Published:Updated:

பிரதமரை காங்கிரஸ் கட்சியே ஒரு தலைவராக ஏற்காதபோது நாடு ஏற்குமா?: மோடி கேள்வி

பிரதமரை காங்கிரஸ் கட்சியே ஒரு தலைவராக ஏற்காதபோது நாடு ஏற்குமா?: மோடி கேள்வி
பிரதமரை காங்கிரஸ் கட்சியே ஒரு தலைவராக ஏற்காதபோது நாடு ஏற்குமா?: மோடி கேள்வி
பிரதமரை காங்கிரஸ் கட்சியே ஒரு தலைவராக ஏற்காதபோது நாடு ஏற்குமா?: மோடி கேள்வி

கொல்கத்தா: பிரதமர் மன்மோகன் சிங்கை காங்கிரஸ் கட்சியினரே ஒரு தலைவராக ஏற்றுக்கொள்ளாதபோது, இந்த நாடு எப்படி அவரை தலைவராக ஏற்றுக்கொள்ளும் என்று குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பினார்.

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற தொழிலதிபர்கள் கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசுகையில் இதனைக் கூறிய மோடி, மத்தியில் தற்போது அரசோ அல்லது நிர்வாகமோ இல்லை என்றும், தற்போதுள்ள ஐ.மு. கூட்டணி அரசு மீது மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பை போன்று,  1947 ஆம் ஆண்டிலிருந்து மத்தியில் இருந்த வேறு எந்த ஆட்சி மீதும்வெறுப்பு ஏற்பட்டதில்லை என்றும் சாடினார்.

  கஷ்டப்பட்டு வேலை செய்து வரி செலுத்தும் மக்களின் வரிப்பணத்தை தற்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வீணடிப்பதாகவும், என்ன விலை கொடுத்தேனும் மத்திய அரசிலிருந்து காங்கிரஸ் அகற்றப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

காங்கிரஸ் கட்சியில் இருக்கும் இரண்டு அதிகார மையங்களுக்கிடையே எங்கே அதிகாரம் உள்ளது என்றும் மோடி கேள்வி எழுப்பினார்.

"ஐக்கிய முற்போக்கு அரசின் நேரம் நெருங்கி விட்டது. நாட்காட்டியை பார்ப்பதற்கு பதிலாக கடிகாரத்தை பார்த்துக் கொண்டிருக்கிறது. மத்திய அரசு. இரவலாகப் பெறப்பட்ட நேரத்தில் தான் இயங்கி வருகிறது.

##~~##
பாகிஸ்தான் ராணுவம் இந்திய வீரர்களின் தலையை துண்டித்த விவகாரத்திலும், கேரள மீனவர்களை இத்தாலிய கடற்படை வீரர்கள் சுட்டுக் கொன்ற விவகாரத்திலும் மத்திய அரசால் நிலையான கொள்கை முடிவுகளை மேற்கொள்ள இயலவில்லை.
சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் நமது நாட்டவரின் தாய் இறந்து போனாலும், ஒரு கைதியால் இறுதிச் சடங்கில் கூட பங்கேற்க முடியாது. அதே வேளையில், இத்தாலிக்கு போய் தேர்தலில் வாக்களித்துவிட்டு வர இந்திய மீனவர்களை சுட்டுக் கொன்ற குற்றவாளிகளுக்கு அனுமதி அளிப்பது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது" என்று மோடி மேலும் பேசினார்.
இடதுசாரிகள் மீதும் தாக்கு
தொடர்ந்து பேசிய மோடி இடதுசாரிகள் மீதும் கடுமையாக தாக்கினார்.இடதுசாரி கட்சியினர் கேரளாவில் அனைத்து வகையான தீய வழக்கங்களையும் கடைபிடிப்பதாகவும், அவர்கள் மேற்குவங்கத்தை அழித்துவிட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

மம்தாவுக்கு புகழாரம்

மேலும் மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியை இக்கூட்டத்தில் புகழ்ந்து பேசினார் மோடி.

"தேசிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, மேற்கு வங்காள மாநிலம் புறக்கணிக்கப்படவில்லை. மத்தியில் தற்போது ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மேற்கு வங்காளத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறது. 32 ஆண்டு காலமாக இருந்த தவறான நிர்வாகத்தால் மேற்கு வங்க மாநிலம் வெகுவாக பாதிக்கப்பட்டது. அந்த (இடது சாரிகள்) ஆட்சியில் இருந்த பிரச்னைகளை தீர்க்க சரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நான் நம்புகிறேன்.ஆனால் நிலைமை சீராக பல ஆண்டுகள் ஆகலாம்.குஜராத்தை போன்றே மேற்குவங்க மாநிலமும் மத்திய அரசால் பாரபட்சமாக நடத்தப்படுகிறது" என்றார் மோடி.

பா.ஜனதாவின் அடுத்த பிரதமர் வேட்பாளராக கருதப்படும் நரேந்திர மோடி,  மம்தா பானர்ஜியை புகழ்ந்து பேசியுள்ளது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜனதா கூட்டணிக்கு மம்தாவை இழுக்கும் நோக்கத்திலேயே மோடி இவ்வாறு அவருக்கு ஆதரவாக பேசியதாக கூறப்படுகிறது.