Published:Updated:

வேப்பம்பட்டு தண்டவாளத்தில் ஒரு மணி நேரம் உயிருக்குப் போராடிய வாலிபர்! - ஆர்பிஎஃப் போலீஸின் அலட்சியம்

சகாயராஜ் மு
அஸ்வினி.சி
இரா.தேவேந்திரன்
வேப்பம்பட்டு தண்டவாளத்தில் ஒரு மணி நேரம் உயிருக்குப் போராடிய வாலிபர்! - ஆர்பிஎஃப் போலீஸின் அலட்சியம்
வேப்பம்பட்டு தண்டவாளத்தில் ஒரு மணி நேரம் உயிருக்குப் போராடிய வாலிபர்! - ஆர்பிஎஃப் போலீஸின் அலட்சியம்

விரைவு ரயிலில் இருந்து தவறிவிழுந்த வாலிபர், தலையில் பலத்த அடிபட்டு ஒரு மணி நேரம் உயிருக்குப் போராடிய சம்பவம் வேப்பம்பட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வேப்பம்பட்டு தண்டவாளத்தில் ஒரு மணி நேரம் உயிருக்குப் போராடிய வாலிபர்! - ஆர்பிஎஃப் போலீஸின் அலட்சியம்


அந்த ரயிலில் பயணம்செய்த பெண் பயணி ஒருவர், இந்தச் சம்பவம்குறித்து பகிர்ந்துகொண்ட விவரங்கள் பின் வருமாறு... 

`அரக்கோணத்தில் இருந்து காலை 6.40 மணியளவில் லோக்கல் விரைவு ரயில் புறப்பட்டது. வழக்கமாக அந்த ரயிலில் கூட்டம் அலைமோதும். நான் அந்த ரயிலில்தான் தினமும் அலுவலகத்துக்குச் செல்வேன். அரக்கோணத்திலேயே ரயில் சீட்டுகள் நிரம்பிவழியும். அதுவும் திங்கள்கிழமை என்றால் ரயிலில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும். ஒருவர் கால்மீது மற்றொருவர் நின்றுகொண்டு வரும் நிலைதான். இன்றும் அப்படித்தான். இன்று காலை 7.25 மணியளவில், வேப்பம்பட்டு ரயில் நிலையத்தை ரயில் கடந்ததும், கூட்டம் அதிகரித்தது. ரயில்நிலையத்தில் இருந்து சிறிது தூரம் ரயில் நகர்ந்ததும் கூட்ட நெரிசலில் கால்களை ஊன்றி நிற்க முடியாமல் படியில் பயணம்செய்த ஒருவர், ரயிலில் இருந்து தண்டவாளத்தில் விழுந்தார். நான், பெண்கள் கம்பார்ட்மென்ட்டில் இருந்ததால், அந்த நபர் விழுந்திருந்ததை மட்டும்தான் பார்க்க முடிந்தது.  சிலர், ரயில்வே உதவி எண்ணுக்குக் கால் பண்ணி, இப்படி ஒருவர் விழுந்துவிட்டார் என்று தகவல் கொடுத்தனர். சிலர், அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுக்கவும் முயன்றனர். ஆனால் முடியவில்லை.

ரயில் சென்ட்ரல் வந்தடைந்தது. அவரை யாராவது காப்பாற்றியிருப்பார்கள் என்று மனதைத் தேற்றிக்கொண்டேன்.  ஆனால், கீழே விழுந்தவர் ஒரு மணி நேரம் வரை தண்டவாளத்தில் வலியில் துடித்துக்கொண்டிருந்தாராம். 8.30 மணியளவில், என் கணவர் ரயிலில் வந்தபோது, அப்போதும் அந்த நபர் தண்டவாளம் மீதுதான் வலியில் துடித்தபடி இருந்துள்ளார். ஆர்.பி.எஃப்  உதவி எண்ணுக்குக் தகவல் கொடுத்த பின்னரும், எந்த ரயில்வே காவலர்களும் அங்கு வரவில்லை. பின்னர், அந்த வாலிபர் 108 ஆம்புலன்ஸில் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக என் நண்பர்கள் சிலர் கூறினர். உயிர் பிழைக்க வேண்டும் என்று கடவுளை பிரார்த்திக்கிறேன். எங்களால் அவருக்கு உதவ முடியவில்லை என்று குற்றவுணர்ச்சியாக உள்ளது’ என்றார் படபடப்புடன்.

திருவள்ளுர் இருப்புப்பாதை காவல் நிலைய போலீஸாருக்கும் திருவள்ளூர் பாதுகாப்பு காவல் நிலைய போலீஸாருக்கும் பொதுமக்கள் தகவல் கொடுத்துள்ளனர். ஆனால் அவர்கள் யாரும் வரவில்லை. பின்னர் பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸூக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து, விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ், அந்த வாலிபரை ஏற்றிக்கொண்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. அந்த வாலிபர் சுயநினைவின்றி ஆபத்தான நிலையில் இருப்பதால் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அந்த வாலிபர் யார்... என்ன என்பதுகுறித்து எந்தத் தகவலும் வெளிவரவில்லை. இந்தச் சம்பவம்குறித்து ரயில்வே போலீஸுக்குத் தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘இன்று காலை இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக எந்த போன் காலும் வரவில்லை’ என்று கூறி போன் லைனைத் துண்டித்தனர்.

`அரக்கோணத்தில், காலை 6.40 மணிக்கு புறப்படும் இந்த ரயிலில் 9 பெட்டிகள் என்பதால், கூட்டம் எப்போதுமே அதிகமாகத்தான் இருக்குமாம். அந்த வழித்தடத்தில் சென்னைக்கு வந்து பணிபுரியும் மக்கள் ஆயிரக்கணக்கானோர், இந்த ரயிலில்தான் பயணிப்பார்கள். லோக்கல் விரைவு ரயில் என்பதால், அலுவலகத்துக்கு சிக்கிரமாகச் செல்ல முடியும் என்பதால்தான் கூட்டமாக இருந்தாலும் பொறுத்துக் கொண்டு இந்த ரயிலில் பயணிக்கிறார்கள். மேலும், 9 பெட்டி ரயிலுக்குப் பதில் 12 பெட்டி ரயிலை விட வேண்டும்'' என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.