Published:Updated:

“நம்பி வந்து நடுத்தெருவில் நிற்கிறோம்!” - மைத்ரேயன் பற்ற வைத்த நெருப்பு

“நம்பி வந்து நடுத்தெருவில் நிற்கிறோம்!” - மைத்ரேயன் பற்ற வைத்த நெருப்பு
பிரீமியம் ஸ்டோரி
“நம்பி வந்து நடுத்தெருவில் நிற்கிறோம்!” - மைத்ரேயன் பற்ற வைத்த நெருப்பு

“நம்பி வந்து நடுத்தெருவில் நிற்கிறோம்!” - மைத்ரேயன் பற்ற வைத்த நெருப்பு

“நம்பி வந்து நடுத்தெருவில் நிற்கிறோம்!” - மைத்ரேயன் பற்ற வைத்த நெருப்பு

“நம்பி வந்து நடுத்தெருவில் நிற்கிறோம்!” - மைத்ரேயன் பற்ற வைத்த நெருப்பு

Published:Updated:
“நம்பி வந்து நடுத்தெருவில் நிற்கிறோம்!” - மைத்ரேயன் பற்ற வைத்த நெருப்பு
பிரீமியம் ஸ்டோரி
“நம்பி வந்து நடுத்தெருவில் நிற்கிறோம்!” - மைத்ரேயன் பற்ற வைத்த நெருப்பு

‘ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் அணிகள் இணைந்து மூன்று மாதங்கள் நிறைவுற்று நான்காவது மாதம் தொடங்குகிறது. மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்?’ - மைத்ரேயன் எம்.பி., தனது முகநூல் பக்கத்தில் எழுதிய இந்தச் சிறுபதிவு அ.தி.மு.க-வில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. எதற்காக மைத்ரேயன் இப்படி ஒரு கருத்தை வெளியிட்டார்? அவருக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தோம்.

‘‘தனி அணியாகச் செயல்பட்டபோது, தொண்டர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பன்னீருக்குச் செல்வாக்கு அதிகரித்தது. எடப்பாடி பழனிசாமி பக்கம் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் இருந்தாலும், அடிமட்டத் தொண்டர்கள் பன்னீர் பக்கம் இருந்தனர். இதை எடப்பாடி பழனிசாமியும் உணராமல் இல்லை. தினகரனுடன் பிணக்கு ஏற்பட்டபோது, பன்னீரை இணைத்துக்கொள்ள வேண்டிய நெருக்கடி எடப்பாடிக்கு ஏற்பட்டது.

“நம்பி வந்து நடுத்தெருவில் நிற்கிறோம்!” - மைத்ரேயன் பற்ற வைத்த நெருப்பு

இணைப்புக்கு முன்பு, தன் ஆதரவாளர்களுடன் பன்னீர் ஆலோசனை நடத்தினார். மத்திய அரசில் அ.தி.மு.க இணைவது தொடர்பாக அப்போது பேச்சு இருந்தது. தம்பிதுரைக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்றும் சொன்னார்கள். அதேபோல, மைத்ரேயனுக்கும் மத்திய அமைச்சர் பதவியைப் பெற்றுத்தருவதாக பன்னீர் உறுதி சொன்னார். சண்முகநாதன், செம்மலை உள்ளிட்டவர்களுக்குத் தமிழக அமைச்சர் பதவியைப் பெற்றுத்தர வேண்டும் என்றெல்லாம் முடிவு செய்யப்பட்டது. அப்போது சில முக்கிய நிர்வாகிகள் தங்களுக்கு மாவட்டச் செயலாளர் பதவி வேண்டும் என்று கோரினார்கள். அதற்கு, பன்னீரும் ஓகே சொன்னார். அதேபோல் இணைப்பு நடந்தால், கீழ்மட்டத்தில் இருக்கும் நிர்வாகிகளின் பதவிகளுக்கு எந்த வகையில் உத்தரவாதம் அளிப்பது என்றும் பேசப்பட்டது. அதாவது, கட்சியைப் பன்னீரும், ஆட்சியை எடப்பாடியும் பார்த்துக்கொள்ளும் வகையில் இந்த இணைப்பு இருக்க வேண்டும் என்று பன்னீரிடம் வலியுறுத்தப்பட்டது. அதை, பன்னீரும் ஆமோதிக்கவே செய்தார்.

ஆனால், எதுவுமே நடக்கவில்லை. பன்னீருக்கு ஒருங்கிணைப்பாளர் பதவி தரப்பட்டது என்றால், எடப்பாடிக்கு இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியைத் தருவது என்று முடிவானது. இது, பன்னீருக்கு வைக்கப்பட்ட ‘செக்’காகவே பார்க்கப்பட்டது. அதேபோல், பன்னீர் அணியில் கே.பி.முனுசாமியைத் தவிர, வேறு யாருக்கும் கட்சிப் பதவி கிடைக்கவில்லை. அமைச்சரவையிலும் மாஃபா பாண்டியராஜனுக்கு மட்டும் உப்புசப்பில்லாத துறை ஒதுக்கப்பட்டது. அமைச்சர் பதவி கிடைக்காத விரக்தியில் செம்மலை எதிலும் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கியே இருக்கிறார்.

மைத்ரேயன், மனோஜ் பாண்டியன், நத்தம் விசுவநாதன் உள்ளிட்டவர்களுக்கு உரிய மரியாதை கட்சியில் தரப்படவில்லை. மாவட்டங்களில் நடைபெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்களில், எடப்பாடி அணியினருக்கே முக்கியத்துவம் தருகிறார்கள். எங்கள் அணியினரை மதிப்பதில்லை. மாவட்டச் செயலாளர்கள் பலரும் எடப்பாடியின் ஆதரவாளர்களாக இருப்பதால், எங்கள் அணியினருக்கு எதையும் செய்துகொடுப்பதில்லை. ஏன், கோட்டையில்கூட அமைச்சர்களின் பரிந்துரைகள் எங்களுக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“நம்பி வந்து நடுத்தெருவில் நிற்கிறோம்!” - மைத்ரேயன் பற்ற வைத்த நெருப்பு

கட்சி நிகழ்ச்சிகளுக்காக அச்சிடும் போஸ்டர்களில்கூட, எங்கள் அணி நிர்வாகிகளாக இருந்தவர்களின் பெயர்கள் போடப்படுவதில்லை. ‘தான் எம்.பி-யாகவும், பன்னீர் அணியின் முக்கிய நபராகவும் இருந்தபோதும், தனக்கு மரியாதை இல்லை’ என்ற வருத்தம் மைத்ரேயனிடம் ஒட்டிக்கொண்டது. அதனால்தான், அ.தி.மு.க-வின் தொடக்க நாள் கொண்டாட்டத்தில்கூட இவர் கலந்துகொள்ளவில்லை. இவரைப்போலவே, மனோஜ் பாண்டியனும் அந்த நிகழ்ச்சியைப் புறக்கணித்தார். ‘வழிகாட்டுக் குழு ஒன்று அமைக்கப்படும். அதில் தங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும்’ என்று மைத்ரேயன் உள்ளிட்ட எங்கள் அணி நிர்வாகிகள் எதிர்பார்த்தார்கள். ஆனால், பன்னீரையே எடப்பாடி தரப்பு புறக்கணித்துவரும் நிலையில், வழிகாட்டுக் குழுவுக்கு இப்போது வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. பொறுத்துப் பொறுத்துப்பார்த்தே மைத்ரேயன் இப்படிச் செய்தார்’’ என்றனர்.

‘மைத்ரேயனின் பதிவு அவரது தனிப்பட்ட கருத்து’ என்று தம்பிதுரை கூறியுள்ளார். ‘இது எனது தனிப்பட்ட கருத்து அல்ல... அடிமட்டத் தொண்டர்களின் உணர்வைத்தான் எதிரொலித்துள்ளேன்’ என்று மீண்டும் மைத்ரேயன் பதிவிட்டார்.
மைத்ரேயனிடம் இதுபற்றிக் கேட்டோம். ‘‘என் மனசில் பட்டதைத்தான் பதிவாகப் போட்டேன். இது எங்கள் அணியைச் சேர்ந்த ஒட்டுமொத்த அடிமட்டத் தொண்டர்களின் குரல். நாங்களாக அவர்களுடன் இணையவில்லை; அவர்கள் தங்கள் ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள எங்களுடன் வந்து இணைந்தார்கள். நாங்கள் இணைந்த பிறகு ஆட்சியைக் காப்பாற்றிக்கொண்டவர்கள், எங்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை; மரியாதையும் இல்லை. இன்றுவரை கட்சியில் சாதாரண உறுப்பினராகத்தான் நான் இருக்கிறேன். எங்கள் அணியில் இருந்த யாருக்கும் எந்தப் பொறுப்பும் வழங்கவில்லை. எடப்பாடி அணியினரை நம்பி வந்து இப்போது நடுத்தெருவில் நிற்கிறோம்’’ என்றார் விரக்தியாக. 

பெரும் சலசலப்பை இது கட்சியில் ஏற்படுத்தியிருக்க, ‘‘இரட்டை இலைச் சின்னம் வரும்வரை அமைதியாக இருங்கள். அதன்பிறகு பார்த்துக்கொள்ளலாம்’’ என்று பன்னீர் சமாதானம் செய்தாராம். ‘‘இப்போது சின்னமும் கிடைத்திருப்பதால், மைத்ரேயன் பற்றவைத்த நெருப்பு இன்னும் சில தினங்களில் அ.தி.மு.க-வில் வேகமெடுக்கும்’’ என்கிறார்கள் உள்விவரம் அறிந்தவர்கள். 

- அ.சையது அபுதாஹிர்
ஓவியம்: பிரேம் டாவின்சி