Published:Updated:

தமிழகத்தில் பெரும்பான்மை மக்களுக்குத்தான் பாதுகாப்பு இல்லை! - தமிழிசை

சுகன்யா பழனிச்சாமி
தமிழகத்தில் பெரும்பான்மை மக்களுக்குத்தான் பாதுகாப்பு இல்லை! - தமிழிசை
தமிழகத்தில் பெரும்பான்மை மக்களுக்குத்தான் பாதுகாப்பு இல்லை! - தமிழிசை

``தமிழகத்தில், பெரும்பான்மை மக்களுக்கு பாதுகாப்பு இல்லை'' என்று பா.ஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை,`காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்புகள் மற்றும் கலவரங்கள் உள்ளிட்ட பிரச்னைகளைப்போல பா.ஜ.க-வின் இந்த நான்கரை ஆண்டு ஆட்சிக் காலத்தில் நாட்டில் எந்தவொரு அசம்பாவித சம்பவமும் நடக்கவில்லை. மோடி வந்துவிட்டால் மதக்கலவரம் வந்துவிடும் என்று எதிர்பார்த்து, அதில் அரசியல் செய்ய வேண்டும் என்று காத்திருந்தார்கள். ஆனால், அது நடக்கவில்லை என்றவுடன் தேவையில்லாத சூழ்நிலையை உருவாக்கிவருகின்றனர்' என்றவரிடம், 

அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைதுசெய்யப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, `ஹெச். ராஜாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சிகள், கருணாஸ் பேச்சுக்கு எதனால் கண்டனம் தெரிவிக்கவில்லை. அதனால், தேவையில்லாத குற்றச்சாட்டுகளை பா.ஜ.க மீது எதிர்க்கட்சிகள் வைத்து வருகின்றன. விநாயகர் சதுர்த்தி விவகாரத்தில், பா.ஜ.க-வைச் சேர்ந்த 4 பேர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர். தொல்.திருமாவளவன் போன்றவர்கள் எல்லாம், சிறுபான்மை மக்களுக்குத்தான் பாதுகாப்பு இல்லை என்று சொல்லிவருகிறார்கள். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், தமிழகத்தில் பெரும்பான்மை மக்களுக்குத்தான் பாதுகாப்பு இல்லை' என்று கூறினார்.