Published:Updated:

மோடியும் அனில் அம்பானியும் இணைந்து நடத்திய `சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்'- ராகுல் விமர்சனம்

சுகன்யா பழனிச்சாமி
மோடியும் அனில் அம்பானியும் இணைந்து நடத்திய `சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்'- ராகுல் விமர்சனம்
மோடியும் அனில் அம்பானியும் இணைந்து நடத்திய `சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்'- ராகுல் விமர்சனம்

``பிரதமர் நரேந்திர மோடியும் அனில் அம்பானியும் கூட்டாக இணைந்து பாதுகாப்புத் துறையில் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தி உள்ளனர்'' என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகச் சாடியுள்ளார். 

மோடியும் அனில் அம்பானியும் இணைந்து நடத்திய `சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்'- ராகுல் விமர்சனம்

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராகக் கடந்த ஜூலை மாதம் 20-ம் தேதியன்று காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தன. இந்தத் தீர்மானம் தோல்வியில் முடிந்தது. இருப்பினும், அன்றைய தினம்முதல் ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதலில் நடைபெற்ற ஊழலை பாஜக-வுக்கு எதிராகக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கையில் எடுத்தன. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ப.சிதம்பரம் ஆகியோர் பா.ஜ.க அரசைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ராகுல் காந்தியும் ரஃபேல் விவகாரம் குறித்து ஆலோசனைக் கூட்டமும் நடத்தினார். விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்கவும் நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு கெடுவும் விதித்திருந்தார் ராகுல்

இந்நிலையில், ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதலுக்காக போடப்பட்ட ஒப்பந்தத்தில் ரிலையைன்ஸ் நிறுவனத்தையும் கூட்டாளியாக சேர்க்க வேண்டும் என மத்திய அரசு பரிந்துரை செய்ததாக பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பிராங்சுவா ஹெலாந்த் தெரிவித்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

இப்படியான நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், `பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அனில் அம்பானி ஆகியோர் இணைந்து, இந்திய பாதுகாப்பு படையில் ரூ.1.30 லட்சம் கோடி அளவில் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தி உள்ளனர். இதனால், எங்கள் தியாகி வீரர்களின் ரத்தத்தை அவமதித்து விட்டீர்கள் மோடி ஜி. வெட்கமாக இருக்கிறது. இந்தியாவின் ஆன்மாவுக்குத் துரோகம் இழைத்துவிட்டீர்கள்' எனப் பதிவிட்டுள்ளார்.