Published:Updated:

தூண்டிவிட்டது தினகரனா... கமல்ஹாசனா?

தூண்டிவிட்டது தினகரனா... கமல்ஹாசனா?
பிரீமியம் ஸ்டோரி
தூண்டிவிட்டது தினகரனா... கமல்ஹாசனா?

விஷால் பேட்டி

தூண்டிவிட்டது தினகரனா... கமல்ஹாசனா?

விஷால் பேட்டி

Published:Updated:
தூண்டிவிட்டது தினகரனா... கமல்ஹாசனா?
பிரீமியம் ஸ்டோரி
தூண்டிவிட்டது தினகரனா... கமல்ஹாசனா?

‘‘பொதுத்தேர்தல் வருவதற்கு இன்னும் மூன்று வருஷங்களுக்கு மேலாகும். அதுவரை பொறுத்துக்கொண்டு இருந்தால் நான் ஓர் அரசியல்வாதி; அந்தளவுக்கு எனக்குப் பொறுமை இல்லை. ‘இடைத்தேர்தலில் நின்றுதான் பார்ப்போமே’ என முடிவெடுத்தேன். ஆர்.கே. நகர் மக்கள், ‘எங்கள் தொகுதியை சிங்கப்பூர் மாதிரி மாற்றிக்காட்டுங்கள்’ என்றா அரசியல்வாதிகளிடம் கேட்கிறார்கள்? சுத்தமான குடிநீர், கழிவுநீர் அகற்றம், அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவது... இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். சுதந்திரம் பெற்று 70 வருஷங்கள் ஆகியும் இதையெல்லாம் செய்யவில்லை என்றால்,. நீங்கள் எதற்கு? நான் இறங்கி அவர்களுக்காக உழைக்க முடிவெடுத்து விட்டேன்’’ என அதிரடியாகச் சொல்கிறார் நடிகர் விஷால். அவரிடம் பேசினோம்...

தூண்டிவிட்டது தினகரனா... கமல்ஹாசனா?

‘‘இது திடீர் முடிவா... திட்டமிடப்பட்டதா?’’

‘‘2015-ம் ஆண்டு சென்னையில் பெருவெள்ளம் வந்தபோது ஆர்.கே. நகர் பெரிதும் பாதிக்கப்பட்டது. அப்போது நாங்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளையும் உதவிகளையும் செய்தோம். இங்கே வசிக்கிற மக்கள் அப்போது என்னென்ன பிரச்னைகளோடு அவதிப்பட்டு வந்தார்களோ, அவை எதுவுமே தீர்க்கப்படாமல் இப்போதும் அதே பிரச்னைகளோடு போராடிக்கொண்டு இருப்பதைப் பார்த்து அதிர்ந்து போனேன். இந்தத் தொகுதி மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் குரலாக நான் இருப்பேன்.’’

‘‘பிரபல ஜோதிடர் ஒருவர் சொல்லித்தான் நடிகர் சங்கத் தேர்தலிலும், தயாரிப்பாளர் சங்கத் தேர்தலிலும் நீங்கள் போட்டியிட்டீர்களெனச் சொல்லப்பட்டது.  அதேபோல்தான், ஆர்.கே. நகரிலும் நீங்கள் போட்டியிடுவதாகச் சொல்கிறார்களே?’’

‘‘நான் ஜோதிடம் பார்ப்பதும் இல்லை; அதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை. நடிகர் சங்கத் தேர்தலில் ஜெயித்துப் பொதுச்செயலாளராக ஆனபோது, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினேன். அதன்பிறகே தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டேன். நடிகர் சங்கத்தில் நான் செய்ததைப் பார்த்து தயாரிப்பாளர்கள் என்னை வெற்றிபெறச்செய்தனர். அங்கும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறேன். ‘ஏற்கெனவே இப்படி வாக்குறுதிகளை நிறைவேற்றிய விஷால், நிச்சயம் நமக்குத் தருகின்ற வாக்குறுதியை நிறைவேற்றுவான்’ என்கிற நம்பிக்கை ஆர்.கே. நகர் மக்களுக்கு உள்ளது.’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தூண்டிவிட்டது தினகரனா... கமல்ஹாசனா?

‘‘உங்கள் முடிவுக்கு சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் என்ன கருத்துகள் சொல்லப்பட்டன?’’

‘‘நெருக்கமான நண்பர்கள் பல பேர், ‘உனக்கு இது தேவையா... பேசாமல் பொதுத்தேர்தலில் போட்டியிடலாமே?’ என்றனர். ஆர்யா எனக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார். ‘விஷால்... உனக்காக இதோ இப்பவே களத்துல குதிச்சுட்டேன்’ என்று பிரகாஷ்ராஜ் பெருமிதமாகச்  சொன்னார். டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் வாழ்த்து சொன்னார். காங்கிரஸ் கட்சியில் முக்கியமான பொறுப்பில் இருக்கும் குஷ்பு மேடம், தி.மு.க முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு சாரின் மகன் ராஜா என்று பலரும் மனம்திறந்து வாழ்த்தினர். ‘அரசியல்வாதிகள் தேர்தலின்போது மட்டும் வருகிறார்கள், அதன்பிறகு திரும்பிப் பார்ப்பதே இல்லை’ என்பது போன்ற காட்சிகளில் சினிமாவில் நடித்து நடித்துப் போரடித்து விட்டது. நிஜ வாழ்க்கையிலும் அரசியல்வாதி களைப் பார்த்துப் பார்த்து சலித்து விட்டது. ‘களமிறங்கித்தான் பார்ப்போமே’ என்று முடிவெடுத்துப் போட்டியிடுகிறேன்.’’

‘‘தனிக்கட்சி ஆரம்பிக்கும் எண்ணம் உள்ளதா?’’

‘‘எனக்குள் ஒரு குரல் கேட்டது... அரசியலில் இறங்கிவிட்டேன். ‘அரசியல் கட்சி ஆரம்பிக்கணும், பொதுத்தேர்தலில் இந்த இந்தக் கட்சிகளோடு கூட்டணி சேரவேண்டும், போட்டியிட வேண்டும்’ என்றெல்லாம் எந்தத் திட்டமும் இல்லை. இப்போது நான் எடுத்திருப்பது, இந்தத் தேர்தல் பற்றிய முடிவு மட்டும்தான். அடுத்த கட்டத்தைப்பற்றி இன்னும் யோசிக்கவே இல்லை.’’

தூண்டிவிட்டது தினகரனா... கமல்ஹாசனா?

‘‘உங்கள் பின்னணியில் தினகரன் இருக்கிறாரா?’’

‘‘எனக்குப் பின்னால் யாருமே இல்லை. விஷாலுக்குப் பின்னால் இருப்பது மக்களின் ஆதரவு மட்டுமே. அரசியல் சாராத, மக்களுக்காக போராடக்கூடிய வேட்பாளர் நான். அரசியலில் இருக்கும் யாருடைய பின்னணியும் எனக்கு இல்லை; தேவையும் இல்லை.’’   
             
‘‘நடிகர் கமல்தான் உங்களைத் தூண்டிவிட்டதாகச் சொல்கிறார்களே?’’

‘‘தனிப்பட்ட விஷாலை ஆதரிக்கவேண்டிய அவசியம் கமல் சாருக்கு இல்லை. நடிகர் சங்கத் தேர்தலிலும் சரி, தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலிலும் சரி, என்மீது நம்பிக்கை வைத்து கமல் சார் என்னை ஆதரித்தார். நான் அவரை ஏமாற்றவில்லை.திடீரென முடிவெடுத்து வேட்பு மனு செய்ததால், அவரிடம் பேசவில்லை. கமல் சாரை நிச்சயம் சந்தித்து ஆதரவு கேட்பேன்.’’

‘‘ஏற்கெனவே திரையுலகத்தின்மீது கோபமாக இருக்கும் தமிழக அரசு, உங்களின் அரசியல் பிரவேசத்தால் சினிமா துறைக்கு நெருக்கடி கொடுத்தால் என்ன செய்வீர்கள்?’’

‘‘என்மீது ஏற்படும் கோபத்துக்காக சினிமா துறையைச் சீண்டிப் பார்க்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.’’

- எம்.குணா,படங்கள்: கே.ஜெரோம், வி.ஸ்ரீனிவாசுலு