Published:Updated:

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா அழைப்பிதழில் மு.க.ஸ்டாலின்; டி.டி.வி. தினகரன் பெயர்கள்!

கலிலுல்லா.ச
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா அழைப்பிதழில் மு.க.ஸ்டாலின்; டி.டி.வி. தினகரன் பெயர்கள்!
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா அழைப்பிதழில் மு.க.ஸ்டாலின்; டி.டி.வி. தினகரன் பெயர்கள்!

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா நிகழ்ச்சிக்கு மு.க.ஸ்டாலின் மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்றுவருகிறது. அரசு விழாவாக நடைபெறும் இந்த விழாக்களில் முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொள்வது வழக்கம். இந்நிலையில், சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா நடத்த தமிழக அரசு முடிவுசெய்துள்ளது. இதற்கான அழைப்பிதழ் தற்போது வெளியாகி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அழைப்பிதழில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ ஆகியோரின்  பெயர்கள் இடம்பெற்றுள்ளன. மு.க.ஸ்டாலின், டி.டி.வி. தினகரன் வாழ்த்துரை வழங்குகின்றனர். மேலும், தி.மு.க சார்பில் கனிமொழி எம்.பி-க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா மலர் வெளியிடப்பட உள்ளது. அதேபோல, தமிழ்நாடு 50-வது பொன் விழா ஆண்டையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்குத் தங்கப்பதக்கம் அணிவித்து, காசோலை வழங்கப்பட உள்ளது. இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றுகிறார்.