எம்.ஜி.ஆர் பிறந்த நாளில் மன்னார்குடியில் அ.தி.மு.க அலுவலகம் அருகே இருக்கும் கொடிக்கம்பத்தில் அ.தி.மு.க கொடியை இறக்கிவிட்டு, தினகரன் அணி சார்பாக திவாகரனின் மகன் ஜெயானந்த் கொடியேற்றினார். (கொடியில் அண்ணா இருந்தால் அ.தி.மு.க கொடி; அண்ணா மிஸ்ஸிங் என்றால் தினகரன் கொடி!) இதைத் தொடர்ந்து, தினகரன் தரப்பினரும், மன்னார்குடிக்காரரான உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தரப்பினரும் நடத்தும் மல்லுக்கட்டு, மன்னார்குடி பகுதியில் பதற்றத்தைப் பற்ற வைத்திருக்கிறது.

கருவாக்குறிச்சி, எடகீழையூர், பைங்கா நாடு உள்பட பல ஊர்களிலும் தினகரன் ஆதரவாளர்கள் தங்கள் கொடியை ஏற்றினர். இதனால் ஆத்திரமடைந்த அ.தி.மு.க-வினர், பிரச்னையை அமைச்சர் ஆர்.காமராஜின் கவனத்துக்குக் கொண்டுசென்றனர்.

ஜனவரி 18-ம் தேதி ஆர்.காமராஜ் மன்னார்குடி வந்தார். ‘‘அவங்க கொடியை ஏத்தினதைத் தடுத்திருக்க வேணாமா? நீங்கள் யார் பக்கம் இருக்கீங்க?’’ என அ.தி.மு.க நகரச் செயலாளர் மாதவனை அமைச்சர் வறுத்தெடுத்துள்ளார். பிறகு, ‘‘ஜெயானந்த்மீது புகார் கொடுங்க. மத்ததை நான் பாத்துக்கிறேன்’’ என்று சொன்ன காமராஜ், ‘‘அவங்க கொடியை இறக்கி கிழிச்சுப் போட்டுட்டு நம்ம கொடியை ஏத்துங்க’’ எனக் கோபமாகக் கட்டளையிட்டார்.

அதன்பின் பல இடங்களில் தினகரனின் கொடிகள் கிழிக்கப்பட்டு, அ.தி.மு.க கொடிகள் ஏற்றப்பட்டன. இந்த நிலையில், ‘‘அமைச்சர் காமராஜ், அவர் மைத்துனர் ஆர்.ஜி.குமார் ஆகியோரால் என் உயிருக்கு ஆபத்து’’ என அ.தி.மு.க நகரச் செயலாளர் மாதவன் பேட்டி கொடுத்தார். அது, மேலும் பரபரப்பைக் கூட்டியது.

கருவாக்குறிச்சியில் தினகரனின் ஆதரவாளர்களுக்கும் அ.தி.மு.க-வினருக்கும் இடையே மோதல் ஏற்படும் அளவுக்குக் கொடி விவகாரம் போனது. அங்கு சென்ற வடுவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, நிலைமையைச் சமாளிக்கும் முயற்சியாக, தினகரன் அணியின் கொடியை இறக்கிவிட்டு அ.தி.மு.க கொடியை ஏற்றினார். அதனால், இன்ஸ்பெக்டர் ஜெயந்திமீது தினகரன் ஆதரவாளர்கள் திருவாரூர் எஸ்.பி மயில்வாகனத்திடம் புகார் அளித்தனர். மன்னார்குடி 10-வது வார்டில் அ.தி.மு.க கொடிக்கம்பம் உடைக்கப்பட்டதாக மூன்று பேர்மீது வார்டு செயலாளர் நாராயணன் புகார் அளித்துள்ளார்.

தினகரன் அணியின் மன்னார்குடி நகரச் செயலாளர் ஆனந்த்ராஜ், “எங்கள் ஆதரவாளர்கள்மீது பொய் வழக்குப் போட்டுள்ளனர். போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டால், ‘நாங்கள் வெறும் அம்புதான். அமைச்சரிடமிருந்து உத்தரவு வருகிறது’ என்கிறார்கள்” என்றார். அமைச்சர் ஆர்.காமராஜின் மைத்துனர் ஆர்.ஜி.குமார், “பறந்துகொண்டிருக்கும் அ.தி.மு.க கொடியை இறக்கிவிட்டு வேறு கொடியை ஏற்றினால், அ.தி.மு.க-வினர் பார்த்துக்கொண்டிருக்க மாட்டார்கள்” என்றார்.

இது எம்.ஜி.ஆருக்கு வந்த சோதனை.

- கே.குணசீலன்