலைவருக்கே சமாதியில் இடம் கொடுக்க மாட்டேன் எனக் கூறிய அ.தி.மு.க-வினரோடு இனி எந்த உறவையும் யாரும் வைத்துக்கொள்ளக் கூடாது' என மா.செ-க்களை எச்சரித்திருக்கிறார் ஸ்டாலின். 

சென்னை அண்ணா அறிவாலயத்தில், கடந்த 7-ம் தேதி மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ-க்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார் ஸ்டாலின். தி.மு.க-வின் புதிய தலைவராகத் தேர்வுசெய்யப்பட்ட பிறகு நடத்தப்படும் முதல் கூட்டம் என்பதால், அவரது கருத்தை ஆவலோடு கேட்பதற்காக கட்சி நிர்வாகிகள் அமர்ந்திருந்தனர். பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் கூடிய அந்தக் கூட்டத்தில், மிகுந்த உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தார் ஸ்டாலின். அவர் பேசும்போது, `இனி வரக்கூடிய காலங்களில் அண்ணா தி.மு.க-வினருடன் எந்தவித உறவையும் வைத்துக்கொள்ளக் கூடாது. தலைவருக்கு சமாதியில் இடம்கூட கொடுக்க மாட்டேன் எனச் சொல்லும் அளவுக்கு, அவர்கள் மனசாட்சியை விற்றுவிட்டார்கள். `அவர்களோடு தொடர்பு வைத்துக்கொள்ள மாட்டோம்' என சத்தியம் செய்துவிட்டுச் செல்லுங்கள். இதையும் மீறி தொடர்பு வைத்திருப்பதைக் கண்டுபிடித்தால், அவர்கள்மீது கடும் நடவடிக்கை பாயும்' எனக் கொந்தளித்தவர், 

 திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் பணிகளை மேற்கொள்வதுகுறித்து விரிவாக விவாதித்தார். இதுகுறித்து அவர் பேசும்போது, `ஆர்.கே.நகரில் ஒவ்வொரு பூத் கமிட்டிக்கும் 11 பேர் இருந்தார்கள். ஆனால், ஒரு பூத்தில் வெறும் நான்கு ஓட்டுகள் மட்டுமே பதிவாகியுள்ளன. பூத் கமிட்டிகளை ஒழுங்காக அமைத்திருந்தால், அந்த 11 பேராவது ஓட்டுப் போட்டிருப்பார்கள். அந்த அளவுக்குக் கேவலமாக இருக்கிறது நம்முடைய கட்சி. இதையெல்லாம் சரிசெய்யத்தான், ஆய்வுக் கூட்டம் நடத்தி மூலைக்கு மூலை சரிசெய்து கொண்டிருக்கிறேன்' என்றார் கொதிப்புடன். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். ``தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட பிறகு நடந்த முதல் ஆலோசனைக் கூட்டம் என்பதால், நிர்வாகிகள் அனைவரும் அமைதியாக அமர்ந்திருந்தனர். சத்தியம் செய்துவிட்டுச் செல்லுங்கள் எனக் கொந்தளிப்போடு அவர் பேசியபோது, எந்த நிர்வாகிகளும் ஆரவாரம் செய்யவில்லை. அழகிரி பேரணியைப் பற்றியோ கனிமொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பதைப் பற்றியோ எந்தவித விவாதங்களும் நடக்கவில்லை. அவருடைய ஒரே நோக்கம், `வரக் கூடிய இடைத்தேர்தல்களில் தி.மு.க வெற்றி பெற்றால் மட்டுமே தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை அதிகரிக்க முடியும்' என நினைக்கிறார். அ.தி.மு.க எதிர்ப்பில்தான் தி.மு.க வளர்ந்து வருகிறது. அதேநேரம், இந்த ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு ஸ்டாலின் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை என்ற கோபம், அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில் உள்ளது. `ஒருவேளை ஆளும்கட்சியுடன் இணக்கமாக இருப்பதால்தான் ஆட்சியைக் கவிழ்க்க ஆர்வம் காட்டாமல் இருக்கிறார்களோ' என்ற பேச்சுக்களும் வலம் வருகின்றன. குறிப்பாக, கருணாநிதி சமாதிக்காக நடந்த சட்டப் போராட்டம் தொண்டர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதையெல்லாம் உணர்ந்துதான் ஆலோசனைக் கூட்டத்தில் கடுகடுத்தார் ஸ்டாலின்" என்றவர், 

``திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் களநிலவரம் எப்படியிருக்கிறது என்பதை ஆய்வு செய்து வருகின்றனர் கழக நிர்வாகிகள். ஆளும்கட்சியினரைவிடவும் குக்கர் டோக்கன்களை அட்வான்ஸாகக் கொடுக்கத் தொடங்கிவிட்டனர் தினகரன் தரப்பினர். ஊர் முழுக்க சுவர் விளம்பரங்களை தினகரன் கட்சி நிர்வாகிகளே ஆக்கிரமித்து வருகின்றனர். இதைக் கண்ட அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, `சுவர் விளம்பரத்தில் ஆர்வம் காட்டுங்கள். தேர்தல் பணிகளில் இன்னும் வேகம் வேண்டும்' என உள்ளூர் நிர்வாகிகளை வறுத்தெடுத்து வருகிறார். தலைவராகத் தேர்வான பிறகு, ஸ்டாலினுக்கான மிகப் பெரிய அக்னி பரீட்சையாக அமைய இருக்கின்றது இந்த இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள்" என்றார் விரிவாக. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism