Published:Updated:

மனோகர் பாரிக்கர் தான் கோவாவின் முதல்வர்! - அமித் ஷா திட்டவட்டம்

சத்யா கோபாலன்
மனோகர் பாரிக்கர் தான் கோவாவின் முதல்வர்! - அமித் ஷா திட்டவட்டம்
மனோகர் பாரிக்கர் தான் கோவாவின் முதல்வர்! - அமித் ஷா திட்டவட்டம்

'கோவாவின் முதல்வராக மனோகர் பாரிக்கரே தொடர்வார்' என அமித் ஷா ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிகர், உடல்நலக் குறைவினால் சில மாதங்களாகவே தொடர் சிகிச்சை மேற்கொண்டுவருகிறார். கணையப் புற்றுநோய் காரணமாக, முன்னர் அமெரிக்கா சென்று சிகிச்சைபெற்று வந்தார். தற்போது, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவருகிறார். 

கோவா முதல்வர் உடல்நலம் பாதிக்பட்டுள்ளதால்,அங்கு குடியரசுத்தலைவர் ஆட்சியைக் கொண்டுவர வேண்டும் என காங்கிரஸார் வலியுறுத்தினர். தொடர்ந்து பல மாதங்களாக கோவாவில் அரசியலமைப்பு ரீதியான நெருக்கடி, பிரச்னைகள் ஏற்பட்டுள்ளதால் உடனடியாக அங்கு ஆட்சி மாற்றம் அல்லது வேறு முதல்வரை நியமிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துவந்தது. 

இந்நிலையில், இது பற்றி கருத்து தெரிவித்துள்ள பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா, “ கோவா பிரச்னை தொடர்பாக பா.ஜ.க முக்கியத் தலைவர்களின் ஆலோசனை நடைபெற்றது.  அதன் இறுதியில், மனோகர் பாரிக்கரே கோவாவின் முதல்வராகத் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அம்மாநில அமைச்சரவை மற்றும் துறைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்படும்” என தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.