ரஜினியும் கமலும் அரசியல் என்ட்ரிக்கு நாள் குறிக்க இருக்கிறார்கள். விஷாலும் லாரன்ஸும் ஏற்கெனவே ரஜினிக்கு ஆதரவு தெரிவித்துவிட்டார்கள். லேட்டஸ்டாக இயக்குநர் பாக்யராஜ் ‘நானும் திரும்ப அரசியலுக்கு வர்றேன்’ என ஸ்டேட்மென்ட் விட்டிருக்கிறார். ‘இன்னும் யாரெல்லாம் அரசியலுக்கு வரல?’ - ‘ரமேஷ் அப்பாவும் சுரேஷ் அப்பாவும்’ என்கிற ரேஞ்சுக்கு சென்றுகொண்டிருக்கிறது தமிழக அரசியல். அடுத்து யாரெல்லாம் தனிக்கட்சி தொடங்க வரலாம்..?

கருத்துச் சொல்வதில் இவர் ரஜினிக்கு நிகர். ட்வீட் போடுவதில் இவர் கமலுக்கு நிகர். அணி மாறுவதில் இவருக்கு நிகரென யாருமே இல்லை. யெஸ். எஸ்.வி.சேகர்தான். விஷாலுக்கும் இவருக்கும் முட்டிக்கொண்டது. போதாக்குறைக்கு குருமூர்த்தி பஞ்சாயத்து வேறு. எனவே, தனிக்கட்சித் தொடங்கித் தனி ஆளாக வலம் வரலாம். பிரசாரம் செய்ய நாடகங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

கிட்டத்தட்ட மேலே இருப்பவரின் சிஷ்யப்பிள்ளை இவர். ஒருகாலத்தில் இவரும் விஷாலின் உற்ற கூட்டாளிதான். அப்புறம் என்ன காரணமோ, ‘டூ’ விட்டு விலகிக்கொண்டார். முகாம் மாறுவதிலும் அப்படியே எஸ்.வி.சேகரைப் பின்பற்றுவார். அரசியல் குடும்பத்திலிருந்து வந்து, பதவிகளையும் பார்த்தவர் என்பதால், புதிதாகக் கட்சி தொடங்குவதற்கு தடையும் இருக்காது. நீங்க வாங்க ஜே.கே.ரித்தீஷ் சார்!

மக்கள் நாயகன் ராமராஜன். ஜிகுஜிகு ஜிகினா பவுடர் மின்னும் முகத்துடன் கண்ணைக் கூச வைக்கும் லிப்ஸ்டிக் சகிதம் திரையில் தோன்றினால் தாய்க்குலங்களே கைதட்டுவார்கள். பாட்டுப் பாடி, காளையையே பசு மாடாக மாற்றிய மேஜிக்மேன். அம்மா இருந்தவரை, அவரின் அதிதீவிர விசுவாசியாக இருந்த இந்த முன்னாள் எம்.பி., இப்போது சைலன்ட் மோடில் இருக்கிறார். நடக்கும் ரகளைகளையெல்லாம் பார்த்துவிட்டு இவரும் தொடை தட்டி இறங்கினால், கச்சேரி களைகட்டும்.

மலையூர் மம்பட்டியானாக பட்டிதொட்டியெல்லாம் பேர் வாங்கியவர். அவரின் மகனும் பதினாறு அடி பாய்ந்து உலக அழகியுடன் எல்லாம் ஜோடி கட்டினார். பாவம்... வாழ்ந்துகெட்ட ஜமீன்தார்போல இப்போது ஃபேஸ்புக்கில் பிறந்தநாள் வாழ்த்துகள் போட்டுக்கொண்டிருக்கிறார். எனவே, தியாகராஜனும் பிரசாந்தும் இணைந்து அரசியலில் அப்பா - மகன் காம்போவில் குதித்தால், அவர்களின் படம்போலவே எதிர்பார்க்காத ரிசல்ட்டுகள் வர வாய்ப்பு உண்டு. செய்வீர்களா?

ஓவியம்: பிரேம் டாவின்சி