Published:Updated:

சென்னைக்கு மின்சாரப் பேருந்து! - லண்டனில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சென்னைக்கு மின்சாரப் பேருந்து! - லண்டனில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு
சென்னைக்கு மின்சாரப் பேருந்து! - லண்டனில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு

சென்னைக்கு மின்சாரப் பேருந்து! - லண்டனில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு

அமைச்சர் விஜயபாஸ்கர், லண்டன் மாநகரில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இந்த ஆய்வினால், சென்னை நகரத்தில் புதிய பேருந்துகள் பயணிக்கப்போகிறது என்பதுதான் விசேஷம். சென்னை மாநகரில், 'மின்சாரம், மின்கலன்' (Electric Bus transport) பேருந்துத் திட்டத்தை செயல்படுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், கடந்த மார்ச் 28-ம் தேதி, தமிழக போக்குவரத்துத் துறைக்கும், லண்டன் சி-40 முகமைக்குமிடையே தலைமைச் செயலகத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானது. சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கின்ற வகையில், 'மின்சாரப் பேருந்துகளைக் கொள்முதல்செய்தல், புதிய தொழில்நுட்பங்களைச் செயல்படுத்துதல், இவ்வகை மின்சாரப் பேருந்துகளைத் திறம்பட இயக்கிட சாலை வரைபடம் தயாரித்தல், தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், தூய்மையான மின்சாரத்தை வழங்குதல்' உள்ளிட்ட பல்வேறு பணிகளில் இம்முகமை தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறைக்கு உதவிகளை வழங்கும் என்று அப்போது அறிவிக்கப்பட்டது.

இத்திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில், சி-40 முகமையின் வெளிநாட்டுப் பிரதிநிதிகள், கடந்த 21.08.2018 முதல் 24.08.2018 வரை சென்னையில் முகாமிட்டு, போக்குவரத்து, நிதி மற்றும் எரிசக்தித் துறையின் உயர்மட்ட அரசு அலுவலர்களை நேரில் சந்தித்து கலந்தாய்வு மேற்கொண்டனர்.  சென்னை அடையாறு, மாநகர் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் நேரில் ஆய்வுசெய்து போக்குவரத்துக் கழகங்களின் தற்போதைய செயல்பாடுகளையும் அறிந்துகொண்டதோடு, அமெரிக்கா மற்றும் லண்டனில் நடைபெறும் கருத்தரங்குகளில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை பங்கேற்க வருமாறு அப்போது அவர்கள்  அழைத்தனர். 

அதன் அடிப்படையில், சி-40 முகமையின் அழைப்பை ஏற்று, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டேவிதார் ஆகியோர்  லண்டன் சென்றனர். லண்டன் மாநகரில், மின்சாரத்தால் இயங்கும் பேருந்தையும், பேருந்துப் பணிமனையையும் 17.09.2018 அன்று பார்வையிட்டனர்.  அப்போது, பேருந்துகளை இயக்குதல், நிர்வகித்தல், செயல்படுத்துவதில் உள்ள பல்வேறு நுணுக்கங்கள் குறித்தும் விரிவான ஆலோசனை மேற்கொண்டனர். மின்சார பேருந்துப் பணிமனைகள் அமைப்பதில் பெரிதும் பங்காற்றிவரும், லண்டன் போக்குவரத்து அமைப்பின் போக்குவரத்து ஆலோசகர் மைக் வெஸ்டனைச்  சந்தித்துப் பேசினர். 

பின்னர், லண்டன் மாநகரம், வாட்டர்லூ-வில் செயல்படும் மின்சார பேருந்துப் பணிமனையைப் பார்வையிட்டு, பேருந்துகள் இயக்கம், பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பச் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர். இறுதியாக, லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் போக்குவரத்து தொடர்பாக பிரேம் பார்த்தசாரதி மற்றும் பொன்டாக்  ஆகியோருடன் கலந்தாலோசித்தனர். அப்போது, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ''சி-40 முகமையின் உதவியோடு விரைவில் சென்னையில் மின்சாரப் பேருந்துகள் இயங்கிட, இந்தப் பயணம் பெரிதும் பயன்தரும் வகையில் இருந்தது'' என்று தெரிவித்தார்.

சென்னை மாநகரில் கூடிய சீக்கிரம் மின்சார பஸ்கள் ஓடுவதைப் பார்க்கலாம்..!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு