Published:Updated:

தீரன் சின்னமலை விழாவில் முதல்வர் கலந்து கொள்ள வேண்டும் - கோரிக்கை வைக்கிறது கொ.ம.தே.க.

தீரன் சின்னமலை  விழாவில் முதல்வர் கலந்து கொள்ள வேண்டும் - கோரிக்கை வைக்கிறது கொ.ம.தே.க.
தீரன் சின்னமலை விழாவில் முதல்வர் கலந்து கொள்ள வேண்டும் - கோரிக்கை வைக்கிறது கொ.ம.தே.க.

கோவை: "ஏப்ரல் 17 ல் வரும், தீரன் சின்னமலை பிறந்த நாள் விழாவில் தமிழக முதல்வர் கலந்து கொள்ள வேண்டும்" என கோரிக்கை வைத்திருக்கிறது கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி.

இது தொடர்பாக கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், 'தீரன் சின்னமலையின் பிறந்த நாள் வரும் ஏப்ரல் 17 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை கிண்டியில்  தீரன் சின்னமலை சிலை அமைந்திருக்கின்ற வளாகத்தைப் புதுப்பித்து அழகுபடுத்தியிருக்கிறீர்கள். தீரன் சின்னமலைக்கு சங்ககிரியில் மணிமண்டபம் அமைக்க உத்தரவிட்டது மட்டுமில்லாமல், இந்த ஆண்டு சென்னையில் உள்ள‌ சிலையையும் புதுப்பித்திருக்கிறீர்கள். இதற்காக உங்களுக்கு மனமார்ந்த நன்றியை கொங்கு நாட்டு மக்கள் சொல்லிக் கொள்கிறோம்.

##~~##
முந்தைய ஆட்சிக் காலத்தில் சிலை அமைப்பதற்கு நீங்கள் அனுமதி கொடுத்து ஏற்பாடுகளைச் செய்திருந்தாலும் இதுவரைக்கும் தீரன் சின்னமலையின் விழாக்களில் நீங்கள் கலந்து கொண்டது இல்லை. இந்த வருடம், உங்களால் புதுப்பிக்கப்பட்ட சிலை ஏப்ரல் 17 ஆம் தேதி திறக்கப்பட்டு மரியாதை செய்யப்பட இருக்கின்றது. கொங்கு நாட்டிலிருந்து பெருந்திரளான மக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னை வருகிறார்கள். அன்றைய தினம் தாங்களும் அந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்பது எங்களது விருப்பம், வேண்டுகோள்" என்று தெரிவித்து உள்ளார்.
கடந்த ஆண்டிலும் இதே கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், விழாவில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கவில்லை. தேர்தல் நெருங்குவதால் இந்த ஆண்டு விழாவுக்கு முதலவர் கட்டாயம் வருவார் என்கிறார்கள் கொங்கு மண்டலத்து மக்கள்.
ச.ஜெ.ரவி