Published:Updated:

அரசு டாக்டர்கள் கிளினிக் வைக்கத் தடையா? விஜயபாஸ்கர் பதில்

அரசு டாக்டர்கள் கிளினிக் வைக்கத் தடையா? விஜயபாஸ்கர் பதில்
அரசு டாக்டர்கள் கிளினிக் வைக்கத் தடையா? விஜயபாஸ்கர் பதில்

அரசு டாக்டர்கள் கிளினிக் வைக்கத் தடையா? விஜயபாஸ்கர் பதில்

`அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் தனியாக கிளினிக் வைக்கக் கூடாது என உத்தரவு பிறப்பிப்பதற்கு வாய்ப்பே இல்லை'' என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

நாகர்கோவிலில் உள்ள ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை இன்று ஆய்வு செய்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,  பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``100 எம்.பி.பி.எஸ் சீட்டுக்களுடன் செயல்படும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இடங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்தக் கல்லூரியில் புதிதாக 11 கோடியே 85 லட்சம் ரூபாய் செலவில் நவீன மருத்துவ உபகரணங்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.

விபத்து சிகிச்சைப் பிரிவில் சிறப்பு விபத்து சிகிச்சைப் பிரிவு அமைக்கப்படும். 3 கோடி ரூபாய் செலவில் இதய நோயாளிகளுக்கு சிகிச்சைக்கான கருவிகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை 17 கோடியே 23 லட்சம் ரூபாய் கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களில் இந்த மருத்துவக் கல்லூரியில் ஒரு மகப்பேறு இறப்புகூட இல்லாதது அரசு மருத்துவர்களின் திறமையை வெளிப்படுத்துகிறது. அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் தனியாக கிளினிக் வைக்கக் கூடாது என உத்தரவு பிறப்பிப்பதற்கு வாய்ப்பே இல்லை" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு