Published:Updated:

எனக்கு வந்தா தக்காளி சட்னி, உனக்கு வந்தா ரத்தமா?

எனக்கு வந்தா தக்காளி சட்னி, உனக்கு வந்தா ரத்தமா?
எனக்கு வந்தா தக்காளி சட்னி, உனக்கு வந்தா ரத்தமா?

நாகை: திசைமாறி கோடியக்கரைக்கு வந்த இலங்கை மீனவர்களை, தமிழக மீனவர்கள் வரவேற்றதோடு, அவர்களின் பசியை போக்கியுள்ளனர். 15 நாள் சிறை வாசத்துக்கு பிறகு இலங்கை மீனவர்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர். எனக்கு வந்தா தக்காளி சட்னி, உனக்கு வந்தா ரத்தமா? என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

தமிழக மீனவர்கள் நம் கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தால்கூட உள்ளே வந்து அவர்களை தாக்கி வலைகளை அறுத்து சேதப்படுத்தி, மீன்களை அள்ளிக் கொண்டு விரட்டியடிப்பது இலங்கை கடற்படையின் வழக்கம். ஆனால் டீசல் இல்லாமல் திசை மாறி இந்திய கடல் எல்லைக்குள் வந்துவிட்ட இலங்கை மீனவர்களை இங்குள்ளவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?

##~~##
கடந்த மாதம் 23ஆம் தேதி இலங்கையில் உள்ள வல்வெட்டித்துறையில் இருந்து பைபர் போட்டில் மீன் பிடிக்க கிளம்பினார்கள் சுமணன், சந்துரு என்ற இரு மீனவர்கள். நடுக்கடலில் படகு திசை மாறிவிட, இருந்த டீசலும் தீர்ந்து போய் விட்டிருக்கிறது. இந்த நிலையில் கடலில் இறங்கி படகை தள்ளிக் கொண்டா போக முடியும்?
காற்றின் திசையில் நகர்ந்த படகு 25ஆம் தேதி கோடிக்கரையில் படகு கரை ஒதுங்கியது. அதிலிருந்து இறங்கிய இருவரையும் வரவேற்ற நம்ம மீனவர்கள் அவர்களுக்கு உணவு கொடுத்து ஆறுதல் சொல்லி சுங்கத் துறைக்கு தகவல் சொல்லி இருக்கிறார்கள். அவர்களும் மரைன் போலீசாரும் வந்து அழைத்துப்போய் தங்கள் மேலதிகாரிகளுக்கு தகவல் சொல்லி இருக்கிறார்கள்.
மேலதிகாரிகளோ, இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள். நீதிமன்றம் பதினைந்து நாள் காவலில் வைக்க உத்தரவிட்டது. நீதிமன்ற காவல் முடிந்து நேற்று முன்தினம் அவர்களை திரும்பவும் வேதாரண்யம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்கள். அவர்களை விடுதலை செய்து இலங்கைக்கு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
அதன்படி இன்று காலை 8 மணிக்கு நம் கடலோர காவல் படையினர் இந்திய கடற்படையிடம் அவர்களை ஒப்படைத்தனர். இந்திய கடற்படையினர் இருவரையும் அழைத்துச் சென்று இலங்கை கடல் எல்லையில் இருந்த இலங்கை கடற்படையினரிடம் முறைப்படி ஒப்படைத்திருக்கிறார்கள்.
எனக்கு வந்தா தக்காளி சட்னி, உனக்கு வந்தா ரத்தமா?
கரு.முத்து