• காங்கிரஸ் கட்சி தற்போது தமிழகத்தில் முடங்கிப்போய் உள்ளது.
• முதல்வர் பதவி வகிக்க ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்குத்தான் தகுதி இருக்கிறது.
• மிரட்டல், குண்டர் படை என ‘பெண் தாதா’ போல சசிகலா செயல்படுகிறார்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
• நடிகர் திலகம் சிவாஜி கணேசனைவிட சிறந்த நடிகர் டி.டி.வி.தினகரன்.
• சில பரதேசிகள்கூட பெயரை ‘சீமான்’ என வைத்துக்கொள்கிறார்கள்.

• போலீஸ் ஸ்டேஷனில் டாஸ்மாக் கடைகளை வைத்தால் பாதுகாப்பாக இருக்கும்.
• ஜி.கே.வாசனுக்கு இடைத்தேர்தலில் நம்பிக்கை இல்லை; மற்ற தேர்தல்களில் த.மா.கா மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை.
• மனநிலை பாதிக்கப்பட்டவர்போல கிரண் பேடி செயல்படுகிறார். கீழ்ப்பாக்கத்துக்கு அனுப்ப வேண்டியவரை, புதுவைக்கு அனுப்பிவைத்துவிட்டார் பிரதமர் மோடி.
• மூன்று அணிகளாக உள்ள அ.தி.மு.க., சிறிது காலத்தில் ஆறு அணிகளாக மாறலாம்.
• பி.ஜே.பி இழந்த டெபாசிட்டை வாங்கக்கூடிய நிலைக்கு முன்னேற அந்தக் கட்சியினர் முயற்சி செய்ய வேண்டும்.
• அ.தி.மு.க அரசு என்றைக்கு ஒழியும் என மக்கள் காத்திருக்கின்றனர்.
• தமிழக கவர்னர் அதிகப்பிரசங்கித்தனமாக நடந்துகொள்கிறார்.
• மோடி வெறும் புழுதிக்காற்று. அந்தக் காற்றும் தற்போது அடங்கிவிட்டது.
• மகாராணி போல நடந்துகொள்கிறார் தமிழிசை.
• அ.தி.மு.க-வில் திருநாவுக்கரசர் சேருவார் என்றே எனக்குச் செய்தி வருகிறது.
• தமிழக அமைச்சர்கள் சம்பந்தமில்லாமல் பேசிவருகிறார்கள். எனவே, இந்த அமைச்சர்கள் முதலில் பள்ளிக்குச் சென்று ‘அ, ஆ’ படித்துவிட்டு வரவேண்டும்.
• நடிகர் விஜய்யின் சம்பளம் பற்றி கேள்வி கேட்கும் தமிழிசைக்கு, பி.ஜே.பி-யைச் சேர்ந்த நடிகர்கள் தர்மேந்திரா, சத்ருகன் சின்ஹா, நடிகை ஹேமமாலினி ஆகியோர் வாங்கும் சம்பளம் பற்றித் தெரியுமா?
• ரேஷன் கடையில் துவரம் பருப்பு இல்லை; உளுத்தம் பருப்பு இல்லை. ஆனால், ஜெயிலில் சசிகலாவைப் பார்க்கப் போகிறவர்கள் பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, முந்திரிப் பருப்பை அவருக்குக் கொடுத்துவிட்டு வருகிறார்கள்.
- த.கதிரவன்
ஓவியம்: நெடுமாறன்