Published:Updated:

`இனியொரு செம்பரம்பாக்கம் சோகம் நிகழாது..!’’ உஷாராகும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

`இனியொரு செம்பரம்பாக்கம் சோகம் நிகழாது..!’’ உஷாராகும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
`இனியொரு செம்பரம்பாக்கம் சோகம் நிகழாது..!’’ உஷாராகும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

`இனியொரு செம்பரம்பாக்கம் சோகம் நிகழாது..!’’ உஷாராகும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்


’’இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் அதிநவீன முன்னறிவிப்புக் கருவிகளின் துணைகொண்டு, 5 நாள்களுக்கு முன்பாகவே ஏற்படக்கூடிய வெள்ள அபாயம் மற்றும் அதன் உயரம், பாதிக்கப்படக்கூடிய இடம் போன்ற விவரங்களைக் கண்டறிய இயலும்’’ என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவித்துள்ளார். செம்பரம்பாக்கம் ஏரியை ஒட்டுமொத்தமாகத் திறந்துவிட்டு, சென்னையை மூழ்கடித்தது போன்ற சோகங்கள் இனி நடக்காது என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

இதற்காக, சென்னை வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்பு (CFLOWS) உருவாக்கப்பட்டுள்ளது. இது, சென்னை பெருநகர வெள்ள அபாய மேலாண்மையில் சரியான நடவடிக்கை மற்றும் முடிவுகளை மேற்கொள்ள உதவிபுரியும் தொழில்நுட்பம் ஆகும். இந்த அமைப்பு, தேசிய கடலோர ஆராய்ச்சி மையம், இந்தியத் தொழில்நுட்ப மையம் - சென்னை, இந்திய தொழில்நுட்ப மையம் மும்பை மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலை உணர்வு நிறுவனம் ஆகியவை கூட்டாக வடிவமைத்துள்ளது. சென்னையில் ஏற்படக்கூடிய வெள்ள அபாய நிலையை மழையளவு, கடல் அலை வேகம், ஆறுகள் மற்றும் நீர்த் தேக்கங்களில்  நீரின் அளவுகள் மற்றும் இன்னும் பிற புள்ளி விவரங்களின் அடிப்படையிலான நீரியக்க விசை சார்ந்த தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கணிக்கும்.  
அபாய காலங்களில் ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் குறைப்பது, பாதிக்கப்படக்கூடிய மக்கள் மற்றும் சொத்துகளைக் கண்டறிவது, மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கையைத் தீர்மானிப்பது, நிவாரப்பணிகளை மேற்கொள்வது போன்ற முடிவுகளை மேற்கொள்ள, இவ்வமைப்பு பெரிதும் உதவிபுரியும். மேற்படி அமைப்பு, நடப்பாண்டின் வடகிழக்குப் பருவமழை காலங்களில் TNSMART அமைப்புடன் இணைந்து பரிசோதனை மேற்கொள்ள உள்ளது. இதன் மூலம் பெறப்படும் முன்னெச்சரிக்கை தகவல்கள், வருவாய்த்துறை அலுவலர்களுக்கு TNSMART அமைப்பின் மூலம் வழங்கப்படும்.
கூடுதல் தலைமைச் செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையரின் கீழ் இயங்கும் இன்சிடன்ட் ரெஸ்பான்ஸ் அமைப்பின் அனைத்து அலுவலர்களும் இந்த சென்னை வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்பு முறையைப் (CFLOWS) பயன்படுத்துவர். இதுதொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம், இன்று 19.09.2018 தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர். பி.உதயக்குமார் முன்னிலையில் கூடுதல் தலைமைச் செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர் கொ.சத்யகோபால் மற்றும் தேசிய கடலோர ஆராய்ச்சி மைய இயக்குநர் டாக்டர் எம்.வி.ரமண மூர்த்தி ஆகியோருக்கு இடையே கையொப்பம் ஆனது.

இந்த ஒப்பந்தம்மூலம், சென்னையைப் பெருவெள்ள அபாயத்தில் இருந்து ஐந்து நாள்களுக்கு முன்னரே கண்டுபிடித்துக் காப்பாற்ற முடியுமாம்.

அடுத்த கட்டுரைக்கு