Published:Updated:

கட்சிகளின் கவனத்தை ஈர்க்கவே இடைத்தேர்தலில் போட்டி!- `கள்' இயக்கம் அறிவிப்பு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கட்சிகளின் கவனத்தை ஈர்க்கவே இடைத்தேர்தலில் போட்டி!- `கள்' இயக்கம் அறிவிப்பு
கட்சிகளின் கவனத்தை ஈர்க்கவே இடைத்தேர்தலில் போட்டி!- `கள்' இயக்கம் அறிவிப்பு

கட்சிகளின் கவனத்தை ஈர்க்கவே இடைத்தேர்தலில் போட்டி!- `கள்' இயக்கம் அறிவிப்பு

``திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் எங்கள் இயக்கம் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள்'' என தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி கூறினார்.

இது குறித்துப் பேசிய அவர், ``தென்னை, பனை மரங்களிலிருந்து `கள்' இறக்கவும் அதைப் பருகவும் தமிழ்நாட்டில் தடையுள்ளது. `கள்' ஒரு போதைப்பொருள் அல்ல. அது சத்தான இயற்கை உணவுப்பொருள். அண்டை மாநிலமான கேரளாவில் கள்ளுக்குத் தடையில்லை. அதனால் அங்குள்ள தென்னை விவசாயிகளின் பொருளாதாரம் மேம்பட்டுள்ளது. `கள்' ஒரு போதைப்பொருள் என்று யார் நிரூபணம் செய்தாலும் அவர்களுக்கு என்னுடைய சொந்த நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் பரிசு கொடுக்கிறேன் என்று சவால் விட்டு பல ஆண்டுகளாகி விட்டது. இதுவரை `கள்' போதைப்பொருள் என்று வாதிட எவரும் முன்வரவில்லை. அந்த ஒரு கோடி ரூபாய் பரிசுக்கான அறிவிப்பு இன்னும் அப்படியேதான் இருக்கிறது. தமிழ்நாட்டில் கள்ளுக்கான தடை நீக்கப்பட வேண்டும் என்று கடந்த 15 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை `கள்' இயக்கம் முன்னெடுத்து வருகிறது.

அந்த வகையில் ஆளுங்கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் கவனத்தை ஈர்க்கும் விதமாக, திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய இரண்டு சட்டமன்றத்தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எப்போது வந்தாலும், அந்த தேர்தலில் கள் இயக்க வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள்'' என்றவர், ``காவிரிப்பிரச்னையில் தமிழ்நாடு அரசு சரியான வாதங்களை முன்வைக்கவில்லை. அதனால் கடந்த 28 ஆண்டுகளாக நடந்த சட்டப் போராட்டம் தமிழக நலனுக்கு விரோதமாக அமைந்துள்ளது. அதன் விளைவு கர்நாடக மாநிலத்தின் வடிகால் நிலமாக தமிழகம் மாறியுள்ளது. காவிரி தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு வழங்கவேண்டிய தண்ணீரை கொடுத்திருந்தால், அதை மேட்டூர் அணையில் தேக்கிவைத்து, உரிய நேரத்தில் குறுவை சாகுபடிக்கு கொடுத்திருக்க முடியும். காவிரி வெள்ளம் வீணாகக் கடலில் கலந்திருக்காது'' என்று வேதனை தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு