Published:Updated:

`உயர்ந்த தத்துவங்களை நோக்கிய தீர்ப்பு!’ - மு.க.ஸ்டாலின்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
`உயர்ந்த தத்துவங்களை நோக்கிய தீர்ப்பு!’ - மு.க.ஸ்டாலின்
`உயர்ந்த தத்துவங்களை நோக்கிய தீர்ப்பு!’ - மு.க.ஸ்டாலின்

`உயர்ந்த தத்துவங்களை நோக்கிய தீர்ப்பு!’ - மு.க.ஸ்டாலின்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியது. இந்தத் தீர்ப்புக்கு, `உயர்ந்த தத்துவங்களை நோக்கிய பயணத்தில் இத்தீர்ப்பு மைல்கல்' எனத் தி.மு.க தலைவர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார். 

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுக்கும் உட்பட்ட பெண்களை அனுமதிக்கலாம் எனத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு அளித்து உத்தரவிட்டது. முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தீர்ப்புக்கு, பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்று தங்களது கருத்தைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தி.மு.க தலைவர் ஸ்டாலினும் தீர்ப்பு குறித்து `உயர்ந்த தத்துவங்களை நோக்கிய பயணத்தில் இத்தீர்ப்பு மைல்கல்' என வரவேற்றுள்ளார். 

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின், தனது ட்விட்டர் பக்கத்தில், 'ஆணும் பெண்ணும் சரிநிகர் சமம்' என்பதை நிரூபிக்கும் வகையில் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது. சமூக நீதி; பாலின சமத்துவம்; பெண் விடுதலை ஆகிய உயர்ந்த தத்துவங்களை நோக்கிய பயணத்தில் இத்தீர்ப்பு மைல்கல்' எனப் பதிவிட்டுள்ளார். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு