Published:Updated:

பொலிட்டிகல் பொடிமாஸ்!

பொலிட்டிகல் பொடிமாஸ்!
பிரீமியம் ஸ்டோரி
பொலிட்டிகல் பொடிமாஸ்!

பொலிட்டிகல் பொடிமாஸ்!

பொலிட்டிகல் பொடிமாஸ்!

பொலிட்டிகல் பொடிமாஸ்!

Published:Updated:
பொலிட்டிகல் பொடிமாஸ்!
பிரீமியம் ஸ்டோரி
பொலிட்டிகல் பொடிமாஸ்!
பொலிட்டிகல் பொடிமாஸ்!

வித்தியாசம் காட்டியும் கூப்பிடலை!

தூ
க்குக்கயிற்றில் தொங்குவது, சவப்பெட்டிக்குள் படுத்துக்கொண்டு சுற்றியிருப்பவர்கள் அழுவது, ஆராய்ச்சி மணி அடிப்பது எனத் தினமொரு போராட்டத்தை நடத்தி வருகிறார்கள் மதுரை அரசு இராசாசி மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முதுநிலை மாணவர்கள். மருத்துவக் கல்லூரி நுழைவாயிலில் இவர்களின் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. ‘‘மருத்துவப்பணியில் உள்ள நடைமுறைகளைப் பின்பற்றாமல் தனியார் மருத்துவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, முறைகேடாக நடந்த மருத்துவர் தேர்வை ரத்துசெய்ய வேண்டும். முறைகேடாக நடத்தப்பட்ட நேர்முகக் கலந்தாய்வை ரத்துசெய்ய வேண்டும். 69 சதவிகித இட ஒதுக்கீட்டை முறையாகக் கடைபிடிக்க வேண்டும்’’ என்பவைதான் மாணவர்களின் கோரிக்கைகள். இவர்களை அழைத்துப் பேசாமல் வேடிக்கை பார்க்கிறது அரசு.

பொலிட்டிகல் பொடிமாஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரகசியமாகத் திறக்கப்பட்ட ஜெ. சிலை!

கோ
வையில் அண்ணா சிலை இருந்த இடத்தில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் முழுஉருவச் சிலைகள் திடீரெனத் தோன்றியுள்ளன.கோவையில் டிசம்பர் 3-ம்தேதி நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, இந்த இரு சிலைகளும் திறக்கப்பட்டுள்ளன. கடைசிநாள் வரை இதை ரகசியமாகவே வைத்திருந்தார் அமைச்சர் வேலுமணி. அண்ணா சிலை சீரமைப்புப் பணி தொடங்கியதிலிருந்து 2-ம் தேதி நள்ளிரவு வரை அந்த இடத்தைச் சுற்றி தகரத் தடுப்பால் மூடியிருந்தனர். இந்தச் சிலைகளை அதிகாரபூர்வமாக திறந்து வைக்கவில்லை என்பதுதான் வேடிக்கை. 

‘‘எம்.ஜி.ஆரின் புகைப்படத்தைத் திறந்து வைக்கும் முதல்வர், ஏன் இந்த சிலைகளைத் திறந்து வைக்கவில்லை?’’ என்று அமைச்சர் வேலுமணியிடம் பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, ‘‘நல்ல நேரத்துல ஏன் இப்படியெல்லாம் கேட்குறீங்க’’ என நழுவினார். கோவையில் அம்பேத்கர் சிலை வைப்பதற்கு 20 ஆண்டுகளாக போலீஸார் அனுமதி மறுத்துவருகின்றனர். எனவே, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

பொலிட்டிகல் பொடிமாஸ்!

எடப்பாடிக்கு பாடம் சொல்ல யானை ஊர்வலம்!

‘க
ம்பராமாயணத்தை எழுதிய சேக்கிழார்’ எனத் தஞ்சாவூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொன்னாலும் சொன்னார்... அவரை நெட்டிசன்கள் காய்ச்சி எடுக்கிறார்கள். எடப்பாடிக்கு பாடம் நடத்தும்விதமாக, கும்பகோணத்தில் உள்ள ஜோதிமலை இறைபணி திருக்கூடம் சார்பில், அலங்கரிக்கப்பட்ட யானைமீது சேக்கிழார் படத்தையும், பெரியபுராண நூலையும் வைத்து ஊர்வலம் நடத்தப்பட்டது. 

அந்த அமைப்பின் தலைவரான திருவடிக்குடில் சுவாமிகள், ‘‘எடப்பாடி பழனிசாமியால் ஒரு விதத்தில் மிகப்பெரிய நன்மை நடந்துள்ளது. சேக்கிழார் மற்றும் பெரியபுராணத்தின் சிறப்பையும் இன்றைய தலைமுறையினரிடம் கொண்டுசெல்ல அவர் உதவியிருக்கிறார். முதல்வரைக் கிண்டல் செய்யும் நோக்கம் எங்களுக்கு இல்லை. உண்மையான தகவலை அவருக்கு உணர்த்துவதற்காக இது நடத்தப்பட்டது’’ என்றார்.

பொலிட்டிகல் பொடிமாஸ்!

‘‘அவரே சொல்லியிருப்பார்!’’

ரசு சார்பில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவைப் பிரமாண்டமாகக் கொண்டாடிவரும் நிலையில், மதுரை மாநகர     எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றங்கள் இணைந்து டிசம்பர் 3-ம் தேதி மதுரையில் ஒரு விழாவைக் கொண்டாடினார்கள். உள்ளூர் அ.தி.மு.க நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் யாரையும் அழைக்காமல் நடந்த இவ்விழாவில், சைதை துரைசாமி கலந்துகொண்டார். நடிகைகள் லதா, சச்சு மற்றும் ஜானகி அம்மையாரின் வளர்ப்பு மகள் சுதா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

செய்தியாளர்களிடம் பேசிய நடிகை லதா, ‘‘அ.தி.மு.க-வில் சேர்ந்த மூன்றாவது பெண் உறுப்பினர் நான்தான். ‘ஜெயலிதாவின் மகள்’ என்று சொல்பவரை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. ஊடகங்கள் இதைப் பெரிதுபடுத்தக் கூடாது. ஜெயலலிதா தைரியமானவர். அப்படிக் குழந்தை இருந்திருந்தால் அவரே சொல்லியிருப்பார். சொத்துக்கு ஆசைப்பட்டு அம்ருதா போன்றவர்கள் அவதூறு பரப்புகிறார்கள்’’ என்றார்.

அரசு கொண்டாடும் விழாக்களில் எம்.ஜி.ஆரின் புகழ் மறைக்கப்பட்டு, எடப்பாடியின் புகழ் பாடப்படுவதால், அதற்குப் போட்டியாக சைதை துரைசாமியின் ஆதரவில் இந்த விழாவை நடத்தியதாகச் சொல்லப்படுகிறது.

பொலிட்டிகல் பொடிமாஸ்!

6.12.17 ஜூ.வி இதழில் ‘‘தட்டிக் கொடுத்தா... ஜெயிச்சுக் காட்டுவோம்!’’ என்ற தலைப்பில் வெளியான திருநங்கை மருத்துவ மாணவி பற்றிய கட்டுரையில், மாணவி தாரிகா பானுவின் படத்துக்குப் பதிலாக மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ரமணியின் படம் தவறுதலாக இடம்பெற்று விட்டது. தவறுக்கு வருந்துகிறோம். மாணவி தாரிகா பானுவின் படம் இங்கே...

- செ.சல்மான், கு.ராமகிருஷ்ணன், எம்.புண்ணியமூர்த்தி
படங்கள்: தி.விஜய், ஈ.ஜெ.நந்தகுமார், வீ.சதீஷ்குமார்