Published:Updated:

பொலிட்டிகல் பொடிமாஸ்!

பொலிட்டிகல் பொடிமாஸ்!
பிரீமியம் ஸ்டோரி
பொலிட்டிகல் பொடிமாஸ்!

பொலிட்டிகல் பொடிமாஸ்!

பொலிட்டிகல் பொடிமாஸ்!

பொலிட்டிகல் பொடிமாஸ்!

Published:Updated:
பொலிட்டிகல் பொடிமாஸ்!
பிரீமியம் ஸ்டோரி
பொலிட்டிகல் பொடிமாஸ்!

முதல்வருக்கு நெருக்கமானவரை மிரட்டிய அமைச்சரின் ஆட்கள்!

ஜெ
யலலிதா உயிருடன் இருந்தபோது, அ.தி.மு.க-வில் அமைச்சராக இருந்தவர்கள்கூட எல்லோரிடமும் பவ்யம் காட்டுவார்கள். ஆனால், இப்போது நிலைமை தலைகீழ். கடலூர் கெடிலம் ஆற்றில் 26 கோடி ரூபாய்க்குப் புனரமைக்கும் பணிகளைச் செய்ய, முதல்வர் எடப்பாடிக்கு நெருக்கமான ஈரோட்டுக்காரர் ஒருவர் டெண்டர் எடுத்திருக்கிறார். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் எம்.சி.சம்பத்தின் தீவிர ஆதரவாளர்களான கடலூர் தெற்கு அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் பழனிசாமி மற்றும் அம்மா பேரவை மாவட்டப் பொருளாளர் ஆர்.வி.ஆர்.ஆறுமுகம் ஆகியோர் அந்த கான்ட்ராக்டரை மிரட்டிய விவகாரம், சமீபத்தில் வீடியோவாக வெளிவந்து வைரல் ஆனது.

பொலிட்டிகல் பொடிமாஸ்!

இதுகுறித்து கான்ட்ராக்டர் தரப்பில் பேசியபோது, ‘‘கவனிக்க வேண்டியதைக் கவனித்துவிட்டு வேலையைச் செய்யுங்கள். இல்லாவிட்டால் தொலைச்சிடுவேன் என்று மிரட்டுகிறார்கள். போலீஸில் புகார் கொடுத்தால், வாங்கவே இல்லை. என்ன நடந்தது என்பதை முதல்வருக்குச் சொல்லிவிட்டோம்’’ என்கிறார்கள். மிரட்டியதாகக் கூறப்படும் பழனிசாமியிடம் பேசினோம். ‘‘நான் வேலையெல்லாம் ஒழுங்கா நடக்குதான்னு பார்க்கத்தான் போனேன். கூடவந்த என் சம்பந்திதான், ஏதோ பேசிவிட்டார். எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை” என்று நழுவிக்கொண்டார். ஆர்.வி.ஆறுமுகம் தரப்போ, “எங்கள் பகுதியில் வேலை எதுவும் சரியா நடக்கவில்லை என்று கேட்டதற்கு, கமிஷன் கேட்டு மிரட்டியதாகப் பொய்யான குற்றச்சாட்டைச் சொல்கிறார்கள்’’ என்கிறது. மிரட்டியவர்கள்மீது புகார் கொடுத்தும், அதைக் காக்கிகள் கண்டுகொள்ளவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பொலிட்டிகல் பொடிமாஸ்!

‘‘நானும் இரட்டை இலையில ஜெயிச்சவன்தானே?’’

ரா
மநாதபுரம் மாவட்டத்தையே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளார் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன். இதனால் ஆளும்கட்சி ஆதரவு எம்.எல்.ஏ கருணாஸையும், காங்கிரஸ் எம்.எல்.ஏ  பாண்டியையும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. தனது திருவாடனைத் தொகுதியில் அண்மையில் ஆய்வுக்குச் சென்றார் கருணாஸ். முன்கூட்டியே தகவல் சொல்லியும், அதிகாரிகள் வரவில்லை. நொந்துபோன கருணாஸ், ‘‘நான் சொல்வதை எந்த அதிகாரியும் செய்வதில்லை. நான் கூப்பிட்டா எந்த அதிகாரியும் வருவதில்லை. மந்திரி சொல்வதை மட்டும்தான் கேட்கிறார்கள். நானும் இரட்டை இலையில நின்னு ஜெயிச்சவன்தானே? நான் சொல்வதை ஏன் கேட்க மறுக்கிறார்கள். அவர்களைத் தடுப்பது எந்த சக்தி’’ எனப் புலம்பித் தீர்த்தார். கருணாஸின் புலம்பலைக் கேட்டு பரிதாபப்பட்ட தொகுதி மக்கள், தங்கள் குறைகளைச் சொல்லாமலே திரும்பிச் சென்றனர்.

பொலிட்டிகல் பொடிமாஸ்!
பொலிட்டிகல் பொடிமாஸ்!

காங்கிரஸின் பீமன்!

மிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் 70-வது பிறந்தநாள் விழா சென்னையில் நடைபெற்றது. கூட்டணிக் கட்சியினர் அத்தனை பேரும் ஆஜர். இரா.நல்லகண்ணு மேடையேறியபோது, அவரின் துண்டு தோளிலிருந்து கீழே விழுந்துவிட்டது. அதை ஓடி எடுத்துக்கொடுத்து, பின் வரவேற்புரை வழங்கினார் குஷ்பு. கூடவே, பிரதமர் மோடிக்கு எதிரான குட்டிக் கதையும் சொல்லி பெரும் கைதட்டல்களை அவர் வாங்கினார். பெயர் போட்டிருந்தும் விழாவுக்கு திருநாவுக்கரசர் வரவில்லை; வாழ்த்துச் செய்தியும் அனுப்பவில்லை. ஆனால், ப.சிதம்பரம் வந்திருந்து, ‘‘எனக்கும் இளங்கோவனுக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் வரும். ஆனால், அது பகையல்ல. தொண்டர்களும் அதைப் பகையாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இளங்கோவன் காங்கிரஸ் கட்சியின் வலிமைக்கு பீமன் போன்றவர்’’ எனப் பாராட்டினார். 13 ஆண்டுகளுக்குப் பிறகு, காங்கிரஸ் மேடையில் ஏறியிருந்தார் வைகோ. கனிமொழியும், ஆ.ராசாவும் 2ஜி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு அன்றுதான் சென்னைக்கு வந்தனர். அவர்களை வரவேற்றுவிட்டு, விழா முடிவதற்கு சிறிது நேரத்துக்கு முன்னர் ஸ்டாலின் வந்தார். இளங்கோவனுக்குப் பொன்னாடை போர்த்தி, பூங்கொத்துக் கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தார் ஸ்டாலின்.

பொலிட்டிகல் பொடிமாஸ்!

பதவி வாங்கிய பன்னீரின் சம்பந்தி!

மிழகத்தில் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞராக நான்கு பேர் அறிவிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் வழக்கறிஞர் செல்லப்பாண்டியன், துணை முதலமைச்சர் பன்னீரின் சம்பந்தி. சசிகலாவுக்கு எதிராகத் தனி அணியாக பன்னீர் செயல்படத் தொடங்கியபின், அவரின் ஆதரவாளர்கள் வகித்த அரசுப்பதவிகள் பிடுங்கப்பட்டன. அப்போது, உயர் நீதிமன்றத்தில் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞராக பணியாற்றிவந்த செல்லப்பாண்டியன் பதவியும் பிடுங்கப்பட்டு, அவருக்குப் பதிலாக புகழேந்தி நியமிக்கப்பட்டார். ‘நான் வாதாடிய பல வழக்குகளுக்குப் பல லட்ச ரூபாய் கட்டணம் வழங்காமல் அரசு பாக்கி வைத்திருக்கிறது, அதை உடனே வழங்க வேண்டும்’ என வழக்குத் தொடுத்தார் செல்லப்பாண்டியன். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், மீண்டும் அவருக்குப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ‘அரசை எதிர்த்து வழக்குப் போட்டவருக்கு கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் பொறுப்பா?’ என்று அ.தி.மு.க வழக்கறிஞர்கள் குமுறுகிறார்கள்.

- செ.சல்மான், ஆர்.மோகன், க.பூபாலன், ஜெ.அன்பரசன்
படங்கள்: உ.பாண்டி, வீ.நாகமணி, ஈ.ஜெ.நந்தகுமார், எஸ்.தேவராஜன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism