Published:Updated:

“இலை போனாலும் தொப்பி வேணும்!”

“இலை போனாலும் தொப்பி வேணும்!”
பிரீமியம் ஸ்டோரி
“இலை போனாலும் தொப்பி வேணும்!”

தினகரன் வழக்கு மர்மம்

“இலை போனாலும் தொப்பி வேணும்!”

தினகரன் வழக்கு மர்மம்

Published:Updated:
“இலை போனாலும் தொப்பி வேணும்!”
பிரீமியம் ஸ்டோரி
“இலை போனாலும் தொப்பி வேணும்!”

‘‘இரட்டை இலைதான் பறிபோய்விட்டது. கடந்த முறை ஆர்.கே. நகர் தொகுதியில் பிரபலம் அடைந்த தொப்பி சின்னத்தையாவது கைப்பற்றிவிட வேண்டும்’’ என்று வழக்கறிஞர்களிடம் கேட்டிருக்கிறார் தினகரன். இதற்கு ஏற்பத்தான் தேர்தல் ஆணையத் தீர்ப்பு வெளியான எட்டாவது நாள், டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது தினகரன் தரப்பு.

இரட்டை இலையை முதல்வர் அணிக்குத் தேர்தல் ஆணையம் வழங்கியதை எதிர்த்து முதலில் உச்ச நீதிமன்றத்தில்தான் வழக்குத் தொடரத் திட்டமிடப் பட்டது. ஆனால், ‘எங்களை விசாரிக்காமல் இந்த விவகாரத்தில் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது’ என உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடியும் பன்னீரும் தனித்தனியே கேவியட் மனு தாக்கல் செய்திருந்தனர். அதனால் அங்கு உடனடித் தடை போன்ற பலன் எதுவும் கிடைக்காமல் போகும் என்பதைத் தினகரன் தரப்பு வழக்கறிஞர்களான அபிஷேக் சிங்வி, மோகித் பால் உள்ளிட்டவர்கள் உணர்ந்திருந்தனர்.

“இலை போனாலும் தொப்பி வேணும்!”

சீனியர் வழக்கறிஞரான கீர்த்தி உப்பல், ‘‘தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போடலாம். அந்த வாய்ப்பை ஏன் வீணடிக்க வேண்டும்?’’ என்று கேட்டார். அதன் பின்னர்தான் அதிரடியாக, உயர் நீதிமன்றத்தில் நவம்பர் 30-ம் தேதி வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, ‘ஆர்.கே. நகர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருப்பதால் உடனடியாக விசாரிக்க வேண்டும்’ என்று கோரினர். தலைமை நீதிபதி பொறுப்பு வகிக்கும் நீதிபதி கீதா மித்தல் தலைமையிலான அமர்வு, ‘மறுநாள் பட்டியலில் வழக்கைச் சேர்ப்பதாக’ அரை மணி நேரத்தில் உறுதியளித்தது. ‘தேர்தல் ஆணைய உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து, வழக்கு முடியும்வரை ஆர்.கே. நகர் தேர்தலில் போட்டியிட ஏதுவாக முன்பு இருந்ததுபோன்று இரண்டு அணிகளாகச் செயல்பட உத்தரவிட வேண்டும்’ என்பதுதான் உடனடியான கோரிக்கை. இப்படி நீதிமன்றம் அனுமதித்தாலே தொப்பி சின்னம் தானாகக் கிடைத்துவிடும் என்று கணக்குப் போட்டது தினகரன் தரப்பு. ‘325 போலி ஆவணங்களைப் பன்னீர் மற்றும் எடப்பாடி அணியினர் தாக்கல் செய்திருப்பதை ஆணையம் தமது உத்தரவிலேயே ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால், அது குறித்து முழுமையாக விசாரிக்காமல் முடிவு எடுத்தது’ என்பது உள்பட பல விவரங்களை மனுவில் சுட்டிக்காட்டினர்.

தேர்தல் ஆணையத்தில் நடைபெற்ற வழக்கில், சசிகலாதான் எதிர் மனுதாரராக இருந்தார். ஆனால், இப்போது இந்த வழக்கு தினகரன் பெயரில் தாக்கல் செய்யப்பட்டது. ‘தொப்பியையாவது நீதிமன்றம் பரிசீலிக்குமா’ என்பதுதான் தினகரனின் எதிர்பார்ப்பு.

- டெல்லி பாலா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!