Published:Updated:

`இந்திய அரசுதான் ரிலையன்ஸை பரிந்துரைத்தது’ - ரஃபேல் ஒப்பந்தம் குறித்து பிரான்ஸ் முன்னாள் அதிபர்

`இந்திய அரசுதான் ரிலையன்ஸை பரிந்துரைத்தது’ - ரஃபேல் ஒப்பந்தம் குறித்து பிரான்ஸ் முன்னாள் அதிபர்
`இந்திய அரசுதான் ரிலையன்ஸை பரிந்துரைத்தது’ - ரஃபேல் ஒப்பந்தம் குறித்து பிரான்ஸ் முன்னாள் அதிபர்

ரஃபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தை மட்டுமே இந்திய அரசு பரிந்துரைத்தது என பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹோலண்ட் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக, காங்கிரஸ், மத்திய அரசின் மீது தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது. மேலும், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சாதகமாக மத்திய அரசு செயல்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் புகார் தெரிவித்தது. காங்கிரஸின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து வந்த, மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லியும், நிர்மலா சீதாராமனும், `ரஃபேல் ஒப்பந்தத்தை பொறுத்தவரை, டஸால்ட் ஏவியேஷன் மற்றும் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனமும் தாமாக ஒப்பந்தம் போட்டுக்கொண்டதாக’ கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் முன்னாள் பிரான்ஸ் அதிபர் ஹோலண்ட் அந்நாட்டு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ``ரஃபேல் ஒப்பந்தத்தில் இந்திய அரசு ரிலையன்ஸ் நிறுவனத்தை மட்டுமே பரிந்துரை செய்தது. அதனால் வேறு வழியில்லாமல் அந்த நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டது. எங்களுக்கு வேறு வழியில்லை. எங்களிடம் பரிந்துரைத்த நிறுவனத்தைதான் நாங்கள் தேர்வு செய்தோம்” என்று தெரிவித்தார். இது தொடர்பாக ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ``பிரதமர் நரேந்திர மோடி மூடப்பட்ட கதவுகளுக்குள் ரஃபேல் ஒப்பந்ததை நடத்தியுள்ளார். பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்ட் க்கு நன்றி. அனில் அம்பானிக்கு பில்லியன் கணக்கு மதிப்புள்ள ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது இதன்மூலம் தெளிவாகிறது. பிரதமர் நாட்டுக்குத் துரோகம் விளைவித்துள்ளார். நம் ராணுவ வீரர்களின் ரத்தத்தை அவர் அவமதித்துள்ளார்’ என்று பதிவிட்டுள்ளார்.