பிரீமியம் ஸ்டோரி

ற்கெனவே ஆளுங்கட்சியின் கண்ணில் விரலை விட்டு ஆட்டுகிறார் டி.டி.வி.தினகரன். போதாக்குறைக்கு இப்போது ரஜினி வேறு களத்தில் குதிக்கப் போவதாகச் சொல்லியிருக்கிறார். கமல் வெயிட்டிங் லிஸ்ட்டில் பயணித்துக்கொண்டிருக்கிறார். இதே நிலைமையில் போனால்,  எடப்பாடி- பன்னீர் தரப்பு அடுத்த தேர்தலில் டெபாசிட்கூட வாங்கமுடியாமல் தவிப்பார்கள் போல! அந்த நிலையைத் தவிர்க்க சில யோசனைகள்...

கம்பேரிஸன் கோவாலு!

‘ஆன்மிக அரசியலை’ ரஜினியும், ‘இணையதள அரசியலை’ கமலும் கையிலெடுத்திருக்கிறார்கள். இவர்களும் தங்கள் பங்குக்கு ஏதாவது ஓர் அரசியலைக் கையிலெடுக்க வேண்டுமே! எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா மேடைகளில் தியான போஸில் தூங்கிப் பழகிய இவர்கள், யோகா அரசியல், தியான அரசியல் போன்றவற்றில் ஏதாவது ஒன்றைக் கைக்கொள்ளல் நலம். யோகா அரசியலுக்கு ஓ.எஸ்.மணியனும் தியான அரசியலுக்கு வைத்திலிங்கமும் தளபதிகளாக இருக்கலாம்.

முள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டும். எனவே ரஜினி, கமல் போன்ற சினிமா ஆட்களுக்குப் போட்டியாக சிங்கமுத்து, விந்தியா, சி.ஆர்.சரஸ்வதி போன்ற சினிமா ஆட்களைக் களமிறக்கலாம். ஆகச்சிறந்த நடிகராகத் தன்னைக் கடந்த ஆண்டில் நிறுவிக்கொண்ட ஓ.பி.எஸ்., இந்த கலைடாஸ்கோப் கூட்டத்தை வழிநடத்தலாம்.

ரஜினியைப் போலவே வெப்சைட், மொபைல் ஆப் எனக் களமிறங்கலாம். ஆனால், அதில் பாசிடிவ் கமென்ட்களைவிட நெகடிவ் கமென்ட்கள் வரவே வாய்ப்பு அதிகம். அப்படியாகும் பட்சத்தில், போட்டியைச் சமாளிக்க வழக்கம் போல டெல்லி தலைமையிடம் உதவி கேட்கலாம். இப்போதைய சூழலில், டெல்லி தலைமை ‘பாபா’வுக்கு ஹாய் சொல்லவே வாய்ப்புகள் அதிகம். அதனால் சொந்த முயற்சியில் சமாளித்தல் சிறப்பு!

கடைசியாக வேறு வழியே இல்லாவிட்டால், திரும்பவும் சண்டை போட்டுக்கொண்டு சமாதி பக்கம் போய் தர்மயுத்தம் தொடங்க வேண்டியதுதான். இருவரில் ஒருவர் ரஜினியோடு கூட்டுச் சேர்ந்துகொள்ளலாம். கடைசியில் டி.டி.வி.தினகரனைத்  தனிமைப்படுத்தியதைப் போல ரஜினியை தனிமைப்படுத்தலாம். ஆனா, இவ்ளோ எல்லாம் யோசிக்க மாட்டாங்களே! அதனால் வாய்ப்பு இல்லை.

ஓவியம்:  பிரேம் டாவின்சி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு