‘‘நான் தலைவனாக இங்கே வரவில்லை. நீங்கள் தான் நாளைய தலைவர்கள். அரசியல்வாதிகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். உதாரணமாக, உங்களை மாதிரி இருக்கலாம். என்னுடன் அரசியலுக்கு வாருங்கள் என்று கூப்பிடவில்லை. ஆனால், அரசியலுக்கு வாருங்கள்’’ என்று கமல்ஹாசன் அறைகூவல் விடுத்தபோது ஒரே ஆரவாரம்.

‘மக்களைக் களத்தில் சந்திக்க, கலாம் இல்லத்திலிருந்து பிப்ரவரி 21-ம் தேதி பயணம் கிளம்புகிறேன்’ என்று கமல் ஆனந்த விகடனில் எழுதிவரும் தொடரில் சொல்லியிருந்தார். இந்தப் பயணத்துக்கு ‘நாளை நமதே’ எனப் பெயரையும் அறிவித்திருந்தார். அதற்கு முன்னதாகவே, ஜனவரி 27-ம் தேதி சனிக்கிழமை சென்னையிலுள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் திடீரென மாணவர்களுடன் கமல் நிகழ்த்திய உரையாடல், கிட்டத்தட்ட அவரின் முதல் அரசியல் மேடையாக ஆகிவிட்டது. ‘சங்கமம் 2.0’ என்ற பெயரில் நடந்த அந்த விழாவில், சுமார் 5,000 பொறியியல் மாணவர்களைச் சந்தித்து கமல் கலந்துரையாடினார்.

அரசியலுக்கு வருவதாக அறிவித்த பிறகு, பல சேவை அமைப்புகளுடன் கமல் தொடர்ந்து பேசிவருகிறார். உயர் கல்வியைப் பெறமுடியாத சூழ்நிலையில் இருக்கும் ஏழை மாணவர்களுக்குக் கல்வியில் ஆரம்பித்து, வேலைவாய்ப்பு வரை பல தேவைகளைச் செய்துதரும் ‘மாற்றம் அறக்கட்டளை’யும் அதில் ஒன்று. ‘மாற்றம்’ அமைப்பு மூலம் படித்துவரும் கல்லூரி மாணவர்கள் 482 பேர் பங்கேற்ற ‘சங்கமம் 2.0’ நிகழ்ச்சி, சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடந்தது. அதற்கான அழைப்பிதழில் கமல் பெயர் இல்லை. அந்த நிகழ்ச்சி பற்றி, அதன் நிர்வாகிகள் கமலிடம் சொன்னபோது, ‘‘ஓகே. நான் வந்து மாணவர்களிடம் பேசுகிறேன்’’ என ஒப்புக்கொண்டார். கமல் வருவது தெரிந்ததும், சாய்ராம் கல்லூரி நிர்வாகம், தங்கள் கல்லூரிகளில் படிக்கும் மொத்த மாணவர்களையும் அரங்குக்கு அழைத்துவந்துவிட்டது. சுமார் 5,000 பேர் அமரும் பிரமாண்ட அரங்கு நிறைந்தி ருந்தது. கமல் வருவது கடைசி நிமிடத்தில் தெரிந்தாலும், அவரிடம் அரசியல் கேள்விகளை எழுப்ப மாணவர்கள் தயாராக இருந்தனர்.

கமல் வருவதற்குமுன், அவரின் அரசியல் பயணம் குறித்த ‘நாளை நமதே’ வீடியோ மீண்டும் மீண்டும் ஒளிபரப்பப்பட்டது. ஆரவாரம் அதிகரித்துக்கொண்டே இருக்க, திடீரென அரங்குகளின் விளக்குகள் அணைய, ஒளிவட்டத்தின் (ஸ்பாட் லைட்) வழியே மேடையை வந்தடைந்தார் கமல். இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் திரும்பி, கம்பீரத்துடன் மாணவர்களை நோக்கிக் கையசைத்தார். கல்லூரி நிர்வாகியின் வரவேற்புக்குப் பிறகு பேசிய கமல், தனக்குள் இருக்கும் கோபக்கார இளைஞனை மாணவர்கள் மத்தியில் வெளிப்படுத்தினார்.

‘மாணவர்கள்தான் தலைவர்கள். நீங்கள் இல்லாமல் எங்களால் ஏதும் செய்யமுடியாது’ என்று அனைவரையும் உள்ளடக்கிய இன்க்ளூசிவ் அப்ரோச் கமலின் பேச்சில் வெளிப்பட்டது. தேர்ந்த தலைமைப் பண்பு உடையவராக அவர் தன்னை முன்னிறுத்திய விதமும் எல்லோரையும் கவர்ந்தது. ‘நான் எதற்காக இங்கு வந்தேன்’ என்று அவர் கூறிய கருத்துகளும் முக்கியமானவையே. ‘‘நீங்கள் ஒதுங்கியிருந்தது போதும், வந்து மாற்றுங்கள். ‘நாடு கெட்டுப்போச்சு, படிப்பு கெட்டுப்போச்சு, ரோடு கெட்டுப்போச்சு’னு சொன்னா போதாது. அதையெல்லாம் சரிசெய்ய நீங்க என்ன செஞ்சீங்கனு பாக்கணும். நீங்கள் பங்கேற்காததால் பங்கமான விஷயங்களை, மாற்ற வாருங்கள். இங்கு நான் விதைத்த கருத்துகளைப் பற்றி நீங்கள் பேச ஆரம்பித்தால், விவசாயம் தொடங்கிவிடும்’’ என அடுத்தடுத்து அவர் பேசியவை எல்லாமே பன்ச் தருணங்களாகவே இருந்தன.

‘‘மாணவர்கள் அரசியலைப் பற்றிப் படிக்க வேண்டும், வாக்குகளை விற்கக்கூடாது. எல்லாவற்றையும் மாற்றவேண்டும். அதற்கு 2019, 2021 வரை காத்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. இப்போதே வாருங்கள்’’ என்றார் கமல்.

சில நிமிடங்களில் தன் உரையை ரத்தினச் சுருக்கமாக முடித்து, ‘‘என் அரசியல் பயணத்தைப் பற்றிக் கேள்விகள் கேட்கலாம்’’ என்று கமல் சொன்னது, அனைவருக்கும் கூடுதல் வியப்பாக இருந்தது. ‘‘இந்தியா மற்றும் தமிழகத்துக்கு உங்கள் திட்டங்கள் என்ன?’’ என்ற கேள்வி எழுந்ததும் கமல் சிரித்தார். ‘‘உங்கள் திட்டங்களைக் கூறுங்கள். அவற்றை அப்படியே காப்பியடித்துக் கொள்கிறேன். நல்ல சிந்தனைகள் உங்களிடமிருந்து வர வேண்டும். தமிழகம்தான் என் வீடு. அதற்குத்தான் என் திட்டங்கள். அதற்குச் செய்ய வேண்டியதைச் செய்தால், இந்தியா தானாக மாறும். ‘கல்விதான் வறுமையை ஒழிக்கும்’ என்றுகூறி தங்கள் வறுமையைப் போக்கிக் கொண்டனர் ஆட்சியாளர்கள். ‘வருமுன் காப்போம்’ என்பதே சிறந்த வழி. அது மாணவர்கள் கையில்தான் உள்ளது’’ என்று பதில் சொன்னார் கமல்.

‘‘அரசியலுக்கு வரமாட்டேன் என்று இருந்த உங்களை, எது தூண்டி இப்போது அரசியலுக்கு வந்தீர்கள்?’’ என்ற கேள்வியை ரசித்தார் கமல். ‘‘சில மஹானுபாவர்கள் என்னை வரவழைத்து விட்டார்கள். ஜாதி, மத, இனப் பாகுபாடு களைக்கொண்டே இங்கு அரசியல் நடத்தப் படுகிறது’’ என்றார். ‘‘உங்கள் படங்கள் பல சர்ச்சைகளில் சிக்கியது ஏன்?’’ என்ற கேள்விக்கு அவரிடமிருந்து கோபத்துடன் வந்தது பதில். ‘‘சர்ச்சைகள் எதுவும் படங்களில் இல்லை. அரசியல்வாதிகளால் சர்ச்சை என்ற வண்டியில் தான் பயணிக்க முடியும். என் படங்களுக்கான சர்ச்சைகள் உருவாக்கப்பட்டவைகளே’’ என்று அரசியல்வாதிகளையும், ஆட்சியாளர்களையும் சாடினார்.

‘‘உங்களுக்குப் பிடித்த அரசியல் தலைவர்கள் யார்?’’ என்று ஒரு கேள்வி எழுந்தது, ‘‘காந்தி, அம்பேத்கர், காமராஜர், பெரியார், எம்.ஜி.ஆர் ஆகியோர் தவிர கலைஞரை எனக்கு மிகவும் பிடிக்கும். இன்னும் நிறைய நல்ல தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பெயர்களை இங்கு சொன்னால், ‘அரசியல் ஆதாயம் தேடுகிறேன்’ என்பார்கள். பிடித்தத் தலைவர்கள் எனக் கேட்ட தால் சொல்கிறேன்’’ என்றார் வெளிப்படையாக.

17 நிமிடங்களில் கமலின் உரை முடிந்து விட்டாலும், அது மாணவர்களைப் பல மணி நேரம் யோசிக்க வைத்திருக்கும். ஆயிரக்கணக்கில் மாணவர்கள் இருக்கும் ஓர் அரங்கத்தில், தனது தனிப்பட்ட அரசியலைப் பற்றி அவர் எதுவும் பேசவில்லை. சமூகத்தின் சூழலையும், அரசியலின் நிலையையும் சாதுர்யமாக தன் பேச்சில் கலந்து கொடுத்தார்.

‘அப்துல் கலாம் நினைவு இல்லத்திலிருந்து தனது அரசியல் பயணம் தொடங்கும்’ என்று கூறிய கமல்ஹாசன், கலாம் போலவே மாணவர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். கமலின் அரசியல் வாகனம், அவர் சொன்ன நேரத்துக்கு முன்பாகவே கிளம்பிவிட்டது என்பதுதான் நிஜம்.

- அலாவுதின் ஹுசைன்
படங்கள்: தே.அசோக்குமார்