Published:Updated:

500 பெண்கள் இயக்கங்கள்... நாட்டின் 5 இடங்களிலிருந்து `அமைதிக்கான உரையாடல்' பயணம்!

500 பெண்கள் இயக்கங்கள்... நாட்டின் 5 இடங்களிலிருந்து `அமைதிக்கான உரையாடல்' பயணம்!
News
500 பெண்கள் இயக்கங்கள்... நாட்டின் 5 இடங்களிலிருந்து `அமைதிக்கான உரையாடல்' பயணம்!

500 பெண்கள் இயக்கங்கள்... நாட்டின் 5 இடங்களிலிருந்து `அமைதிக்கான உரையாடல்' பயணம்!

``காவல் துறையே பெண்கள் மீது வன்முறையை நிகழ்த்துவது சாதாரணமாகி விட்டது" என்று உஷ்ணமாகப் பேசத் தொடங்குகிறார் ஜி.மஞ்சுளா. இந்திய மாதர் தேசிய சம்மேளத்தின் மாநில துணைச் செயலாளர். இந்தியாவின் பல முனைகளிலிருந்து பெண்கள் நடத்தவிருக்கும் பரப்புரை பயணத்தின் சென்னைப் பகுதி ஒருங்கிணைப்பாளர். இந்தப் பயணத்தின் நோக்கம் குறித்து அவரிடம் கேட்டபோது, 

 ``பெண்கள் மீதான தாக்குதல்கள் எப்போதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக குழந்தைகள், பெண்கள், தலித்துகள், சிறுபான்மையினர், திருநங்கைகள், திருநம்பிகள் மீதான வன்முறை அளவிடமுடியாத அளவு அதிகரித்துவருகின்றன. அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கும் அறிவுஜீவிகளைக் கொல்வதும், மிரட்டுவதும் அபாயகரமானது. ஜனநாயக உரிமைகளுக்கு எதிரானது. தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், டாஸ்மாக்குக்கு எதிராகப் போராடும் பெண்கள் மீதானாலும் சரி, தூத்துக்குடியில் போராடியவர்கள் மீதானாலும் சரி அதிலும் ஸ்னோலின் எனும் பெண்ணைச் சுட்டுக்கொல்வது என இதுபோன்று காவல் துறையினரே வன்முறையைப் பிரயோகிப்பதை என்னவென்று சொல்வது. இவை போன்ற தாக்குதல்களுக்கு எதிராக, வன்முறையற்ற இந்தியாவை உருவாக்க, ஜனநாயகம் மற்றும் அமைதிக்கான பெண்களின் பரப்புரைப் பயணத்தை நடத்த உள்ளோம். இதில் இந்தியாவைச் சேர்ந்த சுமார் 500 பெண்கள் இயக்கங்கள் கலந்துகொள்கின்றன. செப்டம்பர் 22ம் தேதி தொடங்கி, அக்டோபர் 13 ம் தேதி வரை முழு வீச்சோடு இந்தப் பயணம் நடைபெறும்." என்கிறார். 

இந்தப் பரப்புரைப் பயணத்தின் தமிழக ஒருங்கிணைப்புக் குழுவில் அங்கம் வகிக்கும் எழுத்தாளர் ஜீவசுந்தரி பாலனிடம், இந்தப் பயணத் திட்டம் குறித்துக் கேட்டேன். ``தோழர் மஞ்சுளா சொன்னதைப் போல, இந்தியாவில் மத்திய மாநில அரசுகள் மீது மாற்றுக்கருத்தை முன் வைப்பவர்கள் மீதும் கல்வி நிலையங்கள் மீதும் தாக்குதல் நடைபெறுவது அடிக்கடி நிகழும் சம்பவமாகி விட்டது. குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறை நம் மனத்தை உலுக்கி விடுகிறது. கதுவாவில் எட்டு வயதுச் சிறுமிக்கு இழைப்பட்ட வன்கொடுமையை எவராலும் மறக்கவே முடியாது அல்லவா... ஆனால், அந்தக் கொடுமைக்கும் ஆதரவாக நின்றவர்களையும் நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். இவை களையப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்தப் பரப்புரைப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 25 க்கும் மேற்பட்ட பெண்கள் குழுக்கள் இதில் கரம் கோத்துள்ளன. இயக்கம் தவிர்த்து எழுத்தாளர்கள், செயற்பாட்டாளர்கள், மனித உரிமையாளர்களும் தங்களின் ஒத்துழைப்பைத் தருகிறார்கள். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

 காஷ்மீர், டெல்லி, அசாம், கேரளா, தமிழ்நாடு ஆகிய ஐந்து இடங்களில் தொடங்கி, அந்தந்த மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரப்புரையைச் செய்கிறது. ஒரு குழுவில் நாட்டின் அனைத்து மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி ஒருவர் என 20 - 25 பேர் இடம்பெறுவார்கள். தமிழ்நாட்டிலிருந்து, காஷ்மீர் குழுவுக்கு திருநங்கை அனுஶ்ரீயும், அசாம் குழுவுக்கு கவிதா கஜேந்திரனும், டெல்லிக்குழுவுக்கு திலகவதியும் கன்னியாகுமரி குழுவுக்கு ராஜலட்சுமியும் இடம் பெறுகிறார்கள். இப்படிப் பல மாநிலங்களிலிருந்து வரும் பெண்கள் ஒன்றாக இணைந்து பயணிப்பதே புதிய அனுபவமாகவும், பல தரப்பட்ட விஷயங்களை அலசுவதற்குமான வாய்ப்பாக அமையும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, கன்னியாகுமரியில் தொடங்கும் பயணத்தை, மதுரை, திருத்துறைப் பூண்டி, புதுச்சேரி, வேலூர், எனத் தொடர்ந்து சென்னைக்கு வந்தடைகிறது. 

பயணிக்கும் இடங்களில் தோழர்கள் ஏற்பாடு செய்யுமிடங்களில் கூட்டங்களில் பயணத்தின் நோக்கத்தைப் பிரசாரம் செய்து பேசுவார்கள். ஒவ்வொரு குழுவிலும் பேச்சாளர், பாடகர், இசைக்கருவி வாசிப்பவர்கள்... எனக் கலந்தே உருவாக்கப்பட்டுள்ளது. அதனால், கலை நிகழ்ச்சிகளோடு இந்தப் பயணம் அமையும். செப்டம்பர் 25 அன்று சென்னைக்கு வரும் குழுவுக்கு நாங்கள் வரவேற்பும் அரங்கக்கூட்டமும் ஏற்பாடு செய்திருக்கிறோம். இப்படி, ஐந்து இடங்களில் பரப்புரைப் பயணத்தை மேற்கொள்ளும் குழுக்கள் அங்கிருந்து அக்டோபர் 13 ம் தேதி டெல்லியைச் சென்றடையும். அன்று பிரமாண்டமான கூட்டம் ஒன்றுக்கும் மத்திய ஒருங்கிணைப்பாளர்கள் ஏற்பாடு செய்துவருகின்றனர். 

இந்திய மக்களில் குறிப்பிட அடையாளங்களை வைத்தும், வெறுப்பு உணர்வை ஊட்டி, கலவரங்களுக்கு வித்திடும் போக்கினைக் கண்டிக்கும் ஒவ்வொருவரையும் எங்களின் பரப்புரைப் பயணத்தில் இணைந்துகொள்ள அழைக்கிறோம்." என்கிறார்.