எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

தமிழக அமைச்சர்களில் யாருக்கு காமெடி மன்னர் பட்டம் கொடுக்கலாம்?

கொடுப்பதுதான் கொடுக்கிறீர்கள்... ஏன் ஒருவருக்கு மட்டும் கொடுக்கிறீர்கள்? மொத்த அமைச்சரவைக்கும் கொடுங்கள். அந்த விருதுக்கும் பெருமை; அவர்களுக்கும் பெருமை!

சுந்தரி ப்ரியன், வேதாரண்யம்.

‘‘அ.தி.மு.க எஃகுக் கோட்டை. அதிலிருந்து ஒரு செங்கலைக்கூட யாராலும் உருவ முடியாது’’ என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொல்லியிருக்கிறாரே?

! 18 செங்கற்களை தினகரன் உருவிவிட்டார். பன்னீரால் உருவப்பட்ட 11 செங்கற்கள் மீண்டும் ஒட்ட வைக்கப்பட்டுள்ளன. ஆட்சிக் கோட்டைக்கு 117 செங்கற்கள் தேவை. ஆனால், மொத்தமே 111 செங்கற்கள்தான் இருப்பதாக தேர்தல் ஆணையமே சொல்லியிருக்கிறது. இந்த நிலையில், எதற்காக வெற்று சவடால்!

சொ.ஆகாஷ், ரோஸ்மியாபுரம்.

‘‘என்னை முதல்வராக்குவது மக்கள் கையில்தான் உள்ளது” என்று சரத்குமார் சொல்வது சரியா?

! உண்மையைத்தானே சொல்லியிருக்கிறார் சரத். அவரை மட்டுமல்ல, எவரையும் முதல்வராக்குவது மக்கள் கையில்தானே இருக்கிறது!

எல்லா அரசியல்வாதிகளுக்கும் மக்கள்தான் எஜமானர்கள். அதனால்தான் காலில் விழுந்து, கைகூப்பி, ஏன்... பணத்தைக் கொடுத்து அவர்களுக்கு ஐஸ் வைக்கிறார்கள் அரசியல்வாதிகள். வெற்றிக்குப் பிறகு மக்களை மறந்துவிடுவது உண்மையாக இருந்தாலும், மக்கள் இல்லாமல் எவரும் முதல்வராக மட்டுமல்ல, கவுன்சிலராகக்கூட ஆக முடியாது.

தீ.அசோகன், திருவொற்றியூர்.

? அரசியல்வாதிகள் செய்யவேண்டிய காரியத்தை ஆளுநர் செய்வது சரியா?

அரசியல்வாதிகள் செய்யத் தவறும் காரியத்தை ஆளுநர் செய்தால் சரிதானே? ஒவ்வொரு மாவட்டத்திலும் என்ன மாதிரியான மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்று முதலமைச்சரோ, அமைச்சர்களோ ஆய்வு நடத்தியிருக்க வேண்டும். அதை அவர்கள் செய்யாததால், ஆளுநர் செய்கிறார் என்றும் எடுத்துக்கொள்ளலாம் அல்லவா?

என்.முருகேஷ், மங்கைநல்லூர்.

ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன், ஜெயலலிதாவின் செல்லப்பிள்ளை விவேக்... என்ன வேறுபாடு?

சுதாகரனை வளர்ப்பு மகனாக ஜெயலலிதா தத்தெடுத்தார். கோடிக்கணக்கில் செலவு செய்து அவருக்குத் திருமணம் செய்துவைத்தார். அதற்கான பலனை கடைசி வரைக்கும் அனுபவித்தார். இறுதிக் காலத்தில், விவேக்கை வளர்ப்பு மகன்போல தத்தெடுக்க வைக்க சிலர் முயற்சி செய்தார்கள். ஆனால், ஜெயலலிதா மறுத்துவிட்டார். ஜெயலலிதாவை வரவழைத்து, பிரமாண்டமாக விவேக் திருமணத்தை நடத்தத் திட்டமிட்டார்கள். அதற்கும் மறுத்துவிட்டார் ஜெ. தனது தலைமையில் நடத்துவதை மட்டுமல்ல, அந்தத் திருமணத்துக்குச் செல்வதையே தவிர்த்தார். மணமக்கள் போயஸ் கார்டன் வந்து ஆசீர்வாதம் வாங்கினார்கள். அந்தப் புகைப்படத்தைக்கூட வெளியிட அவர் அனுமதி தரவில்லை. எனவே, ‘ஜெயலலிதாவின் செல்லப்பிள்ளை’ என்று விவேக்குக்கு பட்டம் சூட்டுதல் சரியானது அல்ல. ஆனால், அப்படிப்பட்ட ஓர் அரசியல் அடையாளத்தைப் பெற விவேக் துடிப்பது தெரிகிறது.

காவ்யா, சென்னை -10

உலக அழகியாக இந்தியாவைச் சேர்ந்த மானுஷி சில்லர் தேர்ந்தெடுக்கப் பட்டதன் பின்னணியில் அரசியல் ஏதும் உள்ளதா?

உலக அழகிகளுக்கும், உலக வர்த்தகத்துக்கும் மிக நெருங்கிய தொடர்புகள் உண்டு. உலகமயமாக்கலின் ஆரம்பக்கட்டத்தில், இந்திய சந்தையில் பன்னாட்டுப் பொருள்களை நிலைநிறுத்த உலக அழகிகளின் பங்கு அவசியப்பட்டது. 1966-ல் உலக அழகியாக இந்தியாவின் ரீடா ஃபாரியா தேர்வாகி, 28 வருடங்களுக்குப் பின், 1994-ல் ஐஸ்வர்யா ராய் தேர்வானார். குளிர்பானங்கள் உள்ளிட்ட பன்னாட்டு பிராண்டுகளின் பிரதான மாடலாக ஐஸ்வர்யா பயன்படுத்தப் பட்டார். அவர், உலகின் டாப் பிராண்ட் அம்பாசிடர்களில் 2-ம் இடத்தைப் பிடித்தார். அதே ஆண்டு, பிரபஞ்ச அழகியாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட சுஷ்மிதா சென், கோக் நிறுவனத் துக்காக பிராண்டு அம்பாசிடர் ஆனார். 1997-ல் உலக அழகியாகத் தேர்வான டயானா ஹைடன், லாரியல் பிராண்டுக்கு மாடல் ஆனார்.

2000-ல் உலக அழகியாகத் தேர்வான இந்தியாவின் பிரியங்கா சோப்ரா, ஏராளமான விளம்பரங்களில் தோன்றினார். தற்போது உலக அழகியாகத் தேர்வாகியுள்ள மானுஷி சில்லரும் விரைவில் அழகுசாதன பிராண்டின் சந்தையைத் தீர்மானிக்கலாம். அழகிப் போட்டியை, வர்த்தக நிறுவனங்களுக்கான பிராண்ட் அம்பாசிடர் களைத் தேர்ந்தெடுத்து அனுப்பும் வாசல் என்றும் சொல்லலாம்!

காயல் எஸ்.ஏ.நெய்னா,காயல்பட்டினம்.

சேகர் ரெட்டி தொடர்பான இடங்கள் மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடுகளில் நடத்தப்பட்ட வருமானவரித் துறை ரெய்டுகளில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் இல்லையே? இதை வைத்துத்தானே, வருமானவரித் துறை ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக அனைவரும் சொல்கிறார்கள்?

வருமானவரித் துறை ஓர் இடத்தில் ரெய்டு செய்தால், உடனே வழக்குப் போட வேண்டும் என்றோ, மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றோ அவசியமில்லை. சுமார் இரண்டு ஆண்டுகள் வரை அவகாசம் இருக்கிறதாம். இப்படி அந்தத் துறையின் அதிகாரி ஒருவர் சொல்லியிருக்கிறார். எனவே, அவர்கள் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார்களா என்பதைத் தெரிந்துகொள்ள, இரண்டு ஆண்டுகள் காத்திருக்கவும்.

உமரி பொ.கணேசன், மும்பை.

‘இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரின்போது, ராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபட்டது’ என்பதை இன்றைய அதிபர் சிறீசேனா ஒப்புக்கொண்டுவிட்டாரே? அதன்மீது நடவடிக்கை எடுப்பாரா?

‘இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரில், போர்க்குற்றங்களில் ராணுவம் ஈடுபட்டது’ என்பதை சிறீசேனா ஒப்புக்கொள்வதில் ஆச்சர்யப்பட எதுவும் இல்லை. போர்க்குற்றங்கள் பற்றிய கண்துடைப்பு விசாரணை ஆணையத்தை அன்றைய அதிபர் ராஜபக்சேவே அமைத்தார். போர்க்குற்றங்கள் நடந்தபோது, இலங்கை அமைச்சராக இருந்தவர்தான் இந்த சிறீசேனா.

இலங்கையில் நடந்தது இனப்படுகொலை. ‘போர்க்குற்றம்’ என்று சொல்லி அதன் கொடூரத்தைச் சுருக்கிவிட முடியாது. சில ராணுவத் தளபதிகள்மீது நடவடிக்கை எடுப்பதுபோல் நடித்து, லட்சக்கணக்கானோர் இறப்பை மறைக்க முயற்சி செய்கிறார்கள். இலங்கையில் இப்போது அதுதான் நடக்கிறது.

எஸ்.கே.வாலி, த.முருங்கப்பட்டி.

நகராட்சி எல்லைக்குள் வரும் நெடுஞ்சாலைகளை ஒட்டி, டாஸ்மாக் கடைகளைத் திறப்பதை உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ளதே?

குடிமகன்களுக்கு மகா கொண்டாட்டம்; அரசுக்கு மெகா கொண்டாட்டம்!

தங்க தமிழ்ச்செல்வன்,
பதவிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ (தினகரன் அணி)

இன்றைய ஆளுங்கட்சிக்கு 111 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு மட்டுமே இருப்பதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டது. ஆனாலும்கூட, பெரும்பான்மை இல்லாத எடப்பாடி அரசைக் கலைக்காமல் ஆளுநர் மௌனம் காப்பது ஏன்?

122 உறுப்பினர்கள் ஆதரவு சசிகலாவுக்கு இருந்தபோது அவருக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைக்காமல் இழுத்தடித்தார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். சசிகலா கைது செய்யப் பட்டதும், அதே 122 உறுப்பினர்கள் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு இருந்தநிலையில், அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்யாமல் தாமதித்தார் ஆளுநர்.

முதலமைச்சர்மீது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் புகார் சொன்னபோது, ஆளுநர் வித்யாசாகர் ராவ் இதுசம்பந்தமாக முதல்வரிடம் விசாரணை நடத்தவில்லை. பிறகு, அவர்களில் 18 எம்.எல்.ஏ-க்களைத் தகுதிநீக்கம் செய்தார் சபாநாயகர். அப்போதும் ஆளுநர் இந்த ஆட்சியின் பலத்தைக் கேள்வி கேட்க வில்லை. இப்போது தேர்தல் ஆணையம், ‘111 உறுப்பினர் களின் ஆதரவுதான் இருக்கிறது’ என்று சொல்லி விட்டது. புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சும்மாதான் இருப்பார். மத்திய அரசுக்கு ஆதரவான நிலையில் எடப்பாடி அரசு இருக்கிறது என்பதைத்தவிர, இதற்கு வேறு எந்தக் காரணமும் இல்லை. இதே அ.தி.மு.க அரசு, காங்கிரஸ் ஆதரவு அரசாங்கமாக இருந்தால், ஒரே ஓர் உறுப்பினர் ஆதரவு குறைந்தாலும் எப்போதோ சட்டசபையை முடக்கி யிருப்பார்கள். இந்தியாவில் ஜனநாயகம் இப்படித்தான் இருக்கிறது!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,
757, அண்ணா சாலை, சென்னை- 600 002
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!