Published:Updated:

ஆர்.கே. நகர் முதல் ரவுண்டு!

ஆர்.கே. நகர் முதல் ரவுண்டு!
பிரீமியம் ஸ்டோரி
ஆர்.கே. நகர் முதல் ரவுண்டு!

ஆர்.கே. நகர் முதல் ரவுண்டு!

ஆர்.கே. நகர் முதல் ரவுண்டு!

ஆர்.கே. நகர் முதல் ரவுண்டு!

Published:Updated:
ஆர்.கே. நகர் முதல் ரவுண்டு!
பிரீமியம் ஸ்டோரி
ஆர்.கே. நகர் முதல் ரவுண்டு!

“இரட்டை இலை மீது கீறல் விழாது...” - மதுசூதனன்

“தி.மு.க.வை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்!” - மருதுகணேஷ்

ர்.கே. நகர் சந்திக்கும் மூன்றாவது இடைத்தேர்தல் அறிவிப்பு இது. முதல் இடைத் தேர்தலில், முதல்வராக இருந்த ஜெயலலிதா வென்றார். அடுத்த இடைத்தேர்தல் நடக்கவே இல்லை. இப்போது, மூன்றாவது இடைத்தேர்தல் அறிவிப்பு. நடக்காத இடைத்தேர்தலில் அணிபிரிந்து போட்டியிட்டவர்களில் மதுசூதனன் இப்போது அ.தி.மு.க வேட்பாளர்; தினகரன் சுயேச்சை. தி.மு.க-வின் மருதுகணேஷ், நாம் தமிழர் கட்சியின் கலைக்கோட்டுதயம் ஆகியோர் மீண்டும் போட்டியிடுகிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆர்.கே. நகர் முதல் ரவுண்டு!

மீண்டு வந்த இரட்டை இலைச் சின்னம், கட்சிக்கு இருக்கும் நிரந்தர வாக்கு வங்கி ஆகியன அ.தி.மு.க வேட்பாளர் மதுசூதனனுக்குப் பலம் சேர்க்கிறது. இன்னொரு பக்கம், மதுசூதனனை வீழ்த்த கட்சிக்குள் நடக்கும் குழிபறிப்பு, தொகுதியில் வெளிப்படையாகவே தெரிகிறது. மதுசூதனனின் எதிர்முகாமில் இருந்த வெங்கடேஷ்பாபு எம்.பி-யிடம் தொகுதியின் தேர்தல் பொறுப்பை ஒப்படைத்தது முதல், பல அம்சங்கள் மதுசூதனனுக்குப் பலவீனம். தொகுதியைக் கவனிக்க 12 அமைச்சர்களைப் போட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

பிரசார இடைவேளையில் மதுசூதனனிடம் பேசினோம். ‘‘தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ், பொய்யான வாக்குறுதிகளை மக்கள் முன் வைக்கிறார். இது எங்கள் கோட்டை. இரட்டை இலையின்மீது ஒரு கீறல்கூட விழாமல் மக்கள் பார்த்துக்கொள்வார்கள். இந்தத் தொகுதியில் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் மக்கள் என்னை அறிவார்கள். தினகரன் இங்கு படுதோல்வி அடையப்போவது உறுதி. தோல்வியைத் தனியாக ருசித்து அவருக்குப் பழக்கமில்லை. அதனால்தான் நடிகர் விஷாலைக் கூடவே கூட்டிவந்திருக்கிறார். தினகரனுடன் சேர்ந்து விஷாலும் செல்லாக்காசு ஆகப் போகிறார்’’ என்றார் சிரித்தபடி.

தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷுக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், ம.தி.மு.க., வி.சி.க என அடுத்தடுத்து கட்சிகளின் ஆதரவு சேர்ந்திருப்பது கூடுதல் பலம். கொஞ்சமும் சோர்வில்லாமல் வாக்குச் சேகரிப்பில் அவர் காட்டும் தீவிரம் அபாரம். பிரசாரத்தின் இடையே நம்மிடம் பேசிய மருதுகணேஷ், ‘‘நான் மண்ணின் மைந்தன். முதியோர் ஓய்வூதியம் பெறுவதில் உள்ள குறைபாடுகள் முதல், அடிப்படைச் சுகாதாரப் பிரச்னை வரையில் அறிந்திருக்கிறேன். அண்மையில் தொகுதிக்கு ஸ்டாலின் வந்தபோது, மக்கள் அவரிடம்போய் குறைகளைச் சொன்னார்கள். அப்போது, ஸ்டாலின் குரலுக்கு அதிகாரிகள் ஓடோடி வந்து, ‘உரிய நடவடிக்கை எடுக்கிறோம்’ என்று உறுதியளித்தனர். தி.மு.க-வைப் பெரிய அளவில் மக்கள் நம்புகிறார்கள், எதிர்பார்க்கிறார்கள் என்பதற்கு இதுவே சான்று’’ என்றார்.

டி.டி.வி.தினகரன் தரப்பு இன்னும் பிரசாரத்தைத் தொடங்க வில்லை. தினகரனின் பிரசாரத் துக்கு முட்டுக்கட்டை போடுவது போல், அவர் மீது ‘தேர்தல் நடத்தை விதிமீறல்’ புகார் கொடுக்கப் பட்டுள்ளது.

கட்சிகளின் வேகம் இப்படியிருக்க, தொகுதி மக்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள்? சிலரிடம் பேசினோம். எல்லோருமே தனிப்பட்ட பிரச்னைகளையே முன்னிலைப்படுத்திப் பேசினர். தேர்தல் முடிவைத் தீர்மானிக்கப்போகும் பொதுப்பிரச்னை என எதையும் அவர்கள் கருதவில்லை என்பது புரிந்தது.

ஆர்.கே. நகர் முதல் ரவுண்டு!

ஆதிலட்சுமி
ழைவிட்டு 15 நாளாச்சு, இன்னும் வீட்டுக்குள்ள வந்த தண்ணி வெளியே போக வழியில்ல. அக்கம் பக்கத்து வீட்டுத் திண்ணைகள்ல போயிதான் ராத்திரியில தங்கிக்கிறோம். எந்த முகத்தை வெச்சிக்கிட்டு இந்தக் கட்சிக்காரங்க ஓட்டுக் கேட்க வர்றாங்கன்னு தெரியல...

‘பவர்குப்பம்’ சுரேஷ்
மீ
னவர் பிரச்னையைத் தீர்க்கக் கூடிய ஒருவர்கூட இதுவரை தொகுதிக்குக் கிடைக்கல... இது எங்களின் துரதிர்ஷ்டம். அத்தனை விஷயத்திலும் கமிஷன் அடிப்பவர்களே, யோக்கியர்கள்போல வேஷம் போடுறாங்க...

கனகவல்லி
ந்தத் தண்ணியை மொண்டு ஊத்தும்போது கீழே விழுந்து முதுகு எலும்பு உடைஞ்சுடுச்சுப்பா. ஓட்டுக் கேட்டு வர்றவங்கள்ல... யாராவது எலும்பை ஒட்டவைப்பாங்களா?

ஆர்.கே. நகர் முதல் ரவுண்டு!

வெங்கட்டம்மா
மு
தியோர் பென்ஷனை எனக்கு நிறுத்தி மூணு மாசம் ஆச்சு. போஸ்ட்மேன் மூலமா கொடுக்கும்போது சரியா கைக்குப் பணம் வந்துச்சு. பேங்க் மூலமா பணம் வரும்னு மூணு மாதமாகச் சுத்த விட்டிருக்காங்க. இப்போ கேட்டா, ‘உனக்கு அனுப்புற பணம் இன்னொருவர் பெயருக்குப் போகுது. (இதே விஷயத்தை பலர் குறிப்பிட்டனர்). அது யார்னு போய்ப் பார்த்துக் கண்டுபிடி’ன்னு சொல்றாங்க.

என்ன கொடுமை இது!

மின்னல்கொடி
டன் வாங்கி, பூ கட்டி விற்கும் எனக்கு ஒரு வேளை சோற்றுக்குச் சம்பாதித்தாலே பெரிய விஷயம். அரசாங்க பென்ஷனைக் கேட்டுப் பலமுறை மனு கொடுத்தேன். எதுவும் நடக்கலை.

சகுந்தலா
ல்லாம் ஜெயலலிதாவோட போச்சுப்பா. வர்றவங்க நல்லது செய்தா சரி.  விஷாலு எல்லாம் எம்.ஜி.ஆர் ஆகமுடியுமா?

- ந.பா.சேதுராமன்
படங்கள்: வீ.ஸ்ரீனிவாசலு

‘‘செல்லாத நோட்டு... செல்லாத ஓட்டு!’’

ஆர்
.கே.நகரில் ‘போலி வாக்காளர்கள்’ எனத் தேர்தல் ஆணையம் 45,819 பெயர்களை இனம்கண்டு நீக்கியுள்ளது. ஆனால், ‘‘இப்படி நீக்கப்பட்டவர்களில் பலரும் சொந்த வீட்டுக்காரர்கள், மற்ற பலர் 50 ஆண்டுகளாக இங்கேயே வசிக்கிறவர்கள்’’ எனப் புகார் சொல்கிறார்கள். இஸ்லாமியர்கள் நிறைந்துள்ள நேதாஜி நகர் பக்கம் போனோம். இங்கிருக்கும் ஐந்து தெருக்களிலும் இந்த ‘நீக்கம்’ தாறுமாறாக நடந்திருப்பதை ஆவணங்களுடன் நிரூபிக்கின்றனர் வாக்காளர்கள்.

ஆர்.கே. நகர் முதல் ரவுண்டு!

நேதாஜி நகரில் இரண்டு தலைமுறைகளாக வாழ்ந்துவரும் புரோஸ்கான், நம்முடைய வருகையைப் பள்ளிவாசலில் உள்ளவர்களிடம் தெரிவிக்க, சில நிமிடங்களில் அங்கே நூறு பேருக்கும்மேல் திரண்டு வந்துவிட்டனர். நேரம் கூடக்கூட நூறு, ஐந்நூறு ஆனது. அனைவர் கைகளிலும் வாக்காளர் அடையாள அட்டைகள் இருந்தன; கடந்த முறை வாக்களித்ததற்கான சான்றும் இருக்கிறது.

முகமதுகனி என்பவர், ‘‘என் மனைவி பெனாஸிர் பெயரை ‘இறந்து போனவர்கள்’ பட்டியலில் வைத்துவிட்டார்கள். மாமனார் அப்சல் பெயரை நீக்கிவிட்டார்கள். என் பெயரை மட்டும் நீக்கவில்லை’’ என்றார். ரம்ஜான் பேகம் என்பவர், ‘‘கடந்த முறை ஓட்டுப் போட்டேன். இந்த முறை என் பெயர் லிஸ்ட்டில் இல்லை. அதிகாரிகளைப் போய்ப் பார்த்துக் கேட்டேன். யாரும் உரிய பதிலைச் சொல்லவில்லை’’ என்றார். காஜா என்பவர், ‘‘எங்கள் குடும்பத்தில் அனைவரின் பெயர்களையும் நீக்கிவிட்டனர்’’ என்றார். தமீமுன் அன்சாரி இன்னும் கோபமாக, ‘‘மோடியின் ஆட்சியில் செல்லாத நோட்டாகவும், தேர்தல் ஆணையத்தால் செல்லாத ஓட்டாகவும் நாங்கள் வாழ்கிறோம். எங்களைத் திட்டமிட்டே வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கியிருக்கிறார்கள்’’ என்றார்.

புரோஸ்கான், ‘‘ஆதார் அட்டை போல், வாக்களிப்பதையும் ‘பயோ-மெட்ரிக்’ முறையில் கொண்டுவந்துவிடலாம். இதற்குப் பெரிய செலவு ஆகப்போவதில்லை. யாரும் இரண்டு முறை வாக்களிக்க முடியாது. இன்னொருவர் வாக்கை மாற்றிப்போட முடியாது. போலி என்பதே இருக்காது. ஆனால், அரசியல் கட்சிகளின் குட்டு உடைந்துவிடும் என்பதற்காகக் காலங்காலமாய் நடந்துவரும் தேர்தல் நாடகத்தில் இந்த முறை நாங்கள் சிக்கியிருக்கிறோம்’’ என்றார் விரக்தியாக. 

இதுகுறித்து சென்னை மாநகராட்சி நான்காவது மண்டல உதவி ஆணையர் அலுவலகத்தைத் தொடர்புகொண்டோம். ‘‘புகார்கள் வந்ததால், சிறப்பு முகாம் நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது’’ என்றனர். ‘‘இன்றும்கூட அதே நிலைமைதான் நீடிக்கிறதே சார்?’’ என்றதற்குப் பதிலே இல்லை.