Published:Updated:

`ஒரு வாரம்தான் உங்களுக்கு டைம்!' - தங்கமணிக்கு சவால்விடும் மு.க.ஸ்டாலின்

`மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி ஒரு வாரத்துக்குள் தன்மீது வழக்குத் தொடராவிட்டால், நான் அவர்மீது வழக்குப் போடுவேன்'' தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ``அமைச்சர் தங்கமணி மீது வைத்த குற்றச்சாட்டுக்கு அவர், உரிய விளக்கத்தைக் கூறியிருக்க வேண்டும்.  மாறாக, நான் தவறான குற்றச்சாட்டை கூறுவதாக என்மீது வழக்குப் போடப்போவதாகக் கூறியுள்ளார். நான், நேற்று ஆதாரத்தை வெளியிட்டுள்ளேன், ஏற்கெனவே குட்கா தொடர்பாக நான் தவறான குற்றச்சாட்டு கூறியுள்ளதாக, என்மீது சுகாதாரத்துறை அமைச்சர் வழக்கு போடுவதாகக் கூறியிருந்தார். ஆனால், நான்தான் அவர்மீது வழக்குத் தொடுத்துள்ளேன்.

தங்கமணி  கேட்டபடி நான் ஆதாரத்தை வெளியிட்டுள்ளேன். ஒரு வாரத்தில் அவர் என்மீது வழக்குப் போட வேண்டும். இல்லையெனில் நான் அவர்மீது வழக்குத் தொடர்ந்து, குட்கா விவாகரம்போல சிபிஐ விசாரணைக்குச் செல்வோம்” என்று தெரிவித்தார். மேலும் அவர், ``டிஜிபி அலுவலகம் முதல் அனைத்துத் துறை அதிகாரிகளின் வீடுகளிலும் சோதனை நடந்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் அ.தி.மு.க மீதான ஊழல்குறித்து கூட்டம் போடப்பட்டு மக்கள் மத்தியில் எடுத்துரைப்போம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு