2017 ஸ்பெஷல்
Published:Updated:

2017 டாப் 10 பிரச்னைகள் - விடாது துரத்தும் விடாக்கண்டன்!

2017 டாப் 10 பிரச்னைகள் - விடாது துரத்தும் விடாக்கண்டன்!
பிரீமியம் ஸ்டோரி
News
2017 டாப் 10 பிரச்னைகள் - விடாது துரத்தும் விடாக்கண்டன்!

பாலபாரதி, அரசியல் செயற்பாட்டாளர்

2017-ம் ஆண்டு தமிழகத்தை ஆட்டிப்படைத்த 10 தலையாயப் பிரச்னைகளைப் பற்றி பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் அலசுகிறார்கள்...

தார் எண் பெறுவது அவசியமா இல்லையா என்கிற கேள்வி நாடாளு மன்றத்திற்கும் உச்சநீதிமன்றத்திற்கும்

2017 டாப் 10 பிரச்னைகள் - விடாது துரத்தும் விடாக்கண்டன்!

இடையில் நடந்து நடந்து கால்கள் தேய்ந்தே போயிருக்கும். இன்னமும் அதன்பயணம் ஓயவில்லை.

ஆதார்அட்டைக்காக அலைந்து திரிந்து கொண்டிருக்கிற மக்களின் சோகக்கதையோ சொல்லி மாளாது.

முதலில் `மக்களின் நன்மைக்குத்தான்’ என்றார்கள். `திட்டங்கள் சரியானவர்களுக்குக் கிடைப்பதற்காக’ என்றார்கள். பிறகு `தீயவர்களைப் பிடிக்க’ என்றார்கள்.  இப்போது எதுவுமே சொல்வதில்லை. ``எல்லாவற்றோடும் ஆதாரை இணையுங்கள் இல்லையென்றால் எல்லாமே கட்’’ என்று மிரட்டுகிறார்கள்!

``ஆதார் என்ன சர்வரோக நிவாரணியா?’’ என்று முன்பு ஒரு முழக்கம் இருந்தது. அதை முழங்கியவர் மோடி. அப்போது பா.ஜ.க ஆட்சியில் இல்லை. இப்போது பா.ஜ.க ஆட்சியில், ஆவி பிரிந்தாலும் ஆதார் அவசியம் என்கிறார்.

ஏழை எளியமக்கள் தேசிய ஊரக வேலைத்திட்டத்தில் கடுமையாக உழைத்தும் ஊதியம் பெறமுடியாத அளவுக்கு வங்கிகள் ஆதார் எண்ணைக் கேட்டு கிடுக்கிப்பிடி போடுகிறார்கள். வயதான ஓய்வூதியர்கள் நிலை பற்றிச் சொல்லவே வேண்டாம். நடுத்தரமக்களோ `இந்த ஆதார் தேசத்தில் ஏன் பிறந்தோம்’ என்கிற அளவுக்கு எல்.கே.ஜி அட்மிஷனுக்கும்கூட ஆதார்கேட்கும் துயரங்களைச் சுமக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
சரி, ஆதார் திட்டம் எப்படிச் செயல் படுகிறது?

2017 டாப் 10 பிரச்னைகள் - விடாது துரத்தும் விடாக்கண்டன்!

பா.ஜ.க ஆளும் மகாராஷ்டிராவில் விவசாயக் கடன் தள்ளுபடி பெறுபவர் சரியான நபர்தானா என அறிய கடன்தள்ளுபடி பெறும் விவசாயிகளை ஆதார் எண்ணோடு ஆன்லைனில் பதிவுசெய்து அங்குள்ள கூட்டுறவுத்துறை ஆய்வை மேற்கொண்டது.அப்போதுதான் கிணறுவெட்டப் பூதம்கிளம்பிய புதுக்கதையாகச் சில லட்சம் விவசாயிகளுக்கு ஒரே ஆதார் எண்ணையும் ஒரே வங்கி எண்ணையும் கொடுத்திருக்கிறார்கள் என்பது தெரியவந்தது.

உத்தரகாண்ட் மாநிலத்திலோ ஒரே கிராமத்தில் பிறந்த 800 பேருக்கும் ஆதார் கார்டில் ஒரே பிறந்ததேதிதான் பதிவாகியுள்ளது. இங்குமட்டுமல்ல ராஜஸ்தான் கிராமத்தி லும்கூட. சில ஆதார் அட்டை வாசிகளுக்கு அவர்கள் புகைப்படத்திற்குப் பதிலாகப் பிரபல நடிகர் நடிகையர் படங்களை அச்சிட்டும் வழங்கியுள்ளார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மைகள். ஆதார் மூலமாகச் சேமிக்கப்படும் தகவல்களை தனியார் நிறுவனங்கள் தவறான வழிகளில் பயன்படுத்துகின்றன. அவை எளிதில் பறிபோகும் சூழல் இருப்பதாகத் தகவல்தொழில்நுட்ப வல்லுநர்கள் அச்சமூட்டுகிறார்கள். ஆதாரைத் தவறாகப் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டு சில நிறுவனங்களுக்கு வழங்கிய லைசென்ஸ்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இத்தனை களேபரங்களுக்கும் நடுவில் ``ஆதார் எண் இணைக்கப்படாத ரேஷன்கார்டுக்கு அரிசியோ கோதுமையோ கிடைக்காது’’ என அறிவிக்கப்பட்ட ஜார்கண்ட்டில் ஒரு சிறுமி பட்டினியால் மரணமடைந்த சோகம் நம்மை உலுக்கியது. இன்னமும் அந்த ஏழைத்தாயின் கண்ணீரும் கதறலும் பல்லாயிரம்கேள்விகளை ஆட்சியர்களை நோக்கி எழுப்புகிறது.

ஆட்சியாளர்களுக்கு வேண்டுமானால் இது சர்வரோக நிவாரணியாக இருக்கலாம். ஆனால், சாதாரண மக்களுக்கு ஆதார், அச்சுறுத்தும் நோய்தான்.