Published:Updated:

கம்பேரிஸன் கோவாலு!

கம்பேரிஸன் கோவாலு!
பிரீமியம் ஸ்டோரி
கம்பேரிஸன் கோவாலு!

கம்பேரிஸன் கோவாலு!

கம்பேரிஸன் கோவாலு!

கம்பேரிஸன் கோவாலு!

Published:Updated:
கம்பேரிஸன் கோவாலு!
பிரீமியம் ஸ்டோரி
கம்பேரிஸன் கோவாலு!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின்போது, ‘‘குக்கர் சத்தம்தான் ஒலிக்கிறது’’ என்று தொகுதியிலிருந்து குரல்கள் கேட்டன. இப்போது அது நிஜமாகியுள்ளது. அ.தி.மு.க-வுக்கு இரண்டாம் இடம். பாவம்... டெபாசிட் கூட வாங்க முடியாமல் பரிதாபகரமான நிலையில் தி.மு.க உள்ளது! ஜெயலலிதா மறைவுக்குப்பின் நடக்கும் முதல் தேர்தலே தி.மு.க-வுக்குக் கசப்பு மருந்தாக மாறியிருக்கிறது. இந்நேரம் கருணாநிதி ஆக்டிவாக இருந்திருந்தால், ஆர்.கே. நகர் காட்சிகள் எப்படியெல்லாம் மாறியிருக்கும்?

கம்பேரிஸன் கோவாலு!

• ஆர்.கே. நகர் தேர்தல்களமே கலர்ஃபுல்லாக இருந்திருக்கும். இலவச அறிவிப்புகள், மயக்கும் திட்டங்கள் என்று கருணாநிதியின் அணுகுமுறையே வேற லெவலில் இருந்திருக்கும். எல்லோரும் பேசும் பொருளாக தி.மு.க-வின் பிரசாரம் இருந்திருக்கும். ஆனால் ஸ்டாலினோ, கடைசிவரை இடைத்தேர்தலில் ஈடுபாடு இருப்பதாகவே காட்டிக்கொள்ளவில்லை. ஒரு பிரதான எதிர்க்கட்சியின் தலைவர் ‘என்னத்த’ கன்னையா போல சலிப்பாக இருந்தால் என்னத்த சொல்ல?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• தேர்தல் முடிவுகள் எப்படியாக இருந்தாலும் அதை கருணாநிதி டீல் செய்யும்விதமே அலாதியாக இருக்கும். கரகர குரலில் மைக் முன்னால் தோல்வியைப்பற்றி அலசும் அவரின் மேனரிசம் ‘அட, இவருக்கு ஓட்டுப் போட்டிருக்கலாமே’ எனத் தோன்ற வைக்கும். ஆனால், தோல்வி குறித்து ஸ்டாலின் என்ன பேசப்போகிறார் என்பதை முதல் சுற்றின் முடிவிலேயே ஸ்டேட்டஸாக போட்டுவிட்டார்கள் நெட்டிசன்கள். ஸ்டைலை மாத்துங்கஜி!

• தி.மு.க-வின் நல்ல நேரம் போல... வாக்குப்பதிவு நாளில் 2ஜி வழக்கின் தீர்ப்பு வெளியாகி குஷியாக்கியது. கருணாநிதி அதை எப்படியாவது ஓட்டு வாங்கும் தந்திரமாக மாற்றியிருப்பார். ஆனால் ஸ்டாலினோ, வழக்கம்போல சைலன்ட் மோட்தான். பல ஆண்டுகள் கழித்து ரீ-என்ட்ரியான தினகரனே ஒற்றை வீடியோவில் முன்னுக்கு வந்துவிட்டார். செயல் தலைவர்கிட்ட நிறைய எதிர்பார்க்குறோம்!

• தி.மு.க-வின் லேட்டஸ்ட் பிரச்னை இது!      பி.ஜே.பி-க்கு எதிரி அதன் தலைவர்களே என்றால், தி.மு.க-வுக்கு எதிரி அதன் இணைய ஆதரவாளர்கள். கள நிலவரம் தெரியாமல் கம்பு சுற்றிக்கொண்டே இருக்கிறார்கள். யாராவது எடுத்துச் சொன்னால், கடித்துக் குதறப் பாய்கிறார்கள். விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கருணாநிதியின் உடன்பிறப்புகளுக்கு அதிகம். கட்டாயம் நீங்க அவங்க சொல்றமாதிரி சுயபரிசோதனை பண்ணிக்கணும் ஸ்டாலின் சகாக்களே!

ஓவியம்: பிரேம் டாவின்சி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism