Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

Published:Updated:
கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

எஸ்.பி.விவேக், சேலம்.

குஜராத் தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் கட்சியைக் கடுமையாகச் சாடி வருகிறாரே பிரதமர் மோடி?


காங்கிரஸை சாடுவதைவிட, பி.ஜே.பி-யின் சாதனைகளைச் சொல்லி வாக்குக் கேட்பதே சரியானது. கால் நூற்றாண்டுக்கும் மேல் குஜராத் மாநிலத்தை ஆள்கிறது பி.ஜே.பி. இன்று மத்தியிலும் ஆட்சியில் இருக்கிறது. அத்தகைய கட்சி, சாதனைகளைச் சொல்லி வாக்குக் கேட்பதே சரியானதாக இருக்க முடியும்!

கழுகார் பதில்கள்!

கி.தா.துரைசாமி, மேட்டுப்பாளையம்.

வரிசையாக பல மாநில முதலமைச்சர்களைச் சென்று சந்திக்கிறாரே கமல்ஹாசன்?


தான் முதலமைச்சர் ஆகிறோமோ, இல்லையோ.... முதலமைச்சர்களையாவது சந்திப்போம் என்று நினைத்திருக்கலாம்!

த.சத்தியநாராயணன், அயன்புரம்.

நடிகர்கள், கட்சி தொடங்குவதற்கு பிரகாஷ்ராஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளாரே?


சினிமாவில் இவர்கள் ஹீரோக்கள்... ஆனால், நிஜத்தில் பிரகாஷ்ராஜ்தான் ஹீரோ என்று சொல்லத்தோன்றுகிறது. ‘படத்தில் காட்டும் ஹீரோயிஸங்களை வைத்துக்கொண்டு ஆட்சிக்கட்டிலில் ஏறத்துடிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று பிரகாஷ்ராஜ் சொல்வதில் நூற்றுக்கு நூறு உண்மை இருக்கத்தானே செய்கிறது!

உமரி. பொ.கணேசன், மும்பை-37.

 சசிகலா குடும்பத்தினர் 60-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் நடத்திவந்ததை ரெய்டுகளில் கண்டுபிடித்திருப்பதாகச் சொல்கிறார்களே... இவை ஜெயலலிதாவுக்குத் தெரியாமலா நடந்திருக்கும்?


ஜெயலலிதாவுக்குத் தெரியாமல் எப்படி நிறுவனங்களை ஆரம்பித்திருக்க முடியும்? ஜெயலலிதா பெயரைச் சொல்லித்தான், அதற்கான நிதி ஆதாரங்களையும், நிர்வாக உதவிகளையும் அவர்கள் பெற்றிருக்க முடியும். ‘இவை எல்லாம் ஜெயலலிதாவுக்குத் தெரியாது’ என்றால், அவர் எப்படி ஆளுமைமிக்க தலைவராகச் செயல்பட்டிருக்க முடியும்? தனது வீட்டுக்குள் இருந்தவர்கள் செய்ததையே அறியாதவருக்கு, நாட்டில் நடந்தது எப்படித் தெரிந்திருக்க முடியும்?

ப.த.தங்கவேலு, பண்ருட்டி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கமல்ஹாசனின் அரசியல் நடவடிக்கைகள் பற்றி ரஜினிகாந்த் என்ன நினைக்கிறார்?

‘கமல் உண்மையில் கட்சி ஆரம்பிப்பாரா’ என்பதைப் புரிந்துகொள்ள முடியாமல் தவிக்கிறார் ரஜினி. ட்விட்டரில் பதிவுகளைப் போட்டே கமல் தன் அரசியலைத் தொடர்கிறார். இப்படி எத்தனை நாள் தொடரும் எனத் தெரியாமல் ரஜினி குழம்புகிறார். ரஜினி சில அறிவிப்புகளை டிசம்பர் 12-ம் தேதி தனது பிறந்தநாளில் வெளியிட  இருக்கிறார். ‘அதற்கு முன்னர் கமல் களம் இறங்கிவிடுவாரோ’ என்ற பதற்றம் ரஜினிக்கு இருக்கிறது.

மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.

‘அரசியலுக்கு வருவதற்கு நடிக்கத் தெரிந்தால் போதும்’ என்றுதானே நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள்?


சூப்பர் விமர்சனம் இது!

ச.ந.தர்மலிங்கம், சத்தியமங்கலம்.


மழை வரும்போதெல்லாம் சென்னை தண்ணீரில் மிதக்கிறதே, இதற்குத் தீர்வே இல்லையா?

‘மழை பெய்யாமல் இருப்பது ஒன்றுதான் நிரந்தரத் தீர்வு’ என்று ஆட்சியாளர்கள் நினைக்கலாம்!

சம்பத்குமாரி, பொன்மலை.

சசிகலா குடும்பத்தினரின் சொத்துகளையும், வருமானவரி ஏய்ப்பையும் கண்டுபிடித்து விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும் போலிருக்கிறதே?


ஏற்கெனவே, 1996-ம் ஆண்டில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. அதில், ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான ஊழல் வழக்குகள் விசாரிக்கப்பட்டன. ஜெயலலிதா, அவருடைய அமைச்சரவை சகாக்கள், உயர்அதிகாரிகள் மற்றும் சசிகலா தரப்பினர் எனப் பலரும் அப்போது கூண்டில் ஏற்றப்பட்டனர். சொத்துக்குவிப்பு வழக்கில்  மட்டும்தான் தண்டனை விதிக்கப்பட்டது. எனவே, பழைய வழக்குகளைத்தோண்டி எடுக்கவும், 1996-ம் ஆண்டுக்குப் பிறகான ஆட்சிக்காலங்களில் நடந்த ஊழல்களை விசாரிக்கவும் புதிதாக சிறப்பு நீதிமன்றம் அமைப்பதில் தவறே இல்லை.

கழுகார் பதில்கள்!

கோபி நயினார்,
‘அறம்’ பட இயக்குநர்

டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு மூல காரணமாக இருப்பது கொசு. அந்தக் கொசுவை ஒழிப்பதற்கு ஆக்கபூர்வமான பணிகளை மேற்கொள்ளாமல், கஷாயம் காய்ச்சிக் கொடுப்பதும், மருந்து மாத்திரைகளை எழுதிக்கொடுப்பதும் சரியான நடைமுறைதானா?


‘வருமுன் காப்போம்’ என்பதுதான் நமக்குத் தெரியாதே. வந்தபின் எதையாவது செய்வதுதானே நமது வழக்கம். ‘நோய்நாடி நோய் முதல்நாடி’ என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவர் எழுதினார். ‘வள்ளுவர் வாக்கு நமக்கு வெறும் மனப்பாடப் பகுதி பாட்டு மட்டுமே’ என்பதற்குப் பச்சையாகத் தெரியும் உதாரணம், டெங்கு.

டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு மூலகாரணமாக இருப்பது கொசு மட்டுமல்ல, நம்முடைய சுகாதாரக்கேடும்தான். சுத்தம், சுகாதாரம் ஆகிய விஷயங்களில் மாநகராட்சி முதல் பஞ்சாயத்து வரை எந்த உள்ளாட்சி அமைப்பும் அக்கறை கொள்வதே இல்லை. ‘அமைச்சரோ, அதிகாரிகளோ ஆய்வுக்கு வந்தால், அந்த இடத்தில் மட்டும் பிளீச்சிங் பவுடர் அடிப்பதுதான் சுகாதாரம்’ என்பது இவர்களின் கணக்கு. சமீபத்தில் கோவை போனார் கவர்னர். குப்பை கூட்டினார். அவர் போகும் பாதையில் குப்பைத் தொட்டி வைத்தார்கள். அவர் அந்த இடத்தைக் கடந்ததும், அந்தக் குப்பைத் தொட்டியை எடுத்துவிட்டார்கள். ‘கலைக்க வந்துள்ளார்’ என்ற பயம் காட்டப்படும் கவர்னருக்கே இவ்வளவுதான் மரியாதை.

இன்றைய நிர்வாக அமைப்பே சீர்கெட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சிகளில் இருக்கும் சுகாதாரத் துறை அதிகாரிகள், இதுபோன்று நோய்க்காலங்களில் மட்டும்தான் வீதிக்கு வருகிறார்கள். மற்ற நேரங்களில் அவர்களைப் பார்க்க முடியாது. கொசுமீது பழிபோட்டுத் தப்பிக்க முடியாது. நோய்களை உற்பத்தி செய்வது, இன்றைய நிர்வாகத்தின் அலட்சியம்தான். அதற்குத்தான் முதலில் சிகிச்சை தேவை.

கழுகார் பதில்கள்!

 கேள்விகள் அனுப்ப  வேண்டிய முகவரி: 
கழுகார் பதில்கள்,  ஜூனியர் விகடன்,
757, அண்ணா சாலை, சென்னை- 600 002 
kalugu@vikatan.com என்ற  இமெயிலுக்கும் அனுப்பலாம்!