Published:Updated:

``பதவியோ எம்.எல்.ஏ... பண்ணியதோ மோசடி” - சிக்கலில் சிக்கிய தி.நகர் சத்யா!

மூன்று வாக்காளர் அடையாள அட்டையுடன் வலம் வரும் அ.தி.மு.க எம்.எல்.ஏ குறித்த சர்ச்சை இப்போது வெடித்துள்ளது. ஆந்திர மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் தி.நகர் எம்.எல்.ஏ சத்யா. இவர், ஆந்திராவில் ஒரு வாக்காளர் அடையாள அட்டையும் சென்னையில் இரண்டு வாக்காளர் அடையாள அட்டையும் பயன்படுத்தி வந்திருப்பது தெரிய வந்துள்ளது .

இதுகுறித்து சட்டப்பஞ்சாயத்து அமைப்பு விசாரித்து ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளது. தி.நகர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரான சத்யா மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து சட்டப்பஞ்சாயத்து அமைப்பினர், ``எம் எல்.ஏ-வுக்கு நெருக்கமான ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் நாங்கள் தகவல் உரிமைச் சட்டத்தில் இந்த விவரங்களைக் கேட்டோம். அந்தப் பதிலில், சத்யா ஆந்திராவிலும் சென்னையிலும் வாக்காளர் அடையாள அட்டை பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது.

அவர் 2011 - 2016-ல்  நடைபெற்ற  உள்ளாட்சித் தேர்தலில் சென்னையில் உள்ள ஒரு முகவரியைக் கொடுத்து மனுத்தாக்கல் செய்துள்ளார். அதன் பிறகு நடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலிலும்  இதே முகவரியைக் கொடுத்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார்... அதில் வெற்றி பெற்று தற்போது சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். ஆனால், அவரது பெயரில் மற்றொரு வாக்களார் அட்டையும் சென்னையில் உள்ளது. அந்த முகவரியை எங்களால் இப்போது பெற முடியவில்லை.

ஆக, மூன்று வாக்களார் அட்டையைச் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் பயன்படுத்தி வந்துள்ளது தெரியவந்துள்ளது. மக்கள் பிரதிநிதியாக மூன்று வாக்காளர் அடையாள அட்டை பயன்படுத்தி ஏமாற்றியது மிகப்பெரும் தவறு. அவருடைய பதவியை ரத்து செய்யக்கோரி மத்திய தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு புகார் அனுப்பியுள்ளோம். விரைவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம்" என்கின்றனர். சட்டபஞ்சாயத்து இயக்கம் இதுகுறித்து தகவல் உரிமை சட்டத்தின் கீழ் ஏராளமான தகவல்களைப் பெற்றுள்ளது. இந்த ஆவணங்கள் அனைத்தையும் நாளை ஊடகங்களுக்கு வெளியிட உள்ளார்கள். இந்த விவகாரம் அ.தி.மு.க வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.