Published:Updated:

கம்பேரிஸன் கோவாலு!

கம்பேரிஸன் கோவாலு!
பிரீமியம் ஸ்டோரி
கம்பேரிஸன் கோவாலு!

கம்பேரிஸன் கோவாலு!

கம்பேரிஸன் கோவாலு!

கம்பேரிஸன் கோவாலு!

Published:Updated:
கம்பேரிஸன் கோவாலு!
பிரீமியம் ஸ்டோரி
கம்பேரிஸன் கோவாலு!

ஆர்.கே நகர் இடைத்தேர்தல் நெருங்கிவிட்டது. அ.தி.மு.க அதிகாரம் ஒன்று, அதிகாரம் இரண்டு, தி.மு.க எனப் பெரிய கட்சிகள் எல்லாம் முண்டாசு கட்டிக்கொண்டு இறங்கிவிட்டன. நடுவே, ‘ஹே... நானும் இருக்கேன் பாரு’ எனக் குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருக்கிறது பி.ஜே.பி. ‘ஒரு பிரபலத்தை எங்கள் சார்பில் நிறுத்தப்போகிறோம்’ என்று வேறு பி.ஜே.பி சொல்கிறது. தேர்தலில் அவர்களுக்கும் மற்ற கட்சிகளுக்கும் என்ன வித்தியாசம்?

கம்பேரிஸன் கோவாலு!

மற்ற கட்சிகள்:
கட்சி செல்வாக்கு, தலைவர்களின் உரை, வேட்பாளரின் ‘தாராள’ குணம் போன்றவையே வெற்றி வாய்ப்புகளைத் தீர்மானிக்கின்றன.

பி.ஜே.பி:

இவர்களின் அதிகபட்ச கவலையே, ‘டெபாசிட் வருமா வராதா?’ என்பதுதான். வெற்றியெல்லாம் அவர்கள் சொல்லும் ‘அச்சே தின்’னில் வந்தால்தான் உண்டு. அப்ப, ரெண்டுக்குமே வாய்ப்பு இல்லை!  

மற்ற கட்சிகள்:
அதிகாரபூர்வ வேட்பாளருக்கு டம்மி வேட்பாளர் ஒருவரை நிறுத்துவார்கள். அது, பெரும்பாலும் அந்த வேட்பாளரின் இணையராகவோ, குடும்ப உறுப்பினராகவோ இருப்பார்.

பி.ஜே.பி:
கரகாட்ட கோஷ்டி... ஸாரி, தமிழக வரலாற்றிலேயே தங்கள் கட்சிக்கு டம்மியாக இன்னொரு கட்சியையே வைத்துக்கொண்டு களமிறங்கும் ஆட்கள், இவர்கள் மட்டும்தான். யாரா? ஏன்... உங்களுக்குத் தெரியாதாக்கும்!

மற்ற கட்சிகள்:
கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் தொடங்கி, தலைவர்கள் வரை எல்லோரும் சூறாவளியாகச் சுற்றி வருவார்கள். பிரசாரங்களில் அனல் பறக்கும்.

பி.ஜே.பி:
டி.வி விவாத நிகழ்ச்சிகளில் வருபவர்கள்தான் முதல்கட்டத் தலைவர்கள் என்பதால், வழக்கம்போல பேச்சுக்கு மட்டும் பஞ்சமிருக்காது.

மற்ற கட்சிகள்:
தொகுதியில் நன்கு அறிமுகமான, செல்வாக்கான ஒருவரை நிறுத்துவார்கள். பிரசாரங்களில் அவர் முகமே பிரதானமாக இருக்கும்.

பி.ஜே.பி:
‘பிரபலமானவரை நிறுத்துகிறோம்’ என, பழைய ராஜ்கிரண் படங்களில் ஃப்ரேம் ஓரமாக வந்து நின்றவரை எல்லாம் களமிறக்குவார்கள். பாவம், அவங்க என்ன வெச்சுக்கிட்டா வஞ்சகம் பண்றாங்க?

ஓவியம்: பிரேம் டாவின்ஸி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!