Published:Updated:

“ப்ளைட்டுக்கு நேரமாச்சு!”

“ப்ளைட்டுக்கு நேரமாச்சு!”
பிரீமியம் ஸ்டோரி
“ப்ளைட்டுக்கு நேரமாச்சு!”

ஓடிய எடப்பாடி

“ப்ளைட்டுக்கு நேரமாச்சு!”

ஓடிய எடப்பாடி

Published:Updated:
“ப்ளைட்டுக்கு நேரமாச்சு!”
பிரீமியம் ஸ்டோரி
“ப்ளைட்டுக்கு நேரமாச்சு!”

ன்னியாகுமரி மக்கள் புயலில் சிக்கித் தவித்த நேரத்தில், அதுபற்றிக் கொஞ்சம்கூட கவலையே படாமல், டிசம்பர் 3-ம் தேதியன்று கோவையில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது எம்.ஜி.ஆர் நூற்றண்டு விழா. வ.உ.சி திடல் முகப்பில் பிரமாண்டமாக பாகுபலி அரண்மனை செட் அமைக்கப்பட்டிருந்தது. ஓர் இளைஞரின் உயிரைக் காவுவாங்கிய பிறகும், ‘உடனடியாக கட்-அவுட்களை அகற்ற வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பிறகும்கூட அவை அகற்றப்படவே இல்லை. மேலும், அதிகமாக வைத்திருந்தார்கள்.  

“ப்ளைட்டுக்கு நேரமாச்சு!”
“ப்ளைட்டுக்கு நேரமாச்சு!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எம்.ஜி.ஆர் பாடல்களை ஒலிக்கவிட்டுக் கொண்டிருந்தவர்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேடைக்கு வரும்போது ‘மெர்சல்’ படத்தின் ‘ஆளப்போறான் தமிழன்’ பாடலை ஒலிக்கவிட்டனர். சபாநாயகர் தனபால், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சர் வேலுமணி, மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை, முதலமைச்சர் பழனிசாமி ஆகியோர்தான் விழாவில் பேசினர். யார் பேசியதையும் அமைச்சர்கள் காது கொடுத்துக் கேட்காமல், லூட்டி அடித்துக்கொண்டிருந்தார்கள்.

விழா ஆரம்பித்தபோது, செல்போனை எடுத்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், போனை நோண்டிக்கொண்டிருந்தார். ‘எப்பய்யா முடிப்பீங்க’ என்ற ஃபீலிலேயே உட்கார்ந்திருந்த போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அவ்வப்போது தூங்கிவழிந்தார். சபாநாயகர் பேசிக்கொண்டிருந்தபோது, திண்டுக்கல் சீனிவாசனின் கண்கள் தூக்கத்தில் தவித்தன. ரொம்ப நேரம் விட்டத்தைப் பார்த்தபடியே அமர்ந்திருந்த ராஜேந்திர பாலாஜி, 4.56-க்கு சொக்கிப்போனார். 5.03-க்கு செல்போனுக்கு ரெஸ்ட் கொடுத்த மாஃபா பாண்டியராஜன், ஸ்நாக்ஸ் சாப்பிட ஆரம்பித்தார். செல்லூர் ராஜு இரண்டு மணி நேரத்தில் மூன்று டீ குடித்தார். இரண்டு முறை ஸ்நாக்ஸ் சாப்பிட்டார். திண்டுக்கல் சீனிவாசன், இரண்டு முறை டீ அருந்தினார். சூடான போண்டா வரவழைத்துச் சாப்பிட்டதுடன், பக்கத்தில் அமர்ந்திருந்த வேலுமணிக்கும் ஷேரிங் செய்தார். அவ்வப்போது எல்லா அமைச்சர்களுக்கும் டீ, ஸ்நாக்ஸ் பரிமாறப்பட்டுக்கொண்டே இருந்தது. எம்.ஜி.ஆர் பெயரைச் சொல்லும்போதுகூட, எந்த அமைச்சரும் கைதட்டவில்லை. மேடைக்கு அருகிலேயே டாய்லெட் அமைத்திருந்தனர். அமைச்சர்கள் ஒவ்வொருவராக எழுந்து ஓடிக்கொண்டே இருந்தார்கள். முதலமைச்சர் பேசிக்கொண்டிருக்கும் போதேகூட இது நடந்தது. 

“ப்ளைட்டுக்கு நேரமாச்சு!”

எடப்பாடி பழனிசாமி ‘எம்.ஜி.ஆர் பெருமைகளைப் பேசுகிறேன்’ என்ற பெயரில், எழுதி வைத்ததை ஏற்ற இறக்கம் இல்லாமல் எக்ஸ்பிரஸ் வேகத்தில் படித்தார். பல இடங்களில் அவர் வாய்குழறி வார்த்தை தடுமாறியது. அவர் அறிவித்த திட்டங்களுக்கு அமைச்சர் வேலுமணி மட்டுமே கைதட்டிக்கொண்டிருந்தார். ‘இரட்டை இலையை மீட்டுவிட்டோம்’ என்று பெருமையாகச் சொன்னபோதும் சரி, ‘ஆர்.கே. நகரில் நாங்கள்தான் வெற்றிபெறுவோம்’ என்று வீர முழக்கம் எழுப்பியபோதும் சரி... அமைச்சர்கள் முகத்தில் நோ ரியாக்‌ஷன். தினகரனைத் தாக்குவதற்காக மூச்சுத்திணற முதல்வர் குட்டிக்கதை சொல்லிக்கொண்டிருந்தபோது, திண்டுக்கல் சீனிவாசன் இரண்டாவது முறையாக போண்டா சுவைத்துக்கொண்டிருந்தார்.  சரியாக 5.41-க்கு கன்னியாகுமரி மேட்டருக்கு வந்தார் முதல்வர். ‘மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று எங்கள்மீது அபாண்டமான குற்றச்சாட்டைச் சொல்லிவருகிறார்கள். நாங்கள் அமைச்சர்களை அனுப்பி முழுவீச்சில் மீட்புப் பணிகளைச் செய்து கொண்டிருக்கிறோம்’ என்று சொன்னார்.

“ப்ளைட்டுக்கு நேரமாச்சு!”

‘‘ரகுபதி என்ற இளைஞர் கட்-அவுட்டால் இறக்கவில்லை. லாரி மோதியதுதான் ரகுபதியின் இறப்புக்குக் காரணம். அதற்கான ஆதாரத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறோம். ரகுபதியின் மரணம் எங்களுக்கு வருத்தமளிக்கிறது’’ என்று முதல்வர் முகத்தைச் சோகமாக வைத்துக்கொண்டு சொல்ல, சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரும் உணவுத்துறை அமைச்சர் காமராஜும் ஏதோ பேசிச் சிரித்துக்கொண்டிருந்த காட்சி வேதனையின் உச்சம். சரியாக 5.48-க்கு ‘ஃப்ளைட்டுக்கு டைமாச்சு’ என்று அமைச்சர் வேலுமணி எழுந்துபோய் எடப்பாடி காதில் சொல்ல, அவசரமாக அவர் கோவை மாவட்டத்துக்கான திட்டங்களை வாசிக்க ஆரம்பித்தார். பாதி திட்டங்களை வாசித்தவர், ‘‘ஃப்ளைட்டுக்கு நேரமாச்சு. இதை அரசு அறிவிப்பாகக் கொடுத்துவிடுகிறோம்’’ என்று முடித்துவிட்டு அடித்துப்பிடித்துக்கொண்டு ஓடினார்.

- எம்.புண்ணியமூர்த்தி, இரா.குருபிரசாத்
படங்கள்: தி.விஜய், க.விக்னேஷ்வரன்