Published:Updated:

இரட்டை இலை யாருக்கு? - எடப்பாடிக்கு மட்டும் தீர்ப்பு வெளியான விஷயம்...

இரட்டை இலை யாருக்கு? - எடப்பாடிக்கு மட்டும் தீர்ப்பு வெளியான விஷயம்...
பிரீமியம் ஸ்டோரி
இரட்டை இலை யாருக்கு? - எடப்பாடிக்கு மட்டும் தீர்ப்பு வெளியான விஷயம்...

தினகரன் உடைக்கும் ரகசியம்

இரட்டை இலை யாருக்கு? - எடப்பாடிக்கு மட்டும் தீர்ப்பு வெளியான விஷயம்...

தினகரன் உடைக்கும் ரகசியம்

Published:Updated:
இரட்டை இலை யாருக்கு? - எடப்பாடிக்கு மட்டும் தீர்ப்பு வெளியான விஷயம்...
பிரீமியம் ஸ்டோரி
இரட்டை இலை யாருக்கு? - எடப்பாடிக்கு மட்டும் தீர்ப்பு வெளியான விஷயம்...

மார்ச் 22-ம் தேதி முடக்கப்பட்ட இரட்டை இலை, நவம்பர் 23-ம் தேதி மீண்டும் துளிர்த்திருக்கிறது.

‘11 எம்.எல்.ஏ-க்கள் எங்கள் பக்கம் இருப்பதால் எங்களுக்கே சின்னம் வேண்டும்’ என ஓ.பன்னீர்செல்வம் கேட்க, ஆர்.கே.நகர் இடைத் தேர்தலின்போது இரட்டை இலையை முடக்கியது தேர்தல் கமிஷன். அப்போது, ஓ.பி.எஸ் சார்பில் மதுசூதனன்தான் சசிகலாவுக்கு எதிராக மனு கொடுத்தவர். பின்னர், ஓ.பி.எஸ் அணியும் இ.பி.எஸ் அணியும் இணைந்தபோது தினகரன் அணி உருவானது.

ஓ.பி.எஸ், செம்மலை, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனி மனுதாரர்களாகச் சின்னம் கேட்டு முறையிட்டனர். இவர்கள் அனைவரும் ஒருபக்கம்... மறுபக்கம் சசிகலா என்கிற அடிப்படையில் தேர்தல் கமிஷனில் வாதங்கள் வைக்கப்பட்டன. இதற்காக லாரி லாரியாக ஆவணங்களைக் கொண்டுவந்து கொட்டினர் இருதரப்பினரும். இவற்றை வைப்பதற்கென்றே தேர்தல் ஆணையத்தின் கீழ்தளத்தில் ஓர் அறை ஒதுக்கப்பட்டது. ஏழு நாள்கள் தினமும் விசாரணை நடைபெற்றது. எண்ணிக்கைமீது மட்டுமே நம்பிக்கை வைத்து ஆரம்பத்திலிருந்து வாதிட்டது ஓ.பி.எஸ் தரப்பு. தினகரன் தரப்போ, ‘‘எதிர் அணியினர் தாக்கல் செய்துள்ள பொதுக்குழு உறுப்பினர்களில் 300-க்கும் மேற்பட்ட போலிகள் கலந்திருக்கிறார்கள். அவர்களைக் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும். பொதுக்குழுவைக் கூட்ட எடப்பாடி - பன்னீர் அணிக்கு உரிமையில்லை’’ என வாதங்களை வைத்தனர். இறுதியில், ‘எண்ணிக்கை அடிப்படையில் யாருக்கு மெஜாரிட்டி’ என்கிற முடிவுக்கு வந்து கட்சியையும், கொடியையும் ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அணி பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தீர்ப்பை எழுதியுள்ளது தேர்தல் ஆணையம்.

இரட்டை இலை யாருக்கு? - எடப்பாடிக்கு மட்டும் தீர்ப்பு வெளியான விஷயம்...

ஜெயலலிதா மரணமடைந்த டிசம்பர் 5-ம் தேதி கணக்குப்படி மொத்த பொதுக்குழு உறுப்பினர்கள் 2,140. அதிலிருந்து 12 பேர் எதிர் அணிக்கு வந்துள்ளனர். மீதம் 2,128 பேர் தற்போதும் ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அணியில் இருப்பதாகத் தேர்தல் ஆணையம் முடிவுக்கு வந்துள்ளது. அதில் 1,829 பேர் முதல்வர் பழனிசாமி கூட்டிய பொதுக்குழுவில் கலந்துகொண்டதைத் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது. அதே நேரத்தில், அதற்கு ஆதாரமாக முதல்வர் தரப்பு முன்வைத்த வீடியோ ஆதாரத்தை தினகரன் தரப்பு எதிர்க்கவில்லை என்பதையும் தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். எடப்பாடி அணிக்கு ஆதரவாக 1,877 உறுப்பினர்கள் தேர்தல் ஆணையத்தின் முன்பாக பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்தனர். இவற்றில் 1,741 பேரின் பத்திரங்களை மட்டும் தேர்தல் ஆணையம் கருத்தில் எடுத்துக்கொண்டது. அதே நேரத்தில், தினகரனுக்கு ஆதரவாக 145 பிரமாணப் பத்திரங்களை மட்டுமே கணக்கில்கொண்டது தேர்தல் கமிஷன்.

இதுதவிர, 42 எம்.பி-க்களும் 111 எம்.எல்.ஏ-க் களும் புதுவையைச் சேர்ந்த 4 எம்.எல்.ஏ-க்களும் எடப்பாடி - பன்னீர் அணிக்கு ஆதரவு என்றும் தினகரன் அணிக்கு ஆறு எம்.பி-க்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ-க்கள் உள்பட 20 எம்.எல்.ஏ-க்களும் தினகரன் அணிக்கு ஆதரவு என்று முடிவுக்கு வந்தது தேர்தல் ஆணையம். இந்தக் கணக்கு அடிப்படையில்தான் 83 பக்கத் தீர்ப்பைத் தேர்தல் ஆணையர்கள் ஏ.கே.ஜோதி, ஓ.பி.ராவத், சுனில் அரோரா ஆகியோர் எழுதினர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘எடப்பாடி - பன்னீர் அணிக்கே இரட்டை இலைச் சின்னம்’ என டி.வி சேனல்களில் முதலில் பிரேக்கிங் நியூஸ் வெளியானது. ஆனால், முறைப்படி வழக்கறிஞர்களுக்கு இதைத் தெரிவிக்கவில்லை. தேர்தல் ஆணையம் செய்திக் குறிப்பும் வெளியிடவில்லை. ‘தீர்ப்பு வெளியாக வில்லை’ என மறுத்தது தேர்தல் ஆணையம். இதனிடையே முதலமைச்சர் பழனிசாமி, வெற்றி பேட்டி எல்லாம் கொடுக்க... அது சர்ச்சையானது. இதையே தினகரன் தரப்பினர் புகாராகத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பினர். ‘எதிர் மனுதாரர்களான எங்களுக்கு இன்னும் உத்தரவு நகல் வராதபோது முதல்வருக்கு மட்டும் தெரிவிக்கப் பட்டதா? இது விதிமீறல் இல்லையா..?’ என தினகரன் தரப்பு வழக்கறிஞர் மோகித் கேள்வி எழுப்பினார். உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும்போது இவையெல்லாம் வாதமாக வைக்கப்படும்.

இரட்டை இலை யாருக்கு? - எடப்பாடிக்கு மட்டும் தீர்ப்பு வெளியான விஷயம்...

‘‘11 எம்.எல்.ஏ-க்கள் ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்ததைக் கணக்கில் எடுத்துக்கொண்டு இரட்டை இலையை அன்றைக்கு முடக்கிய தேர்தல் ஆணையம், இன்றைக்கு எண்ணிக்கையை வைத்து உத்தரவு என்பது ஒருதலைப்பட்சமானது. உச்ச நீதிமன்றத்தில் நியாயம் தேடுவோம்’’ என தினகரன் கூறியுள்ளார். ‘‘தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் முறையிட்டு இடைக்காலத் தடை  பெற்று விடுவோமோ என அஞ்சித்தான் முதல் நாள் தீர்ப்பு, அடுத்த நாள் ஆர்.கே.நகர் தேர்தல் அறிவிப்பு எனத் தேர்தல் கமிஷன் காட் டும் வேகத்தைப் பார்த்தாலே பி.ஜே.பி பின்னணியிலிருந்து இயக்குவது அப்பட்டமாகத் தெரிகிறது’’ என்கிறார்கள் தினகரன் அணியினர். தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டால் நீதிமன்றம் தலை யிட முடியாது. சின்னத் துக்குத் தடைவிதிக்கவும் வாய்ப்பிருக்காது.

- டெல்லி பாலா
ஓவியம்: பிரேம் டாவின்ஸி