ஜனாதிபதியின் ஒற்றைக் கையெழுத்தால் 20 எம்.எல்.ஏ-க்களை இழந்திருக்கிறது, டெல்லியை ஆளும் அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி. ‘ஆதாயம் தரும் பதவி வகித்தார்கள்’ என்பதைச் சொல்லி இந்தப் பதவிநீக்கத்தை நியாயப்படுத்தினாலும், நடந்த சம்பவங்களைப் பார்த்தால் சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியாது.

பி.ஜே.பி-க்கு நெருக்கமானவராகக் கருதப்படும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி, தான் ஓய்வுபெறுவதற்கு மூன்று நாள்களுக்கு முன்பாக இந்தப் ‘பதவிநீக்கப் பரிந்துரை’யை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பிவைக்கிறார். அது ஜனவரி 19-ம் தேதி, வெள்ளிக்கிழமை. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை எதிர்த்து, உடனடியாக எம்.எல்.ஏ-க்கள் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படுகிறது. அது அவசர வழக்காக ஜனவரி 22-ம் தேதி திங்கள்கிழமை விசாரிக்கப்படும் என்ற நிலையில், அவசரமாக அடுத்தடுத்து நிகழ்வுகள் நடந்தேறுகின்றன. அதற்குள் ஏதும் ஆகிவிடக்கூடாது என்பதற்காக, மறுநாளே ஜனாதிபதியைச் சந்திக்க நேரம் கேட்கிறார்கள், பதவியை இழந்த எம்.எல்.ஏ-க்கள். ஆனால், அவர்களுக்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. ஜனவரி 21-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை, பதவிநீக்கத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கிறார். அந்த ஞாயிற்றுக்கிழமையிலும் பிஸியாக வேலை பார்த்து, உடனடியாக மத்திய சட்ட அமைச்சகம் இதற்கான அறிவிப்பாணையை வெளியிடுகிறது. இதைத் தொடர்ந்து 20 எம்.எல்.ஏ-க்களும் பதவி இழக்கிறார்கள்.

‘நீதிமன்றத்தில் போட்டிருக்கும் வழக்கின் முடிவுக்காகக் காத்திருக்காமல், அந்த எம்.எல்.ஏ-க்கள் தன்னை நேரில் சந்தித்து தங்கள் தரப்பைச் சொல்ல நேரம் தராமல், ஜனாதிபதி இப்படி அவசர கதியில் முடிவெடுத்தது சரியா’ என்ற கேள்வியைத்தான் எதிர்க்கட்சிகள் கேட்கின்றன.

‘அப்படி என்ன தவற்றை அவர்கள் செய்தார்கள்’ என்று கேட்டால், ‘‘ஆமாம்! அவர்கள் தவறு செய்திருக்கிறார்கள். ஆனால், அதற்குக் கொடுக்கப்பட்ட தண்டனையானது இயற்கை நீதிப்படி இல்லை’’ என்கிறார்கள் சட்ட நிபுணர்கள்.

ஒரு மாநிலத்தின் மொத்த எம்.எல்.ஏ-க்களில் 15 சதவிகிதம் பேரை அமைச்சர்கள் ஆக்கலாம். டெல்லி போன்ற சிறிய மாநிலங்களில் இது 10 சதவிகிதம்தான். 70 எம்.எல்.ஏ-க்களைக் கொண்ட டெல்லியில் முதல்வருடன் சேர்த்து ஏழு அமைச்சர்கள் மட்டுமே இருக்க முடியும். கட்சியில் நிறைய பேர் பதவிக்கு ஆசைப்படும்போது, அவர்களைத் திருப்திப்படுத்த வேண்டியது ஆட்சியாளர்களின் கடமையாகிறது. இதற்குக் கண்டுபிடிக்கப்பட்ட குறுக்கு வழிதான், ‘நாடாளுமன்றச் செயலாளர்’ என்ற பதவி. அமைச்சருக்கு இணையான பதவி என்பதால், பந்தாவுக்கும் அதிகாரத்துக்கும் குறைவிருக்காது.

டெல்லி மாநிலத்தில் நாடாளுமன்றச் செயலாளர் நியமனம் தொடர்பாக சட்டங்கள் ஏதுமில்லை. ஆனால், டெல்லியை ஏற்கெனவே ஆண்ட பி.ஜே.பி-யைச் சேர்ந்த சாஹிப் சிங் வர்மா, காங்கிரஸின் ஷீலா தீட்சித் ஆகிய இருவருமே நாடாளுமன்றச் செயலாளரை நியமித்திருந்தார்கள். அந்த நியமனங்களுக்குப் பிரச்னை ஏதும் வந்ததில்லை. இதை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு 2015 மார்ச் 13-ம் தேதி 21 ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ-க்களை நாடாளுமன்றச் செயலாளர்களாக நியமித்தார், முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால். ‘ஆதாயம் தரும் பதவி’ என்ற சட்டச் சிக்கல் வந்துவிடக்கூடாது என்பதற்காக கவனமாக விதிகள் வகுக்கப்பட்டன. இதற்கென தனியாக சம்பளமோ, படிகளோ கிடையாது. இவர்களுக்குத் தனி அலுவலகமும் கிடையாது; அமைச்சர்களின் அலுவலகங்களில் இருந்தபடி பணியாற்றுவார்கள். பிரத்யேக அரசு வாகனம் கிடையாது; தங்கள் அலுவல் காரணமான பயணங்களுக்கு மட்டும் அரசு வாகனங்களைப் பயன்படுத்தலாம்.

ஆனாலும், பிரசாந்த் படேல் என்ற வழக்கறிஞர் உருவத்தில் சிக்கல் வந்தது. ‘இந்த 21 எம்.எல்.ஏ-க்களும் ஆதாயம் தரும் இரட்டைப்பதவி வகிக்கிறார்கள். எனவே, இவர்களைத் தகுதிநீக்கம் செய்ய வேண்டும்’ 2015 ஜூன் 19-ம் தேதி ஜனாதிபதியிடம் புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து அவசரமாக டெல்லி சட்டமன்றத்தில் ஒரு மசோதா கொண்டுவந்து, இந்த 21 பேரின் நாடாளுமன்றச் செயலாளர் பதவிக்குச் சட்ட அங்கீகாரம் கொடுக்க முயன்றார் கெஜ்ரிவால். ஆனால், அந்த மசோதாவுக்கு ஒப்புதல் தர ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மறுத்துவிட்டார். இதைத் தொடர்ந்து, விவகாரம் டெல்லி உயர் நீதிமன்றத்துக்குப் போனது. ‘இந்த நியமனம் செல்லாது’ என நீதிமன்றம் அறிவித்தது.

‘சரி, பிரச்னை முடிந்தது’ என ஆம் ஆத்மி கட்சி நினைத்தபோது, அடுத்த பிரச்னை வந்தது. ‘2015 மார்ச் 13-ம் தேதி முதல் 2016 செப்டம்பர் 8-ம் தேதி வரை இவர்கள் ஆதாயம் தரும் இரட்டைப் பதவி வகித்தார்கள். எனவே, இவர்களை எம்.எல்.ஏ பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்ய வேண்டும்’ என பிரசாந்த் படேல் மீண்டும் ஜனாதிபதியிடம் புகார் கொடுத்தார். அதை அவர் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பினார். தேர்தல் ஆணையம் இந்த எம்.எல்.ஏ-க்களிடம் விளக்கம் கேட்டது. எழுத்துபூர்வமாக பதிலளித்த அவர்கள், நேரில் விளக்கம் தர வாய்ப்பு கேட்டார்கள். தேர்தல் ஆணையம் கிட்டத்தட்ட நீதிமன்றம் போன்றது என்பதால், அப்படி வாய்ப்பு வழங்கி, இவர்களின் வழக்கறிஞர் களுடைய வாதங்களைக் கேட்டிருக்கலாம். ஆனால், அப்படிச் செய்யவில்லை. இந்த நாடாளுமன்றச் செயலாளர்கள், தங்கள் பணியைச் செய்ய ஆன அரசுமுறைச் செலவுகள் குறித்து டெல்லி தலைமைச் செயலாளர் அளித்த அறிக்கையை வைத்துத் தேர்தல் ஆணையம் முடிவெடுத்துவிட்டது. ஜனாதிபதியும் ஒப்புதல் தந்துவிட்டார். ஏற்கெனவே பஞ்சாப் தேர்தலில் போட்டியிட எம்.எல்.ஏ ஒருவர் ராஜினாமா செய்துவிட்டதால், அவர் தவிர்த்த மற்ற 20 பேரும் பதவி இழந்துள்ளனர்.

‘நீதிமன்றத்தில் இதை எதிர்த்து வழக்குப் போட முடியும்’ என்பதே ஆம் ஆத்மி கட்சிக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை. இந்த 20 பேரை இழந்தாலும், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு 46 எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். அதனால், ஆட்சிக்கு ஆபத்து இல்லை. ஆனால், இந்த 20 இடங்களுக்கும் இடைத் தேர்தல் நடந்து முடிவுகள் வரும்போது, காட்சி மாறலாம். கெஜ்ரிவால்மீது அதிருப்தியில் இருக்கும் எம்.எல்.ஏ கபில் மிஸ்ரா, ‘‘இடைத் தேர்தலுக்குப் பிறகு டெல்லியில் ஆட்சிமாற்றம் நிகழும்’’ என இப்போதே சொல்கிறார்.

‘ஆதாயம் தரும் பதவி’கள் பலருக்கு இப்படித்தான் ஆதாயம் தராமல் போகின்றன.

- தி.முருகன்
ஓவியம்: ஹாசிப்கான்

எல்லா மாநிலங்களிலும் இது பிரச்னை!

ஆம் ஆத்மி அரசு மட்டும்தான் இந்தத் தவற்றைச் செய்ததா? இல்லை!

2015 ஜூலையில் ஹரியானாவை ஆளும் பி.ஜே.பி அரசு, நான்கு எம்.எல்.ஏ-க்களைத் தலைமை நாடாளுமன்றச் செயலாளர்களாக நியமித்தது. பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம், ‘இந்த நியமனம் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது’ என 2017 ஜூலையில் அறிவித்தது.

2012-ம் ஆண்டு பஞ்சாப்பில் அகாலி தளம் - பி.ஜே.பி கூட்டணி அரசு, 25 பேரை தலைமை நாடாளுமன்றச் செயலாளர்களாக நியமித்தது. 2016 ஜூலையில், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் இந்த நியமனங்களை ரத்து செய்தது.

கர்நாடகாவில் காங்கிரஸ் அரசால் ஒன்பது எம்.எல்.ஏ-க்களும் ஒரு எம்.எல்.சி-யும் 2015 நவம்பரில் நாடாளுமன்றச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டார்கள். மாநில இணை அமைச்சர்களுக்கு இணையான சம்பளம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த நியமனத்தை எதிர்த்த வழக்கு, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

ராஜஸ்தான் பி.ஜே.பி அரசு, 2017 அக்டோபரில் 10 எம்.எல்.ஏ-க்களை நாடாளுமன்றச் செயலாளர்களாக நியமித்தது. அமைச்சர்களுக்கு இணையான சம்பளத்தையும் சலுகைகளையும் இவர்கள் பெறுகிறார்கள். இதை எதிர்த்த வழக்கு இப்போது ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

மேற்கு வங்காளத்தில் 2013 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் 24 எம்.எல்.ஏ-க்கள் நாடாளுமன்றச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டனர். ‘இந்த நியமனம் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது’ என்று கல்கத்தா உயர் நீதிமன்றம் 2015 ஜூனில் தீர்ப்பளித்தது. மேற்கு வங்காள அரசின் மேல்முறையீடு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

தெலங்கானா அரசு 2014 டிசம்பரில் ஆறு எம்.எல்.ஏ-க்களை நாடாளுமன்றச் செயலாளர்களாக நியமித்தது. கேபினெட் அமைச்சர் அந்தஸ்தில் அவர்கள் செயல்பட்டனர். 2016 டிசம்பரில் இந்த நியமனத்தை ஹைதராபாத் உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

இதில் எந்த விவகாரத்திலும், அந்த எம்.எல்.ஏ-க்கள் யாரும் தகுதிநீக்கம் செய்யப்படவில்லை.