Published:Updated:

பொலிட்டிகல் பொடிமாஸ்!

பொலிட்டிகல் பொடிமாஸ்!
பிரீமியம் ஸ்டோரி
பொலிட்டிகல் பொடிமாஸ்!

பொலிட்டிகல் பொடிமாஸ்!

பொலிட்டிகல் பொடிமாஸ்!

பொலிட்டிகல் பொடிமாஸ்!

Published:Updated:
பொலிட்டிகல் பொடிமாஸ்!
பிரீமியம் ஸ்டோரி
பொலிட்டிகல் பொடிமாஸ்!
பொலிட்டிகல் பொடிமாஸ்!

ராமநாதபுரத்தில் நடைபெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பற்றி விளம்பரம் செய்யவும், எம்.ஜி.ஆரின் சிறப்புகளை விளக்கும் குறும்படங்களைத் திரையிடவும் பிரசார வாகனங்களைத் துவக்கிவைக்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்தது. கொடியசைக்க வந்த, தமிழகத் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன், ‘‘மக்கள் யாருமே இல்லாத கலெக்டர் அலுவலகத்தில் இந்த நிகழ்ச்சியை நடத்துவதால் என்ன பிரயோஜனம்?’’ என்று கலெக்டர் நடராஜனைக் காய்ச்சியெடுத்தார். உடனடியாக சத்துணவு ஊழியர்களை வைத்து, நூற்றாண்டு விழா பிரசாரப் பேரணியை அரண்மனைப் பகுதியில் நடத்தி அமைச்சரின் கோபத்தைத் தணித்தார், கலெக்டர்.

பொலிட்டிகல் பொடிமாஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மிழ் மாநில காங்கிரஸின் 4–ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் பொதுக்கூட்டம் திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் நடைபெறுகிறது. இதே மைதானத்தில் சமீபத்தில் ஸ்டாலின் மற்றும் தினகரன் கூட்டங்களுக்குத் திரண்ட கூட்டங்களைவிட, கூடுதலாக மக்களைத் திரட்டி, மைதானம் நிரம்பிவழியும் வகையில் மாஸ் காட்டவேண்டும் என நினைக்கிறாராம் ஜி.கே.வாசன். ஆனால், கட்சியின் துவக்க விழாவை முன்னின்று நடத்திய சாருபாலா தொண்டைமான், ராஜசேகரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர், அ.தி.மு.க-வில் ஐக்கியமாகிவிட்டனர். மேலும், ‘‘இந்தப் பொதுக்கூட்டத்தில் கூட்டணி குறித்து த.மா.கா எந்த நிலைப்பாட்டையும் எடுக்காது’’ என ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். இது, பலரையும் விரக்தியடைய வைத்துள்ளது. ஆனாலும், ‘நாம எந்தப்பக்கம் இருக்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்வதற்காகவாவது கூட்டம் வரும்’ என நம்புகிறார்கள் தொண்டர்கள்.

பொலிட்டிகல் பொடிமாஸ்!

டுத்தடுத்து வழக்குகளிலும் ரெய்டுகளிலும் சிக்கிவருகிறது சசிகலா குடும்பம். ‘ஒரே ஒரு சிலையை இடம் மாற்றிவைத்தால் இந்த எல்லா சிக்கல்களும் தீர்ந்துவிடும்’ என்று நினைக்கிறார், சசிகலாவின் அண்ணன் வினோதகனின் மகன் தங்கமணி. அதற்காக, அறநிலையத் துறை அதிகாரிகளை அவர் மிரட்டினார் என்று சர்ச்சை எழுந்துள்ளது. 

தஞ்சாவூரில் பிரசித்தி பெற்றது புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில். இந்த மாரியம்மனுக்கு உருவம் கொடுத்தவர், சதாசிவ பிரம்மேந்திரர். அவருக்கும் இங்கு சிலை உண்டு. 2004-ம் ஆண்டு இந்தக் கோயிலுக்குக் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அப்போது, கோயில் திருப்பணிக்கு சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த திவாகரன், மகாதேவன், தங்கமணி என அனைவரும் செலவுசெய்தனர். அந்தச் சமயத்தில், தங்கமணியிடம் ஜோதிடர் ஒருவர், ‘‘சதாசிவ பிரம்மேந்திரர் சிலை கவனிக்கப்படாமல் உள்ளது. அவரது உருவத்தை மரத்தாலான சிலையாகச் செய்து, பழைய சிலை இருக்கும் இடத்தில் வையுங்கள். அப்படிச் செய்தால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும்’’ என்றார். தங்கமணி அதன்படியே செய்தார்.
இப்போது வேறொரு ஜோதிடர், ‘‘அந்தச் சிலையை வைத்ததுதான் எல்லா பிரச்னைகளுக்கும் காரணம். அதை வேறு இடத்துக்கு மாற்றினால், இழந்த அதிகாரம் உங்கள் குடும்பத்துக்குக் கிடைக்கும்’’ என்றிருக்கிறார். அதைத் தொடர்ந்து, கோயிலுக்குச் சென்று அவர் கேட்டபோது, ‘‘நினைத்த நேரத்தில் சிலையை வேறு இடத்துக்கு மாற்ற முடியாது. நீங்கள் செய்துகொடுத்த சிலையாக இருந்தாலும் இதுதான் விதி. முறையாக மனு எழுதிக்கொடுங்கள். நாங்கள் மேலிடத்தில் கேட்கிறோம்’’ என்றனர் அதிகாரிகள். ‘‘எங்களுக்கு இப்ப நேரம் சரியில்லை. அதனால் நீங்க எல்லாம் ஆடுறீங்க. திரும்பவும் நாங்க அதிகார பலத்துக்கு வருவோம். அப்போ உங்களைப் பார்த்துக்கறேன். சிலையை எப்படி மாற்றணும்னு எனக்குத் தெரியும்’’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினாராம் தங்கமணி.

இதுகுறித்து விளக்கம் கேட்க தங்கமணி வீட்டுக்குச் சென்றோம். விஷயத்தைச் சொன்னதுமே, ‘‘என்னா கோயில்... என்னா சிலை?  அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை. நீங்க போங்க... உங்க வேலையைப் பாருங்க’’ என மிரட்டலான குரலில் சொன்னார்.

பொலிட்டிகல் பொடிமாஸ்!

வ்வொரு மாதமும் ஏழைகளுக்கு வழங்கவேண்டிய 20 கிலோ இலவச அரிசி, புதுவை மாநிலம் கோட்டுச்சேரி தொகுதியில் கடந்த ஆறு மாதங்களாக வழங்கப்படவில்லை. கடுப்பான மக்கள், தொகுதி எம்.எல்.ஏ. சந்திரபிரியங்காவிடம் சென்று, ‘‘இரண்டு நாள்களில் அரிசி வழங்கப்படாவிட்டால் போராட்டம் நடத்தப்போகிறோம்’’ என எச்சரித்தனர். எதிர்க்கட்சியான என்.ஆர். காங்கிரஸைச் சேர்ந்த எம்.எல்.ஏ., ‘‘நான் அரசிடம் பலமுறை தெரிவித்தும் பலனில்லை. போராட்டம் நடத்தும்போது சொல்லுங்க...  நானும் கலந்துகொள்கிறேன்’’ என்றார். வந்தவர்கள் திகைத்து, ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு கலைந்து போய்விட்டனர்.

பொலிட்டிகல் பொடிமாஸ்!

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காகப் போன இடங்களில், தூத்துக்குடி அளவுக்கு வேறு எந்த இடத்திலும் எதிர்ப்பைச் சந்தித்திருக்க மாட்டார் முதல்வர் எடப்பாடி. நிலுவையிலிருந்த பயிர்க்காப்பீட்டுத் தொகையைச் சரியாக வழங்கவில்லை என விவசாயிகள் போராட்டம் நடத்தினர். தமிழ் மாநில விவசாயிகள் சங்கத் தலைவர் நாராயணசாமி, ‘‘விழாவில் முதல்வர் முன்பு விஷம் குடிக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம்’’ என அறிவித்தார். பதறிப்போன போலீஸார், நாராயணசாமியை கோவில்பட்டியிலுள்ள தனியார் விடுதியில் ஒருநாள் முழுவதும் சிறைவைத்தனர். விவசாயிகள் கொந்தளித்து, விழா நாளில் பல ஊர்களில் கறுப்புக்கொடி ஏற்றினர். அமைச்சரான கடம்பூர் ராஜுவின் சொந்த ஊரான பரம்புக்கோட்டையில், அவர் வீடு இருக்கும் தெருவிலேயே கறுப்புக்கொடிகள் ஏற்றப்பட்டன. கடம்பூர் ராஜுவின் நெருங்கிய உறவினர்தான் நாராயணசாமி.

- இரா.மோகன், சி.ய.ஆனந்தகுமார், இ.கார்த்திகேயன், கே.குணசீலன், மு.இராகவன்
படங்கள்: என்.ஜி.மணிகண்டன், உ.பாண்டி