Published:Updated:

கம்பேரிஸன் கோவாலு!

கம்பேரிஸன் கோவாலு!
பிரீமியம் ஸ்டோரி
கம்பேரிஸன் கோவாலு!

கம்பேரிஸன் கோவாலு!

கம்பேரிஸன் கோவாலு!

கம்பேரிஸன் கோவாலு!

Published:Updated:
கம்பேரிஸன் கோவாலு!
பிரீமியம் ஸ்டோரி
கம்பேரிஸன் கோவாலு!

னிப்பெயர்ச்சி தி.மு.க-வுக்கு சிறப்பாக வேலை செய்யும்போல! பல ஆண்டுகளாக இழுத்துக்கொண்டே இருந்த 2ஜி வழக்கில் தீர்ப்பு வந்துவிட்டது. அதுவும், தி.மு.க-வுக்கு சாதகமாக! குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டிருக்கிறார் நீதிபதி சைனி. அவ்வளவுதான், கொண்டாடித் தீர்த்துவிட்டார்கள் உடன்பிறப்புகள். ஆனாலும், அவர்கள் கொண்டாட்டத்தில் ஏதோவொன்று குறைகிறது. விடுதலைக் கொண்டாட்டத்தைப் பொறுத்தவரை ர.ர-க்கள்தான் பெஸ்ட். எப்படி?

கம்பேரிஸன் கோவாலு!

• ‘விடுதலை’ எனத் தீர்ப்பு வந்த அடுத்த விநாடி, தமிழகம் முழுக்க எக்கச்சக்கமான பேனர்கள் முளைத்திருக்கும். ‘கடவுளை மனிதன் தண்டிப்பதா? நெவர்’ எனத் தொடங்கி, வழக்குப் போட்ட அனைவரையும் ரைமிங்காக வசைபாடும் போஸ்டர்கள்! ஆனால், உ.பி-க்களோ, இன்னும் ‘தகத்தகாய சூரியன்’ பட்டத்தைத் தாண்டி வெளியே வரவேயில்லை. என்னா பாஸ் நீங்க?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• டீஸர், டிரெய்லரை டிகோட் செய்வதுபோல, இந்நேரம் இணைய ர.ர-க்கள் ஜட்ஜ்மென்ட் காப்பியைப் பக்கம் பக்கமாக டிகோட் செய்திருப்பார்கள். நடுநடுவே, ‘எங்கம்மாக்கு எவ்ளோ தில்லு பாத்தியா?’, ‘ஜட்ஜே ஸ்டேண்டிங் ஓவேஷன் தர்றாரு’ போன்ற பிட்டுகள் வேறு. ஆனால், இணைய இளம் தி.மு.க-காரர்களோ, இப்போதுதான் வழக்கு விசாரணை பற்றியே படிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

• அ.தி.மு.க-வாக இருந்தால், வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் எல்லோரும் ஒட்டுமொத்தமாக சபதம் ஏற்றிருப்பார்கள். அது, ‘விடுதலை ஆகுறவரை வேலை பார்க்கக்கூடாது’ என்பதாகவோ, ‘வீட்டை விட்டு வெளியே போகவே கூடாது’ என்பதாகவோ இருக்கும். ஆனால், தி.மு.க-வில் வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் எல்லோரும் வழக்கம்போல ‘பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும்’ இருந்தனர்.

• ‘‘எங்கம்மா எவ்வளவு நல்லவங்க தெரியுமா? எல்லாம் கூட இருந்தவங்களாலதான்’’ - இந்த டெம்ப்ளேட் வசனத்தை, பார்க்கும் இடங்களிலெல்லாம் சொல்லித் திரிந்திருப்பர். ஆனால், கனிமொழிக்காக ராசாவையோ, ராசாவுக்காக கனிமொழியையோ விட்டுக் கொடுக்காமலே முட்டுக் கொடுத்தார்கள் உ.பி-க்கள்.

• ‘அம்மா இனி எப்படி ஃபோர்ஸா வருவாங்க பாரு’ என நெகிழ்ந்துபோய் சிலாகிப்பார்கள் ர.ர-க்கள். அதன்படி, ஜெ.வும் ‘ஐ யம் பேக்’ என வெளியே வருவார். ஆனால், நெட்வொர்க் இல்லாத ஏரியாவில் சும்மா கிடக்கும் செல்போன் போல, ஸ்டாலினே செயலற்று இருப்பதால் உ.பி-க்கள் பில்டப் செய்ய யோசிக்கிறார்கள். நீங்க எல்லாம் பாவம் ப்ரோ!

ஓவியம்: பிரேம் டாவின்சி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism