2017 ஸ்பெஷல்
Published:Updated:

2017 டாப் 10 பிரச்னைகள் - ‘அம்மா’ இல்லாத ஆட்டம்!

2017 டாப் 10 பிரச்னைகள் - ‘அம்மா’ இல்லாத ஆட்டம்!
பிரீமியம் ஸ்டோரி
News
2017 டாப் 10 பிரச்னைகள் - ‘அம்மா’ இல்லாத ஆட்டம்!

ஜோ.ஸ்டாலின், ஊடகவியலாளர்

2017-ம் ஆண்டு தமிழகத்தை ஆட்டிப்படைத்த 10 தலையாயப் பிரச்னைகளைப் பற்றி பல்வேறு துறை

2017 டாப் 10 பிரச்னைகள் - ‘அம்மா’ இல்லாத ஆட்டம்!

சார்ந்த நிபுணர்கள் அலசுகிறார்கள்...

2017-ல் தமிழகம், தமிழக அரசாங்கம், தமிழக அரசியல் சந்தித்த டாப்டென் பிரச்னைகளின் மூலகாரணத்தை ஆராய்ந்தால், அது 2016 டிசம்பர் 5-ம் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் மரணமாகத்தான் இருக்கும்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி இரவு ஜெயலலிதா சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சாதாரண காய்ச்சல், நீர்ச் சத்துக் குறைபாடு என்று மறுநாள் அதிகாலை 1-மணிக்கு அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அதன்பிறகு, இரண்டு நாள்கள் கழித்து அமைச்சர்கள் பேச ஆரம்பித்தனர். ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த இரண்டாவது தளத்துக்குக்கூடப் போகாமல், ``அம்மா நலமோடு இருக்கிறார்... நாங்கள் பார்த்தோம்... அவர் இட்லி சாப்பிடுகிறார்” என்று பேட்டி கொடுத்தனர். மருத்துவமனைக்கு வெளியே, வெயிலில் காத்துக்கிடந்த அ.தி.மு.க தொண்டர்களும், தமிழக மக்களும் அவர்கள் சொல்வதை மட்டுமே நம்ப வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டனர்.

தமிழக அரசாங்கம் அதிகாரபூர்வமாக ஓர் அறிக்கையைக்கூட வெளியிடவில்லை; அப்போலோ மருத்துவமனை அதிகார பூர்வமாக வெளியிட்ட அறிக்கைகளில் தெளிவாக ஒன்றும் சொல்லப்படவில்லை; அமைச்சர்கள் உட்பட யாரும் ஜெயலலிதாவைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை; மருத்துவமனைக்குள் ஜெயலலிதா எப்படி இருக்கிறார் என்பது பற்றிய புகைப்படங்கள்  அப்போது எதுவும் வெளியாகவில்லை. ``ஜெயலலிதாவுக்கு கிட்னி ஃபெயிலியர்... இதயக் கோளாறு, நீரிழிவு நோய்ப் பிரச்னையால் கால்கள் அகற்றப்பட்டுவிட்டன” என வதந்திகள் புதுப்புது ரூபங்களில் இறக்கை கட்டிப் பறந்தன. ஆனால், கடைசிவரை உண்மை நிலவரம் என்ன என்பதை அப்போலோவும் சொல்லவில்லை; அரசாங்கமும் சொல்லவில்லை; ஆளுநரும் சொல்லவில்லை. ஆர்.கே.நகர்த் தேர்தலுக்கு ஒருநாளுக்கு முன்புதான் ஜெயலலிதா மருத்துவமனையில் பழச்சாறு குடிப்பதுபோன்ற காணொளி தினகரன் தரப்பிலிருந்து ரிலீஸாகியிருக்கிறது.

2017 டாப் 10 பிரச்னைகள் - ‘அம்மா’ இல்லாத ஆட்டம்!

டிசம்பர் 6-ம் தேதி மாலை 6 மணிக்கு ஜெயலலிதாவின் உடல் எம்.ஜி.ஆர் சமாதியின் அருகில் அடக்கம் செய்யப்பட்டது.  அன்று இரவு முதலே தமிழகத்தின் ஆளும் கட்சியான அ.தி.மு.க-வுக்கு பிரச்னைகள் வேர்விடத் தொடங்கின. சசிகலா-ஓ.பி.எஸ் இடையிலான  ஈகோ யுத்தம் `தர்மயுத்தமாக’ மாறியது. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பன்னீர்செல்வம், இரண்டு நாள்கள் கழித்து ஜெயலலிதா சமாதியில் மெளன விரதம் இருந்து மெளனம் கலைத்தார்.

அவசர அவசரமாக முதலமைச்சராகப் பொறுப்பேற்கும் நாளுக்குத் தேதி குறித்த சசிகலாவை, சொத்துக்குவிப்பு வழக்குத் தீர்ப்பு சிறையில் தள்ளியது. சிறைக்குப் போவதற்கு முன், அவர் எடப்பாடி பழனிசாமியைத் தமிழக முதல்வராக அறிவித்துவிட்டுப் போனார். அடுத்த முதல்வராக `நான்தான் ஆகவேண்டும்’ என்ற ஆசையில் இருந்த தினகரனுக்கு `இரட்டை இலைச் சின்னத்துக்காக லஞ்சம் கொடுத்தார்’ என்ற வழக்கு முட்டுக்கட்டை போட்டது. சிறைக்குப் போனார் தினகரன். பழனிசாமிக்கு தைரியம் வர ஆரம்பித்தது. தினகரனையே ஓரம்கட்டி, பன்னீரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, இரட்டை இலையையும் மீட்டு, ஆட்சி அதிகாரத்தைத் தன் கையில் கொண்டுவந்துவிட்டார் பழனிசாமி.  

ஆனால், மக்களைச் சந்திக்கும் துணிச்சல் மட்டும் இன்னும் பழனிசாமிக்கு வரவில்லை. தேர்தல் என்றாலே தலைசுற்றுகிறது. அதனால்தான் உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போகிறது. ஆர்.கே.நகர் அச்சுறுத்துகிறது. தேர்தலைச் சந்திக்கும் துணிச்சல் இல்லாதவர்களின் ஆட்சி எப்படி இருக்கும் என்பதற்கு, கடந்த ஓராண்டே சாட்சி!