Published:Updated:

சஸ்பெண்டை ரத்து செய்யக் கோரி தே.மு.தி.க எம்.எல்.ஏ.க்கள் வழக்கு!

சஸ்பெண்டை ரத்து செய்யக் கோரி தே.மு.தி.க எம்.எல்.ஏ.க்கள் வழக்கு!
சஸ்பெண்டை ரத்து செய்யக் கோரி தே.மு.தி.க எம்.எல்.ஏ.க்கள் வழக்கு!
சஸ்பெண்டை ரத்து செய்யக் கோரி தே.மு.தி.க எம்.எல்.ஏ.க்கள் வழக்கு!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து  தே.மு.தி.க எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

தமிழக சட்டப்பேரவையில் ரகளையில் ஈடுபட்டதாக கூறி தே.மு.தி.க எம்.எல்.ஏ.க்கள் நல்லத்தம்பி, பார்த்தசாரதி உள்பட 6 பேர் ஆறு மாதங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யக் கோரி தே.மு.தி.க. எம்எல்ஏக்கள் 6 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடர்ந்துள்ளனர்.

##~~##
அதில், சட்டப்பேரவையில் இருந்து தாங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதால் தொகுதி பணிகள் பாதிக்கப்படுகிறது என்று மனுவில் தெரிவித்துள்ளனர்.
தாங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் ஒரு தரப்பை மட்டுமே விசாரித்து எடுக்கப்பட்ட முடிவை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் மனுவில் கூறியுள்ளனர்.
இந்த மனு மீது நாளை விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதி ராஜேஸ்வரன் அறிவித்துள்ளார்.