Published:Updated:

ஷோபியா விமானத்தில் சொல்லியதைப் போல, அமெரிக்காவில் கத்தினால்? ஒரு தமிழரின் அனுபவம்

ஷோபியா விமானத்தில் சொல்லியதைப் போல,  அமெரிக்காவில் கத்தினால்? ஒரு தமிழரின் அனுபவம்
ஷோபியா விமானத்தில் சொல்லியதைப் போல, அமெரிக்காவில் கத்தினால்? ஒரு தமிழரின் அனுபவம்

ஷோபியா விமானத்தில் சொல்லியதைப் போல, அமெரிக்காவில் கத்தினால்? ஒரு தமிழரின் அனுபவம்

பொதுமக்களை கண்துடைக்க மிக்ஸி, டிவி எனச் சின்னச் சின்னப் பொருள்களைக் கொடுத்தால் போதும், எது சொன்னாலும் நம்பிவிடுவார்கள் என்ற பழைய பஞ்சாங்கத்துக்கெல்லாம் பெரிய முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக இருக்கிறது `பாசிச பா.ஜ.க ஒழிக' கோஷம். தமிழக அரசியல் வரலாற்றோடு உலக அரசியலையும் தெரிந்துகொள்வதற்கு இந்தக் காலத்து இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர். தெரியாதவர்கள்கூட இப்போது வரலாற்றை ஆர்வமுடன் புரட்டிக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு, சமீபத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் கனடாவில் படித்துக்கொண்டிருக்கும் கல்லூரி மாணவி ஷோபியா, இருவருக்குமான பிரச்னையும் ஒருவகையில் காரணம். பரபரப்புக்குக் குறைவில்லாமல் நகர்ந்துகொண்டிருக்கும் தற்போதைய தமிழ்நாட்டின் அரசியல் நிலவரம் பற்றி, வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் மனநிலை எப்படி இருக்கிறது போன்ற பல கேள்விகளுடன் அமெரிக்காவில் வாழும் மஹேந்திரனிடம் பேசினேன்.

``எங்களை இந்தியா வரவிடாம தடுக்கிற நிறைய விஷயங்கள் அங்க இருக்கு. பிறந்த குழந்தைக்கு பர்த் சர்ட்டிஃபிகேட் முதல் சொந்தமா சின்ன நிலம் வாங்கிற வரைக்கும் எல்லாத்துலயும் லஞ்சம் அங்க கலந்திருக்கு. எத்தனையோ ஆயிரங்களை வரியாக் கட்டுறோம். ஆனா, பதிலுக்கு நமக்கு என்ன கிடைக்குது? எனக்குத் தெரிஞ்சு டிரான்ஸ்போர்ட் டிக்கெட்டெல்லாம் ஏறிட்டேதான் இருக்கு. வாகனம் உபயோகிக்காம எதுவுமே சாத்தியமில்லை. `அந்த அளவுக்கு போக்குவரத்துல நஷ்டமா?'னு கேள்வி வருது. இதுபோல காரணங்கள் நிறையவே இருக்கு. உண்மையைச் சொல்லணும்னா இந்திய அரசியல் பற்றி அதிகமா இங்க பேசினதில்லை. ஆனா, ஜல்லிக்கட்டு, காவிரி, விவசாயிகள் பிரச்னைகளெல்லாம் பார்க்கிறப்போ ரொம்பவே வருத்தப்பட்டோம். இதுபோல சம்பவங்கள்தான் அரசியலைப் புரட்டிப்பார்க்கவைக்குது."

``அப்போ, வெளிநாட்டுல எந்தப் பிரச்னையும் இல்லையா?"

``இதுபோல மக்களை ஒடுக்குற எந்தப் பிரச்னையும் இங்க இல்ல. அரசாங்கக் கட்டணம் தவிர, எங்கயும் லஞ்சம் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை. வண்டி ஓட்டத் தெரியாதுனா, லைசென்ஸ் கிடைக்காது. டிராஃபிக் சிக்னல்ல விஐபி-க்குனு தனி சிக்னல் இல்லை. எவ்வளவு பெரிய அரசியல் தலைவரானாலும் இந்த ரூல்ஸ் எல்லாம் பின்பற்றியே ஆகணும். தனியார் மருத்துவமனைக்கும் அரசு மருத்துவமனைக்கும் பெருசா எந்த வித்தியாசமும் கிடையாது. கூட்டம் ஒரே அளவுலதான் இருக்கும். இங்க 80 சதவிகிம் அரசுப் பள்ளிகள்தான். இங்கயும் செல்வாக்கு வெச்சு தப்பிக்கிறவங்களும் இருக்காங்க. ஆனா, அது ரொம்ப ரொம்பக் கம்மி".

`` `பாசிச பா.ஜ.க ஒழிக!' - கேள்விப்பட்டிங்களா?"

``நான் ஏற்கெனவே சொன்னதுபோல இந்திய அரசியல் பற்றி இங்க பேசிக்கிறதில்லை. ஆனாலும், முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, கலைஞர் கருணாநிதியோட மறைவு, இங்க இருக்கிறவங்க எல்லோரையுமே பாதிச்சுது. ரொம்பவே வருத்தப்பட்டோம். `கலைஞரோட இடத்தை யாராலயும் நிரப்பவே முடியாது. அது வெற்றிடமாகிடுச்சு'னு பலரும் சொன்னாங்க. ஆனா, இது நிச்சயம் பா.ஜ.க-வுக்கு சாதகமாதான் இருக்கும். முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தோட மகன் கார்த்திக், விஜய் பாஸ்கர்னு கொஞ்சம் கொஞ்சமா பா.ஜ.க, அவங்க பக்கம் ஆள்களைச் சேகரிச்சிட்டிருக்காங்க. எங்களைப் பொறுத்தவரைக்கும், இந்தியாவை தங்களோட கன்ட்ரோல்ல வைச்சுக்கணும்னு ரொம்பப் பேராசைப்படுற கட்சி பா.ஜ.க. அதனால, இதுபோல முழக்கம் வருது. கண்டிப்பா வரதான் செய்யும்." 

``வெளிநாடுகள்ல குறிப்பா, அமெரிக்காவுல இப்படிப் பொது இடத்துல கோஷம் போட்டா என்ன நடக்கும்?"

``இங்கே பொது இடத்துல, தனிநபரை எதிர்த்து கூச்சல் போடவே கூடாது. சொல்லப்போனா ஒருவரை அதிக நேரம் பார்க்கவே கூடாது. அதனாலதான் நம்மளையும் மீறி அப்படிப் பார்த்துட்டா, `எப்படி இருக்கீங்க...? நல்லா இருக்கிங்களா...’ இப்படி ஏதாவது கேள்விகள் கேட்டுட்டு அந்த இடத்தை விட்டு போய்டுவாங்க. அப்படி இல்லாம, ரொம்ப நேரம் பார்த்தாலே அது மிகப் பெரிய குற்றம். ஆனா, போராடணும்னு முடிவு பண்ணிட்டா, போலீஸ்ட்ட அனுமதி வாங்கிட்டு எந்த விஷயத்துக்காகவும் போராடலாம். அதுவும் வெள்ளை மாளிகை முன்னாடி நின்னு கூட போராட்டம் பண்ணலாம். ஆனா, யாரையும் அவமானப்படுத்தவோ, அடிக்கவோ முடியாது. அது மிகப் பெரிய குற்றம்!"

``இந்திய அரசாங்கம் என்னென்ன மாற்றங்கள் செய்யணும்னு எதிர்பார்க்கிறீங்க?"

``என்னைப் பொறுத்தவரை எந்தத் தலைவருக்கும் அங்க தெளிவான நோக்கம் இல்லை. நான் ஒருமுறை சிங்கப்பூர் போயிருந்தபோ, 2030-ல அவங்களோட இடங்களெல்லாம் எப்படி இருக்கும்னு ஒரு தொலைநோக்குப் பார்வையோடு வேலை செஞ்சுட்டு இருக்காங்க. முறையான திட்டம் இருந்தா மட்டுமே இதெல்லாம் சாத்தியம். அதேபோல, அபுதாபி பொதுமக்களுக்கு 2030-ல, இங்கே ஒரு கட்டடம் இருக்கும்; இங்கே ஒரு தீம் பார்க் இருக்கும்; பூர்ஜ் கலிஃபா விட பெரிய கட்டடம் இங்கே வரும்; செயற்கைத் தீவு வரும்னு எல்லாமே தெரிஞ்சிருக்கு. அந்த அளவுக்கு வேகமாவும், விழிப்பு உணர்வோடும் செயல்படுறாங்க. 

இந்தியாவுல இதுபோல போட்ட பல திட்டங்கள் என்ன ஆச்சுன்னு தெரில. பெரிய அரசியவாதிகள், பிரபலங்கள் தவறு செஞ்சா அதெல்லாம் கண்டுக்க ஆளே இல்லை. தேர்தல் நேரத்துல இலவசப் பொருள்கள் கொடுக்கிறதுக்காக. அரசாங்கம் ஒதுக்குற பணத்துல, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க வழிசெய்யலாம். இப்படிச் செஞ்சா அவங்க சொந்தகாசுலேயே அந்த இலவசப் பொருள்களை எல்லாம் வாங்குவாங்களே. 

ஒரு நல்ல அரசாங்கத்துக்கு அடையாளமா நான் நினைக்கிறது....

1. எல்லாத் தரப்பு மக்களோட அடிப்படை வசதிகளையும் பூர்த்திசெஞ்சிருக்கணும்.

2. கடைக்கோடியில் இருப்பவனும் காசு கொடுத்து சாப்பிடுற அளவுக்குப் பொருளாதாரம் இருக்கணும்.

3. மருத்துவமனைகள், குறைந்த கட்டணத்துல தரமான சிகிச்சை கொடுக்கணும். போக்குவரத்துக் கட்டணம் ரொம்பவே கம்மியா இருக்கணும். முக்கியமா, அனைத்தையும் அரசாங்கமே எடுத்து நடத்தணும்.

4. ஒவ்வொருத்தரும் அவங்களோட கடமையைச் செய்றதுக்குப் பணம் கேட்கக் கூடாது. அதாவது லஞ்சம் இல்லாத நாடா இருக்கணும்.

5. எல்லாருக்கும் தரமான கல்வியை இலவசமா கொடுக்கணும்."

``மீண்டும் இந்தியா வருவீங்களா?"

``நிச்சயம் வருவேன். எத்தனை பிரச்னை இருந்தாலும், சொந்த ஊருதான் என்னிக்குமே பெஸ்ட்."

அடுத்த கட்டுரைக்கு