Published:Updated:

வெளிநாட்டு சிகிச்சை முடிந்ததோடு பிரதமரை சந்திக்கிறார் பினராயி!

சிந்து ஆர்
வெளிநாட்டு சிகிச்சை முடிந்ததோடு பிரதமரை சந்திக்கிறார் பினராயி!
வெளிநாட்டு சிகிச்சை முடிந்ததோடு பிரதமரை சந்திக்கிறார் பினராயி!

மனைவியுடன் 15 நாள்கள் அமெரிக்கப் பயணம் முடித்து திருவனந்தபுரம் திரும்பிய கேரள முதல்வர் பினராயி விஜயன், நாளை பிரதமரை சந்திப்பதற்காக இன்று டெல்லி புறப்படுகிறார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன், மருத்துவ சிகிச்சைக்காக கடந்த 2-ம் தேதி அமெரிக்கா சென்றார். மனைவி கமலாவுடன் சென்ற அவர் 15 நாள்கள் அங்கு தங்கி சிகிச்சைபெற்றார். மருத்துவ சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து, நியூயார்க்கில் மலையாளிகள் சங்கம் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். பின்னர், துபாய் வழியாக நேற்று அதிகாலை 3.30 மணிக்கு திருவனந்தபுரத்துக்கு வந்துசேர்ந்தார். முதல்வர் பினராயி விஜயனை வரவேற்க, அவரது உதவியாளர் மற்றும் பாதுகாவலர் என இரண்டுபேர் மட்டுமே சென்றிருந்தனர். பின்னர், காலை 10.20 மணிக்கு தலைமைச்செயலகம் சென்றார்.

இன்று, மழை பாதிப்புகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் அவர், இன்று மாலை டெல்லி புறப்படுகிறார். பிரதமர் மோடி, பினராயி விஜயனைச் சந்திக்க நாளை நேரம் ஒதுக்கியிருப்பதால், மோடியை நேரில் சந்தித்து கேரளத்திற்குக் கூடுதல் நிதி  கேட்க இருக்கிறார். மேலும், வரும் 25, 26-ம் தேதிகளில் டெல்லியில் நடக்கும் சி.பி.எம். பொலிட்பீரோ கூட்டத்திலும் கலந்துகொள்கிறார்.