Published:Updated:

ஒன்றல்ல; மூன்று வாக்காளர் அட்டைகள்! சிக்கிக்கொண்ட அ.தி.மு.க எம்.எல்.ஏ

முதலமைச்சர், அமைச்சர்கள், அ.தி.மு.க-வைச் சேர்ந்த முக்கியப் பிரதிநிதிகள் ஊழல் புகாரில் சிக்கியுள்ள நிலையில், அதே கட்சியைச் சேர்ந்த எம்.எல் .ஏ ஒருவர்  மூன்று வாக்காளர் அடையாள அட்டையைப் பயன்படுத்தியிருப்பது அம்பலமாகியுள்ளது. 

ஒன்றல்ல; மூன்று வாக்காளர் அட்டைகள்! சிக்கிக்கொண்ட அ.தி.மு.க எம்.எல்.ஏ

இதுதொடர்பாகப் பேசிய சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் மாநிலத் தலைவர் சிவ இளங்கோ,``அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர் சத்யாநாராயணன். கோடம்பாக்கம் பகுதியில் வசித்துவருகிறார். தி.நகர் சட்டமன்ற உறுப்பினராக உள்ள அவர், மூன்று வாக்காளர் அடையாள  அட்டைகள் வைத்துள்ளார்.  கோடம்பாக்கம் முகவரியை வைத்து வாக்காளர்  அடையாள அட்டை எண் `lmg 4367306’ அட்டையை வாங்கியிருக்கிறார். . இந்த அடையாள அட்டையை வைத்தே 2011- 2016 -ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் 130 -வது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.  அதேபோன்று, 2016 -ம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், இதே முகவரியை வைத்து  தியாகராய நகரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ஒன்றல்ல; மூன்று வாக்காளர் அட்டைகள்! சிக்கிக்கொண்ட அ.தி.மு.க எம்.எல்.ஏ

இதைத் தொடர்ந்து,  ஆந்திராவிலும் அவர்  `aym2119387’ என்ற எண்கொண்ட வாக்காளர்  அடையாள அட்டை வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், திருப்பதி தொகுதியில், பத்மாவதி என்ற இடத்தில் வீடு வாங்கியுள்ளார். இந்த முகவரியை வைத்து அங்கும் வாக்காளர் அடையாள அட்டை வாங்கியுள்ளார். இந்த நிலையில், முகவரி இல்லாமல் மற்றொரு வாக்காளர் அடையாள அட்டை வாங்கியுள்ளார். மக்கள் பிரிதிநிதித்துவ சட்டபடி, இது குற்றமாகும். இதுகுறித்து மத்திய தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் எழுதியுள்ளோம். மேலும், அவருடைய பதவியை ரத்துசெய்யவும், ஆறு மாத சிறை தண்டனை அளிக்கவும் கோரியுள்ளோம்” என்றார்.

அ.தி.மு.க எம்.எல்.ஏ ஒருவர் மூன்று வாக்காளர் அடையாள அட்டை பயன்படுத்திவருவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.