Published:Updated:

பொலிட்டிகல் பொடிமாஸ்!

பொலிட்டிகல் பொடிமாஸ்!
பிரீமியம் ஸ்டோரி
பொலிட்டிகல் பொடிமாஸ்!

பொலிட்டிகல் பொடிமாஸ்!

பொலிட்டிகல் பொடிமாஸ்!

பொலிட்டிகல் பொடிமாஸ்!

Published:Updated:
பொலிட்டிகல் பொடிமாஸ்!
பிரீமியம் ஸ்டோரி
பொலிட்டிகல் பொடிமாஸ்!

சபதம் எடுத்த தங்க தமிழ்ச்செல்வன்!

.தி.மு.க-வுக்கு எப்போதுமே பரபரப்பு ஏரியா, தேனி மாவட்டம்.      ஓ.பன்னீர்செல்வம் தனி அணி கண்டபோது, மாவட்ட நிர்வாகிகள் அனைவரையும் வளைத்து வைத்தார் தங்க தமிழ்ச்செல்வன். ஆனால், பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி கிடைத்ததும், மாவட்டத்தின் பெரும்பாலான கட்சி நிர்வாகிகள் பன்னீர் பக்கம் போய்விட்டார்கள். இதனால், தினகரன் அணியின் ‘தளபதி’யான தங்க தமிழ்ச்செல்வன் விரக்தியில் உள்ளார்.

பொலிட்டிகல் பொடிமாஸ்!

கடந்த மாதம் உத்தமபாளையத்தில் பொதுக்கூட்டம் நடத்திய தங்க தமிழ்ச்செல்வன், பிறகு தேனி பக்கமே எட்டிப்பார்க்கவில்லை. அவரின் உதவியாளர் வீட்டில் நடந்த வருமானவரித் துறை சோதனையின்போதுகூட, சென்னையில் இருந்தே பேட்டி கொடுத்தார் தங்க தமிழ். பல மாவட்டங்களில் தொடர் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவரும் அவர், சொந்த ஊர் பக்கம் தலைகாட்டாமல் இருக்க என்ன காரணம்? ‘‘சொந்த மாவட்டத்தில் இப்படிச் செய்துவிட்டார்களே என்ற வருத்தம்தான் அவருக்கு. தினகரன் அணியை நிலைநிறுத்திக் காட்டிவிட்டு, எம்.எல்.ஏ பதவி தகுதிநீக்கம் தொடர்பான வழக்கில் ஜெயித்துவிட்டுத்தான் தேனிக்கு வருவேன் என்று சபதம் எடுத்திருக்கிறார்’’ என்கிறார்கள் தங்க தமிழின் ஆதரவாளர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பொலிட்டிகல் பொடிமாஸ்!

சரண்டரான உதயகுமார்!

து
ணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் பெயர் போடாமல், முதல்வர் எடப்பாடியை வைத்து மதுரையில் அ.தி.மு.க கொடியேற்று விழா நடத்தி சர்ச்சைக்கு அடிபோட்டார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். நவம்பர்  25-ம் தேதி பன்னீரைப் புறக்கணித்த உதயகுமார், மூன்று நாள்களுக்குப் பின் அதே மதுரையில் அவரிடம் சரண்டனார்.

நவம்பர் 28-ம் தேதி தேனி செல்ல விமானத்தில் மதுரைக்கு வந்த பன்னீரை வரவேற்கச் சென்றார் அமைச்சர் உதயகுமார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத பன்னீர், பூரிப்போடு அந்த வரவேற்பை ஏற்றுக்கொண்டார். பிறகு ஊருக்குச் செல்ல கிளம்பிய பன்னீரை, ‘‘ஆர்.கே. நகர் தேர்தலுக்காக மதுரை புறநகர் மாவட்டம் சார்பாக ராஜன்செல்லப்பா தலைமையில் நடைபெறும் ஆலோசனைக்கூட்டத்தில் கலந்துகொள்ள வரவேண்டும்’’ என்று உதயகுமார் பணிவாகக் கேட்க, பன்னீரும் உடனே கிளம்பிவிட்டார். அந்தக் கூட்டத்தில், ‘‘நமக்குள் எத்தனை அணிகள் என்று மற்றவர்கள் எண்ணிக்கொண்டிருந்த வேளையில், நாம் ஒரே அணிதான் என்று இந்தக் கூட்டத்தின் மூலம் நிரூபித்துளோம்’’ என உதயகுமார் பேச, ‘‘எடப்பாடி பழனிசாமியும் நானும் இரட்டைக்குழல் துப்பாக்கியாக செயல்படுவோம்’’ என்று பேசிவிட்டுக் கிளம்பினார் பன்னீர்.

பொலிட்டிகல் பொடிமாஸ்!

‘தியானம்’ செய்த அமைச்சர்கள்!

‘சே
க்கிழார் எழுதிய கம்ப ராமாயணம்’ என்ற முதல்வர் எடப்பாடியின் கண்டுபிடிப்புப் பேச்சால் தஞ்சாவூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா புகழ்பெற்றிருக்கிறது.

விழாவுக்குப் பாதுகாப்பு கொடுப்பதற்காக இரண்டு நாள்களுக்கு முன்பே தமிழகம் முழுவதிலுமிருந்து காவல்துறை உயரதிகாரிகள் தஞ்சைக்கு வந்தனர். அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் 20 ஆடுகளை வெட்டி ஸ்பெஷல் பிரியாணி சமைத்துப் பரிமாறியிருக்கிறார்கள். புதிய பஸ் நிலையம் அருகே ஒரு திருமண மண்டபத்துக்கு வரவழைத்து இந்த உபசரிப்பு நடந்தது.

விழா மேடையில் பெரும்பாலான அமைச்சர்கள் ‘தியான’ நிலையில் அமர்ந்திருந்தனர். ‘‘இரட்டை இலைச் சின்னம் கிடைத்த பிறகு, சசிகலாவின் சொந்த மாவட்டத்தில் கொண்டாடப்படும் இந்த விழாவில் உற்சாகமாக இருக்க வேண்டிய அமைச்சர்கள், இப்படி ‘கொர்’ ஆகிவிட்டார்களே...’ என வேதனைப்பட்டனர் தொண்டர்கள்.

பொலிட்டிகல் பொடிமாஸ்!

விஷாலுக்கு எதிராகக் கொந்தளிக்கும் அ.தி.மு.க!

ந்துவட்டிக் கொடுமையால் தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாகப் பேசிய விஷால், ‘அன்புச்செழியனுக்கு ஆதரவாக அமைச்சர், எம்.எல்.ஏ என யார் வந்தாலும் விட மாட்டோம்’ என்றார். விஷாலின் இந்தப் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நெல்லையில் அ.தி.மு.க சார்பாக ஃப்ளெக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. நெல்லை மாநகராட்சியின் முன்னாள் கவுன்சிலரும்   அ.தி.மு.க-வின் பாளையங்கோட்டை பகுதி முன்னாள் செயலாளருமான எஸ்.டி.காமராஜ் வைத்திருக்கும் இந்த ஃப்ளெக்ஸ் போர்டுகளைப் பார்க்கிறவர்கள், ‘ஒரு பேச்சுக்குச் சொன்னதையெல்லாம் பிரச்னையா ஆக்கறாங்களேப்பா’ என்கிறார்கள்.

- பி.ஆண்டனிராஜ், செ.சல்மான், ஏ.ராம், எம்.கணேஷ்
படங்கள்: கே.குணசீலன், ஈ.ஜெ.நந்தகுமார்