Published:Updated:

சஸ்பென்ஸ் தீர்ந்தது... நிம்மதியில் ஆர்.கே.நகர்!

சஸ்பென்ஸ் தீர்ந்தது... நிம்மதியில் ஆர்.கே.நகர்!
பிரீமியம் ஸ்டோரி
சஸ்பென்ஸ் தீர்ந்தது... நிம்மதியில் ஆர்.கே.நகர்!

சஸ்பென்ஸ் தீர்ந்தது... நிம்மதியில் ஆர்.கே.நகர்!

சஸ்பென்ஸ் தீர்ந்தது... நிம்மதியில் ஆர்.கே.நகர்!

சஸ்பென்ஸ் தீர்ந்தது... நிம்மதியில் ஆர்.கே.நகர்!

Published:Updated:
சஸ்பென்ஸ் தீர்ந்தது... நிம்மதியில் ஆர்.கே.நகர்!
பிரீமியம் ஸ்டோரி
சஸ்பென்ஸ் தீர்ந்தது... நிம்மதியில் ஆர்.கே.நகர்!

ஜெயலலிதா இறந்த பிறகு, ஓராண்டுக்கு மேலாக சட்டமன்ற உறுப்பினர் இல்லாமல் இருந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு, ஒரு வழியாக தேர்தல் நடந்துமுடிந்துள்ளது. தேர்தல் நாளில்கூட பணப் பட்டுவாடா நடந்ததாக புகார் கிளம்பியது... 20 ரூபாய் நோட்டில் வாக்காளர் பட்டியலின் பாகம் எண்ணை எழுதிக்கொடுத்து, அதை டோக்கன் போல விநியோகித்து, ‘குக்கர் சின்னத்தில் ஓட்டு போட்டுவிட்டு வந்து இதைக் காட்டினால் 10 ஆயிரம் ரூபாய் தருவோம்’ எனச் சொன்னதாக 15 பேர் கைது செய்யப்பட்டது... இப்படிப் பல சாதனைகள் இந்த முறை நிகழ்ந்தன. 

 வைட்டமின் ‘ப’- மீது நம்பிக்கை!

இரட்டை இலைச் சின்னம் கிடைத்துவிட்டதால், வேட்பாளரை அறிமுகம் செய்துவிட்டு, ஒரு சில நாள்கள் மட்டும் பிரசாரம் செய்தால் போதும் என்றுதான் எடப்பாடியும் பன்னீரும் கணக்குப் போட்டிருந்தனர். ஆனால், சுயேச்சையாகக் களமிறங்கி, அவர்கள் இருவருக்கும் பிரஷரை ஏற்றிவிட்டார் தினகரன். தினகரனுக்கு வலுவான செல்வாக்கு இருப்பதாகக் கருத்துக்கணிப்புகள் சில கூறின. அதைத்தொடர்ந்து, எடப்பாடியும் பன்னீரும் கட்சிக்காரர்களுக்கு நெருக்கடி கொடுத்தனர். ஒட்டுமொத்த அமைச்சரவையே தொகுதியைச் சுற்றிவந்தது. மக்களோடு மக்களாகக் கலந்து தினகரன் பழகுவதைப் பார்த்த அமைச்சர்களும், அதே பாணியைப் பின்பற்றத் தொடங்கினர். ஆரம்பத்தில் காரில் வந்த அமைச்சர்கள், பிறகு வழியில் தென்படும் டூவீலர்களை நிறுத்தி லிஃப்ட் கேட்டுப் பயணித்தனர். குத்தாட்டம், கேளிக்கை எனத் தொகுதியைக் குதூகலமாக வைத்திருந்தார் விஜயபாஸ்கர். ஓட்டுக்கு 6,000 என்ற கணக்கில், வைட்டமின் ‘ப’-வை தொகுதி முழுக்க, கட்சி வித்தியாசம் பார்க்காமல் விநியோகித்தனர் ஆளும்கட்சியினர். தொகுதியை ஓரளவுக்கு தங்கள் பக்கம் திருப்பிவிட்டோம் என்ற திருப்தி வந்த பிறகே, இறுதிநாள் பிரசாரத்தின்போது முதல்வரும் துணை முதல்வரும், பிரதமர் மோடியை வரவேற்க கன்னியாகுமரிக்குப் பறந்தனர்.

சஸ்பென்ஸ் தீர்ந்தது... நிம்மதியில் ஆர்.கே.நகர்!

குலுக்கிய பிரஷர் குக்கர்!

இரட்டை இலை     கிடைக்கவில்லை என்றாலும், தொப்பிச் சின்னத்தையாவது வாங்கிவிட வேண்டுமென்பதில் தீவிரமாக இருந்தார் தினகரன். அவருக்கு பிரஷர் குக்கர் சின்னம் கிடைத்தது. தொகுதியில் எந்தப் பக்கம் திரும்பினாலும், பிரஷர் குக்கர் சின்னம் காட்சியளித்தது. ‘தினம் மூன்று வேளை சாப்பாட்டுடன் 300 ரூபாய். சொந்த பிரஷர் குக்கருடன் வந்தால், 500 ரூபாய்’ என ஆள் பிடித்தார்கள். அவர்களில் பலரும் பெண்கள். பிரமாண்ட குக்கர், குக்கராக மாறிய மாட்டு வண்டி என சினிமா ரேஞ்சுக்கு செட் போட்டார்கள். சின்னத்தைப் பிரபலப்படுத்த புதுப்புது டெக்னிக்குகளை தினகரன் ஆதரவாளர்கள் கையாண்டனர். இதை முறியடிப்பதற்காக, ஆளும்கட்சியினர் பெரும் பணம் செலவிட வேண்டியிருந்தது. அது, தினகரன் தரப்பை ஆட்டம்கொள்ள வைத்தது. ‘120 சி’ இறக்கப்பட்டதாக ஆளும்கட்சிமீது எதிர்க்கட்சியினர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினர்.

ஆளும் கட்சியின் அதிரடியால் சோர்ந்துவிடாத குக்கர் டீம், ஓட்டுக்குப் பத்தாயிரம், இரண்டு கிராம் தங்க நாணயம் வழங்க டோக்கன் வழங்கியது. வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள், ஜெயலலிதா சிகிச்சைபெற்ற வீடியோவை வெளியிட்டு ஆளும் கட்சியினரைப் பீதியில் ஆழ்த்தியது தினகரன் அணி. வீடியோ வெளியான சில நிமிடங்களில், ஆர்.கே நகர் தொகுதியில் முழுவதும் யாரும் டி.வி பார்க்க முடியாதபடி, அரசு கேபிளை கட் செய்தனர். அசராத தினகரன் தரப்பு, வாக்காளர்களின் செல்போன்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அந்த வீடியோவை அனுப்பியது. அந்த வீடியோ, அ.தி.மு.க ஆதரவு வாக்குகளைத் தங்கள் பக்கம் திருப்பும் என்று நம்புகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சஸ்பென்ஸ் தீர்ந்தது... நிம்மதியில் ஆர்.கே.நகர்!

சுறுசுறுப்பு இல்லாத சூரியன்!

வெளியூர் வாகனங்கள் தொகுதிக்குள் வர அனுமதி இல்லை. எனவே, சென்னையின் மற்ற பகுதிகளில் உள்ள லாட்ஜ்களில் தங்கிய தி.மு.க-வினர், தினமும் காலையில் எழுந்து ஆயத்தமாகி சாவகாசமாக 11 மணி அளவில்தான் தொகுதிக்கு வந்தனர். மதியம் ஒரு மணிக்கு சாப்பிடப் போய்விட்டு, பூங்காக்களிலோ, கட்சி நிர்வாகி களின் வீடுகளிலோ ஓய்வெடுத்துவிட்டு, மாலை 4 மணிக்கு மீண்டும் தொகுதிக்குள் வருவார்கள். மாலை 5-6 மணிக்கெல்லாம் லாட்ஜுக்கு மூட்டை கட்டிவிடுவார்கள். ஒரு சிலரைத் தவிர, பெரும்பாலான தி.மு.க-வினரின் பிரசாரம் இப்படித்தான் இருந்தது. ‘வெற்றிபெறப்போவது நாம்தான்’ என்ற மிதப்பு அவர்களிடம் இருந்தது. ‘‘தினகரனும் மதுசூதனனும் அ.தி.மு.க வாக்குகளைப் பிரித்தால் நாம் எளிதாக வெற்றிபெற்றுவிடுவோம் என்ற கணக்கு எங்கள் கட்சியினரில் பலருக்கு இருந்தது. அதனால், அவர்கள் மெத்தனமாக இருந்தனர்” என நொந்துபோய் சொன்னார் மூத்த உடன்பிறப்பு ஒருவர். தி.மு.க-வினரின் இந்தப் போக்கு குறித்த தகவல், ஸ்டாலின் கவனத்துக்குப் போனது. உடனே, தொகுதிப் பொறுப்பாளர்களையும், நிர்வாகிகளையும் அழைத்து வறுத்தெடுத்தார் ஸ்டாலின். அதற்கு, ‘‘பூத்துக்கு வெறும் ஆயிரம் ரூபாய்தான் கட்சி தருது. இதை வெச்சுக்கிட்டு பிரசார வேலை செய்ய கஷ்டமா இருக்கு. அதுவுமில்லாம தினகரன் தரப்பும், மதுசூதனன் தரப்பும் ஆளுங்கட்சி வாக்காளர்களுக்கு மட்டுமில்ல, நம்ம கட்சி வாக்காளர்களுக்கும்கூட பணம் கொடுத்துட்டாங்க. நம்ம வாக்காளர்களுக்காவது நாம பணம் தந்தா நல்லாருக்கும்” என்று தி.மு.க-வினர் பதிலளித்துள்ளனர். “வாக்குக்குப் பணம் கொடுத்து ஜெயிக்க வேண்டாம். பணம் கிடையாது. ஒழுங்கா பிரசாரம் பண்ணுங்க...” எனக் கறாராகச் சொல்லியிருக்கிறார் ஸ்டாலின். இறுதி நாள்களில் ஸ்டாலினிடம் இருந்த உற்சாகம், ஏனோ ஏனைய உடன்பிறப்புகள் முகத்தில் தென்படவில்லை.

சஸ்பென்ஸ் தீர்ந்தது... நிம்மதியில் ஆர்.கே.நகர்!

‘2 ஜி’ சந்தோஷம்!

இடைத்தேர்தல் நடக்குமா, ரத்துசெய்யப்படுமா என்ற சஸ்பென்ஸ் முந்தைய நாள் இரவுவரை நீடித்தது. ஆனாலும், 21-ம் தேதி காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு நடந்துகொண்டிருக்கும் வேளையில், ‘2ஜி வழக்கில் கனிமொழி, ஆ.ராசா விடுவிக்கப்பட்டனர்’ என்ற செய்தி ஊடகங்களில் வெளியானது. பூத்களில் இருந்த தி.மு.க முகவர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தனர். எல்லோரும் இதில் பரபரப்பான நிலையில், ‘‘ஆர்.கே. நகர் தேர்தலா முக்கியம்? எவ்வளவு பெரிய பழி துடைக்கப்பட்டிருக்கு. அதைக் கொண்டாடு வோம்’’ எனப் பலரும் பேச ஆரம்பித்தார்கள்.  

தண்டையார்பேட்டை பவர் ஹவுஸ் வி.சி.ஐ பள்ளியில் அமைந்த வாக்குச்சாவடிகளில் இதற்கு முன்பு நடைபெற்ற தேர்தல்களில், அங்குள்ள பூத்களில் ஏதாவது ஒரு சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படுவது வாடிக்கையாக இருந்தது. எனவே, இங்கு துணை ராணுவத்தினரும், போலீஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர். மேலிடப் பார்வையாளர்கள் அரை மணி நேரத்துக்கு ஒருமுறை வாக்குச்சாவடிகளைத் தொடர்ந்து கண்காணித்துவந்தனர். வெளிமாவட்டத்தினர் தொகுதியிலிருந்து வெளியேற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. ஆனாலும், ஆளும்கட்சி மற்றும் தினகரன் தரப்பு வெளிமாவட்டத்தினர் தொகுதிக்குள் சுற்றிவந்ததைக் காண முடிந்தது.

சஸ்பென்ஸ் தீர்ந்தது... நிம்மதியில் ஆர்.கே.நகர்!

தினகரன் கோபம்!

தினகரன் பல வாக்குச்சாவடிகளுக்கு விசிட் அடித்தார். சில வாக்குச்சாவடிகளில் வேட்பாளர் பட்டியலைத் தலைகீழாக ஒட்டியிருந்தனர். நேதாஜி நகரில் ஒரு பூத்தில் இதைப் பார்த்து டென்ஷன் ஆன தினகரன், அங்கிருந்த தேர்தல் அதிகாரிகளைப் பார்த்து, ‘வாக்காளர் பட்டியலைக்கூட நேராக ஒட்டமுடியவில்லையா?’ என்று கேட்டார். ‘இதை, சரிசெய்தால்தான் இங்கிருந்து போவேன்’ என்று அவர் சொன்னதும், அதிகாரிகள், வேறு ஒரு வேட்பாளர் பட்டியலை எடுத்து ஒட்டினர். தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷ், அ.தி.மு.க வேட்பாளர் மதுசூதனன் ஆகிய இருவரும், காலையிலேயே வாக்குகளைச் செலுத்தினர்.

ஓர் ஆண்டுக்குப் பிறகு நிம்மதிப் பெருமூச்சு விட்டனர் ஆர்.கே. நகர் வாசிகள். 

- ந.பா.சேதுராமன், சே.த.இளங்கோவன்
படங்கள்: வி.ஸ்ரீனிவாசுலு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism