Published:Updated:

சிவக்குமாரை நெருக்கும் ஆணையம்... ஐந்தாவது முறையாக சம்மன்!

சிவக்குமாரை நெருக்கும் ஆணையம்... ஐந்தாவது முறையாக சம்மன்!
சிவக்குமாரை நெருக்கும் ஆணையம்... ஐந்தாவது முறையாக சம்மன்!

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்திவரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் வரும் வெள்ளிக்கிழமை அன்று ஆஜராகுமாறு ஜெயலலிதாவின் மருத்துவரும் சசிகலாவின் உறவினருமான சிவக்குமாருக்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.

இதே ஆணையத்தில் இதற்கு முன்பு நான்குமுறை ஆஜராகியுள்ளார் சிவக்குமார். ஜெயலலிதாவுக்கு கடைசிக் காலங்களில் சிவக்குமார் மேற்பார்வையில்தான் மருத்துவம் செய்யப்பட்டது.மேலும், ஜெயலலிதாவை ஏற்றவந்த ஆம்புலன்ஸில் சிவக்குமாரும் உடன் இருந்தார். இதுகுறித்து ஏற்கெனவே ஆணையத்தில் சாட்சியம் அளித்துள்ளார் சிவக்குமார். ஜெயலலிதா மருத்துவமனையில் பேசியதாக சிவக்குமார் தரப்பில் ஓர் ஆடியோ சமர்பிக்கப்பட்டது. அந்த ஆடியோவில் பேசியது மருத்துவர் அர்ச்சனா என்று சிவக்குமார் தரப்பில் தெரிவிக்கபட்டது. ஆனால், அது அர்ச்சனாவின் குரல் அல்ல என்று ஆணையத்தில் சிலர் தெரிவித்திருந்தனர். குறுக்கு விசாரணையில் அது, தன் குரல்தான் என்று அர்ச்சனா ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்நிலையில், மீண்டும் குறுக்கு விசாரணைக்கு சிவக்குமாரை அழைத்துள்ளது ஆணையம். ஆஜராகும்போது ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள், மருந்துகள் தொடர்பான விவரங்களையும் கொண்டு வரச் சொல்லி அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிவக்குமார் அளிக்கும் வாக்குமூலம் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையில் முக்கியப் பங்கு வகிப்பதால் அவருக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துவருகிறது ஆறுமுகசாமி ஆணையம். சிவக்குமார் ஆஜராகும் அன்று அப்போலோ மருத்துவர்கள் மீரா, தவபழனி மற்றும் அப்போலோ சட்டப்பிரிவு மேலாளர் மோகன் குமார் உள்ளிட்டவர்களும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 
 

அடுத்த கட்டுரைக்கு