Published:Updated:

`கருணாஸ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது!’ - தமிழிசை

`கருணாஸ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது!’ - தமிழிசை
`கருணாஸ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது!’ - தமிழிசை

`கருணாஸ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது!’ - தமிழிசை

"கருணாஸ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, எச்.ராஜா மீதான வழக்கை அவர் நீதிமன்றத்தில் சட்டப்படி சந்திப்பார்" என்று தமிழிசை இன்று தெரிவித்தார்.

`கருணாஸ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது!’ - தமிழிசை

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தரிசனம் செய்ய இன்று வந்த பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் செய்தியாளர்களிடம் பேசும்போது, "இன்று பிரதமர் தொடங்க உள்ள மக்களுக்கான காப்பீட்டு திட்டம் வெற்றி பெற சிறப்பு வழிபாடு செய்தேன். இத்திட்டத்தில் தமிழக அரசு இணைந்ததற்கு நன்றி. சிலை திருட்டு அதிகமாக நடைபெறுகிறது. போலியான சிலையை வழிபடுகிறோமோ என பக்தர்களிடம் கேள்வி எழுந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கோயிலை விட்டு வெளியேற வேண்டும் என்பதே பா.ஜ.கவின் நிலைப்பாடு.

முதல்வர் முதல் கடைநிலை ஊழியர் வரை வரம்பு மீறி யார் பேசினாலும் தவறுதான். கருணாஸ் மீது அரசு சட்டபடி நடவடிக்கை எடுத்துள்ளது. அவர் பல முறை இவ்வாறு பேசி உள்ளார். எச்.ராஜா மீதான  வழக்கை நீதிமன்றத்தில் சட்டப்படி எதிர்கொள்வார். விநாயகர் விழாவை அரசியல் ஆக்க்குகிறார்கள். திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு