Published:Updated:

டி.ராஜேந்தர் பொன்மொழிகள்

டி.ராஜேந்தர் பொன்மொழிகள்
பிரீமியம் ஸ்டோரி
டி.ராஜேந்தர் பொன்மொழிகள்

டி.ராஜேந்தர் பொன்மொழிகள்

டி.ராஜேந்தர் பொன்மொழிகள்

டி.ராஜேந்தர் பொன்மொழிகள்

Published:Updated:
டி.ராஜேந்தர் பொன்மொழிகள்
பிரீமியம் ஸ்டோரி
டி.ராஜேந்தர் பொன்மொழிகள்

வடிவேலு பேச்சைக்கூட மக்கள் நம்பத் தயார்; ஆனால், பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சை நம்பத் தயாராக இல்லை!

சிம்புவைப் பள்ளியில் சேர்த்த தந்தையும் நான்தான். சிம்புவை நடிகர் சங்கத்தில் நடிகனாகச் சேர்த்துவிட்ட கலைஞனும் நான்தான்.

தி.மு.க-வில் எல்லாமே தளபதி; அவருடன் கூட்டு வைக்க எனக்கு இல்லை தலைவிதி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டி.ராஜேந்தர் பொன்மொழிகள்

வேலை வெட்டி இல்லாதவன், சும்மா இருக்கிறவன், சொறிஞ்சிக்கிட்டு இருக்கிறவன்கிட்டே எல்லாம் கேட்கவேண்டிய கேள்விதான், ‘ரஜினி அரசியலுக்கு வருவாரா?’ங்கிற கேள்வி!

ஹன்சிகா பற்றியே கவலைப்படாத நான், தன்ஷிகாவைப் பற்றியா கவலைப்படப் போறேன்?

காவிரிக்காக உச்ச நீதிமன்றத்தில் போராடியது அம்மா. இப்போது இருக்கும் அ.தி.மு.க அரசோ, சும்மா!

மு.க.ஸ்டாலின் சும்மா கட்டிக்கிட்டிருக்காரு வேட்டி; கொடுத்துக்கிட்டிருக்காரு பேட்டி; பேசுறது எல்லாமே ஏட்டிக்குப் போட்டி!

திரையுலகுக்காகக் குரல் கொடுக்காத ரஜினி, தமிழ்நாட்டுக்காகக் குரல் கொடுப்பார் என்றா நம்புகிறீர்கள்?

இது குவார்ட்டருக்காக வந்த கூட்டமல்ல... என் மேட்டருக்காக வந்த கூட்டம். இது பிரியாணிக்காக வந்த கூட்டமல்ல... என்மீது பிரியப்பட்டு வந்த கூட்டம்.

‘அங்கிள், எப்படியாவது எனக்கு சிம்புவைக் கட்டி வெச்சிடுங்க’ன்னு எத்தனை இளம் பெண்கள் என்கிட்ட கேட்குறாங்க தெரியுமா?

தமிழிசை, காலத்துக்கும் பாடிக்கிட்டிருக்காங்க இசை; பி.ஜே.பி-க்கு எதிராக பலரும் பாடிக்கிட்டிருக்காங்க வசை; இதையெல்லாம் பார்த்துக்கிட்டு பொன்.ராதாகிருஷ்ணன் போட்டுக்கிட்டிருப்பாரு அசை!

புஷ்கர விழாவில் எடப்பாடியார் குளித்தால், அது மகிழ்ச்சி;  தீபா - மாதவன் போய் குளித்தால் அது கவர்ச்சி; நான் போய்க் குளித்தால் அது தளர்ச்சி!

மக்கள் மன்றத்தில் நான் கொடுப்பேன் பேட்டி; எதிராளிகளுக்கு அவிழும் வேட்டி.

வைக்கோல் போரை நம்பிப் போனால்கூட வாழ்ந்திடலாம்; ஆனால், வைகோவை நம்பிப் போனவர்கள் வாழவே முடியாது!

- த.கதிரவன்
ஓவியம்: பாலமுருகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism