Published:Updated:

`கூட்டணி விஷயத்தில் அ.தி.மு.க-வும் தி.மு.க-வும் ஒன்றுதான்' - விளாசிய பொன்.ராதாகிருஷ்ணன்!

சிந்து ஆர்
`கூட்டணி விஷயத்தில் அ.தி.மு.க-வும் தி.மு.க-வும் ஒன்றுதான்' - விளாசிய பொன்.ராதாகிருஷ்ணன்!
`கூட்டணி விஷயத்தில் அ.தி.மு.க-வும் தி.மு.க-வும் ஒன்றுதான்' - விளாசிய பொன்.ராதாகிருஷ்ணன்!

ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால் தூத்துக்குடி மாவட்டத்தில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாக அங்குள்ள சிலர் கூறினார்கள். அப்படி ஒரு சூழ்நிலை ஏற்படும் என்றால் அது நல்லதல்ல என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "அற்புதம்மாள் ஒரு தாய் என்கிற உணர்வோடு ஆளுநரைச் சந்தித்துள்ளார். இதில் நான் கருத்து கூற விரும்பவில்லை. தாய் தன் மகன் மீது கொண்ட பாசத்தை அளவிட முடியாது. அதே நேரத்தில் சட்டத்தின் நிலையைப் பார்க்க வேண்டும். நாளை நமது நாடு என்ன நிலையில் இருக்க வேண்டும் என்பதைப் பார்த்து ஆளுநர் முடிவெடுப்பார். பாதிக்கப்பட்டவர்கள் கருத்தையும் கேட்டு அதுவும் கருத்தில் கொள்ளப்படும். ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால் தூத்துக்குடி மாவட்டத்தில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாக அங்குள்ள சிலர் கூறினார்கள். அப்படி ஒரு சூழ்நிலை ஏற்படும் என்றால் அது நல்லதல்ல. மக்களுக்குப் பொருளாதார ரீதியிலோ அல்லது உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையிலோ, பாதிப்பு இல்லாமல் அரசு செயல்பட வேண்டும். தேர்தலுக்குக் காலம் இருக்கிறது, அந்த நேரத்தில் கூட்டணி குறித்து பா.ஜ.க முடிவு செய்யும். தமிழகத்தில் பல ஆண்டுகளாகக் கூட்டணி ஆட்சிதான் நடைபெறுகிறது. தி.மு.க 1962-ம் ஆண்டு முதலே கூட்டணியுடன் தான் ஆட்சி செய்தது. கூட்டணி வைப்பதில் அ.தி.மு.க-வும் தி.மு.க-வும் ஒன்றுதான்" என்றார்.